கொத்து பரோட்டா - 01/02/16
க மல் ட்வீட்டருக்கு வந்திருக்கிறார். எல்லாருக்கும் வரும் ப்ரச்சனைப் போலவே ஆரம்ப கால ட்வீட்டர் பழக்கமில்லாமையும், தமிழ் தட்டச்சு ப்ரச்சனையும் அவருக்கு இருக்கிறது. ரெண்டு நாள் முன்னால் வெற்றிமாறன் என்பதற்கு பதிலாய் மணி மாறன் என்று டைப்படித்துவிட்டார். இதாண்டா சாக்கு என்று ஆளாளுக்கு ஓட்ட ஆரம்பிக்க, சில மணி நேரங்கள் கழித்து தன் தவறை உணர்ந்து கீ போர்ட் ப்ரச்சனை என்று புளுகினால் ஏன் என்று கேட்கக்கூட மாட்டார்கள் அப்படியிருந்தும், அது கீ போர்ட் தவறல்ல என் தவறுதான் என்று ஒத்துக் கொண்டு தான் மனுஷன் என்று நிருபித்துவிட்டார். ஆர்மபக் காலங்களில் இருந்து இன்று வரை விடாமல் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு எழுதுவது ஸ்டைல் என்று எழுதுபவர்கள் இருக்கிறவர்கள் உலகமடா இந்த இணைய உலகம்.