கொத்து பரோட்டா - 13/07/16
பாகுபலி ராஜமெளலி தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டார் இயக்குனர். நான் ஈ மூலம் தமிழ் நாட்டிலும் தன் கால் பதித்தவர். இன்று இந்தியாவெங்கும், ஏன் உலகமெங்கும் தன் தடத்தை பதித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். சரித்திர பின்னணி கொண்ட பேண்டஸி கதை. அதற்கு ஏற்றார்ப் போல பார்த்து பழகிய இளவரசன், நல்ல அரசன், வஞ்சகர்கள், துரோகம், கொலை, பழிவாங்கல் என்ற அரைத்தமாவுதான் ராணா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா பின்பு பிரபாஸ் என வரிசைக்கிரமப்படி நடித்து தள்ளியிருக்கிறார்கள். முதல் பாதியில் எல்லா கேரக்டர்களையும் அறிமுகப்படுத்தி, அவர்களது உறவு முறைகளை சொல்லி, கொஞ்சம் நேரம் காதல், பாட்டெல்லாம் போட்டு, எல்லாம் செட்டில் ஆனப் பிற்பாடு, இரண்டாம் பாதியில் வரும் போர்க் காட்சிகள் படத்தை பட்டாசாக்குகிறது. அனுஷ்காவை இளமையாய் பார்க்க காத்திருந்தவர்கள் எண்ணங்களில் மண்ணை வாரிப் போட்டாலும், அடுத்த பாகத்தில் கலக்குவார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. ராஜமெளலியின் படத்தின் கதைகள் ஏதும் ஆவுட் ஆப் த பாக்ஸாய் இருந்ததில்லை. அதை சிறப்பான வெகுஜன ப்ரசண்டேஷனில் கொடுத்து அசத்திவிடுவார். இதிலும் அதையே பின்பற்றியிருப்பத...