கலைஞரின் “நம்ம குடும்பம்”
font-weight: bold;"> மதுரை ஆர்.சி.வியில் சன் குழும சேனலகள் நாளை முதல் ஓளிபரப்பு தாத்தாவும் பேரன்களூம் ஓன்று சேர்ந்துவிட்டார்கள்.. ஆனால் தாத்தாவும், அவரது மகனும், சொன்னதின் பேரில் அவர்களுக்கு போட்டியாய் தொழிலில் இறக்கி விடப்பட்டவர்கள் என்னாவார்கள்..? ராஜ்டிவி. இவர்களை நம்பி சன்னுக்கு எதிராய் தங்களுடய சேட்டிலைட்டில் உடனடியாய் இடம் கொடுத்து, இவர்களுக்கு வேண்டியதெல்லாம் செய்தனர். அவர்களுக்கு தேவையான நியூஸ் சேனலையும், லைவ் அப்லிங்கும், அவர்களுக்கு கிடைத்ததில், ஓரு வகையில் அவர்களுக்கு ஆதாயமே.. இனி அவர்களது நிலமை என்னவாகும்? கலைஞர் தொலைக்காட்சி சன் டிவியை எதிர்பதற்காகவே, மாறன் சகோதரர்களால் துரோகி பட்டம் கட்டி வெளியேற்றபட்ட, சரத் ரெட்டியின் தலைமையில் ஆரம்பிக்க பட்டது கலைஞர் டிவி.. ஆரம்பித்த ஓரு ஆண்டில் சன் டிவிக்கு அடுத்த இடத்தில் வர ஆரம்பித்து விட்டது, கலைஞரை தொடர்ந்து, இசையருவி, கலைஞர் செய்திகள் என்று சேனல்களை ஆரம்பித்துவிட்டார்கள். இவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. சரத் ரெட்டியை தூக்கி விட்டு, சன் அத்தனை சேனல்களை தங்கள் வசம் வைத்து கொண்டால் கூட சன்னுக்கு போட்டியாய் ஓரு சேனலை அவர...