Posts

Showing posts with the label sathyam

சாப்பாட்டுக்கடை - ID@ Sathyam

Image
நல்ல தியேட்டரில் சினிமா பார்க்க வேண்டுமென்றால் சென்னைவாசிகளின் முதல் ஆப்ஷன் சத்யமாய்த் தான் இருக்கும். சென்னையின் முக்கிய டெஸ்டினேஷன்களில் ஒன்றாக விளங்கும் இந்த மல்ட்டிப்ளெக்ஸில் முதல் மாடியில் ஒரு வெஜிட்டேரியன் ரெஸ்டாரண்ட் இருக்கிறது. பெயர் ஐடி.  நிர்வாகத்தினர் பெயருக்கான பாண்ட் டிசைனிலேயே நம்மை கவர்ந்து விடுவார்கள். உள்ளே சென்றதும் அருமையான ஆம்பியன்ஸ். நடுவே சமையல் இடம். அதை சுற்றி பாரில் உள்ளது போல ஒரு சீட்டிங் அரேஞ்ச்மெண்ட். அவசர அடியாய் தனியாய் என்னைப் போன்றவர்களுக்காக அமைத்திருப்பார்கள் போலும். தோசைக்கல்லுக்கு முன்னாடியே உட்கார்ந்து சுடசுட சாப்பிடலாம்.

கேஸினோவை வாங்கியது சத்யம்

Image
தமிழ் நாட்டின் பழம் பெரும் திரையரங்குகளில் ஒன்றான கேஸினோ தியேட்டரை நான்கு மாதங்களுக்கு முன் சத்யம் நிர்வாகம் டேக் ஓவர் செய்துவிட்டது. கடந்த சில மாதங்களாகவே அங்கு வரும் தெலுங்கு படங்கள் உட்லான்ஸில் வெளியாகிக் கொண்டிருக்க, தமிழ் வர்ஷன் 3டி ஆங்கில படங்கள் அங்கே வர ஆரம்பித்தது. 3டி படங்களுக்காக சில்வர் ஸ்கிரீன் போடப்பட்டுள்ளது. கீழேயிருக்கும் சீட்டுக்களும் செப்பனிடப்படுகிறது. விரைவில் பழமையும், புதுமையும் கலந்த கேஸினோவை காணலாம் என்று நம்பலாம். எஸ்.கே.

டிக்கெட் இல்லாமல் சினிமா பார்க்க முடியுமா?

அடல்ஸ் ஒன்லி படமானதால் தன் கூட வந்த நண்பனை ஐடி கார்டு இல்லாமல் உள்ளே அனுமதிக்க முடியாது என்று சொல்லிவிட்டதால் தான் வாங்கிய டிக்கெட்டை தியேட்டர் கவுண்டரிலேயே ரிட்டர்ன் செய்ய வந்தான் ஒரு புது தாடி மீசை முளைத்த இளைஞன். தியேட்டர்காரர்கள் “நாங்கள் டிக்கெட் கொடுக்கும் போதே சொல்லித்தானே கொடுத்தோம் நாங்கள் ரிட்டர்ன் எடுக்க முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தார். பையனுக்கோ, அவசரம் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க, அந்த டிக்கெட்டை நான் வாங்கினேன். டிக்கெடை வாங்கி தேதி, மற்றும் சீட் நம்பரை பார்த்துவிட்டு, டிக்கெட்டை சட்டைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு,  வண்டியை பார்க்கிங் போட கிளம்பினேன்.