Posts

Showing posts with the label ஈசா

ஈசா - திரைவிமர்சனம்

Image
  விக்னேஷும், ஏதேதோ செய்து கொண்டுதானிருக்கிறார். வருடத்துக்கு இரண்டு படங்களாவது நடித்து கொண்டுதானிருக்கிறார் ஆனால் ஒன்றும் சொல்லும்படியாய் இருக்க மாட்டேன் என்கிறது. அந்த வரிசையில் ஈசாவும் வந்திருக்கிறது. சுடலைஈசா என்கிற ஒரு அனாதை உப்பளத்தில் வேலை பார்க்கிறான். மணிகட்டில் முட்டை தூக்கும் கம்பியோடு அலைகிறான் தனியனாய் இருக்கும் ஒருவனை கொலை செய்கிறான். கொலை செய்தவனை தன்னுடய் வீட்டிற்கு கொண்டு வந்து தன் மனைவியிடம் காட்ட, அவள் வெறி கொண்டு கையில் ஒரு கத்தியை எடுத்து இறந்தவனை மேலும் குத்துகிறாள். ஈசா ஒரு விதமான எக்ஸ்செண்ட்ரிக் ரியாக்‌ஷனோடு ஓங்காரமாய் ஆரவாரமாய் சிரிக்கிறான். இப்படி ஆரம்பிக்கும் படம் இடைவேளையின் போது கொஞ்சம் ஜெர்க்காகத்தான் செய்கிறது. பின்பு ப்ளாடாகி விழுந்துவிடுகிற்து. விக்னேஷ் அதிக பட்சமாய் இரண்டு பக்கத்திற்கு மேல் வசனம் பேசவில்லை.  தேவையில்லாமல் இவரின் கேரக்டரை பிதாம்கன் விக்ரம் போலவும், காட்டாமல், கோபக்காரனாகவும், காட்டாமல் இரண்டும் கெட்டானாக காட்டியிருப்பதால் அவரின் மேல் எந்தவித உணர்வும் வரமாட்டேன் என்கிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் பேக் வாட்டரில் வாழைமட்ட...