Posts

Showing posts with the label இயக்கம்

கொத்து பரோட்டா-17/08/14

பெரிய பட்ஜெட், பெரிய நடிகர்கள், பெரிய இயக்குனர் என்ற டேக்குடன் அஞ்சான் வருவதால் உடன் எந்த படமும் வராது என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில் பார்த்திபன் ராதாகிருஷ்ணனின் "கதை திரைக்கதை வசனம், இயக்கம்" படமும், பத்திரிக்கையாளர் முத்துராமலிங்கத்தின் சிநேகாவின் காதலர்கள்" படமும் உடன் வெளியாகி உள்ளது ஆச்சர்யமில்லை. ஏனென்றால் ஒரு மாதத்திற்கு முன்பு பார்த்திபன் சார்.. மற்றும் முத்து ராமலிங்கம் இருவரையும் சந்தித்த போது  இருவருமே உறுதியாய் இருந்தார்கள். 25 வருடங்களுக்கு முன் இதே போல புதிய பாதை படத்தை ரெண்டு மூன்று படங்களுக்கு இடையே வெளியிட்டு வெற்றி பெற்ற அனுபவத்தை சொன்னார். மீண்டும் அதே கான்செப்டோடு "அஞ்சானுக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் என் படத்துக்கு வாங்க என்று விளம்பரம் செய்து இன்று வெற்றி பெற்று விட்டார் என்றே சொல்ல வேண்டும். இன்னும் நான் படம் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு படத்தை பற்றி சொல்லுகிறேன் வாழ்த்துகள் பார்த்திபன் சார்.  முத்துராமலிங்கம் சார். @@@@@@@@@@@@@@@@@@@@@@