Only Because of You
ஆம்.. நிச்சயமாய் இது உங்களால் தான் நடந்தது. நீங்கள் இல்லையேல் இது சாத்தியமில்லை. எந்த ஒரு மனிதனின் வெற்றியும் அவன் தன் முயற்சியினால் மட்டும் வெற்றி பெறப்படுவதில்லை. அதன் பின்னால் பல பேருடய, ஆதரவும், அன்பும் இருக்கும். ஆனால் அது வெளியே தெரிவதில்லை. வெற்றி பெற்றவர் மட்டுமே கொண்டாடப்படுகிறார்கள். ஆனால் நான் இன்றைக்கு என்னை உற்சாகப்படுத்தியவர்களை, கூடவே இருந்து பயணித்தவர்களை நினைவு கூற கடமை பட்டுள்ளேன். பத்து லட்சம் ஹிட்ஸ்களை வாரி வழங்கி மேலும் ஆதரவளித்துவரும் உங்களுக்கு என் நன்றிகள். தமிழ் பதிவுலகில் யுவகிருஷ்ணாவுக்கு பிறகு பத்து லட்சம் ஹிட்ஸுகளை கொடுத்திருப்பது எனக்குத்தான் என்று நினைக்கும் போது சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது. அதுவும் மிகக் குறுகிய காலத்தில். சாதாரண பதிவராய் ஆரம்பித்த என் பயணம், ஒரு சிறுகதை ஆசிரியராய் உருவாகி, விகடன், கல்கி போன்ற பத்திரிக்கைகளிலும், சிறுகதை தொகுப்பு வெளியிடும் ஒரு எழுத்தாளராகவும் உயர உற்சாக ஊற்றாகவும், உந்து சக்தியாகவும் இருந்தது நீங்கள தான் என்றால் அது மிகையில்லை. அத்தொகுப்புக்கு நீங்கள் கொடுத்த ஆதரவினால் பெற்ற வெற்றி அடுத்து வர இருக்கும் ...