Aa Dinagalu –(2007)
இளையராஜாவின் இசையில், வேணுவின் ஒளிப்பதிவில், கிரிஷ் கர்னாட்டின் திரைக்கதையில்,பெங்களூரில் நடந்த இரண்டு தாதாக்களுக்கிடையே ஆன சண்டையை மிக இயல்பாக, ஊடே ஒரு காதல் கதையையும் கொடுத்து , ஒரு இடத்தில் கூட ரத்தம் சிந்தாமல் மிரட்டியிருக்கிறார்கள். இந்த ஆதினகளு டீன் என்றால் மிகையாகாது. அக்னி ஸ்ரீதரின் நண்பன் சேத்தன் ஒரு பெண்ணை காதலிக்க, அதை தடுக்க அவனின் அப்பா பெங்களூரின் பெரிய டானான கொத்தவால் ராமசந்திராவின் உதவியியை நாடியிருக்க, கொத்தவால் சேத்தனையும், அவனின் காதலியையும் மிரட்ட, வேறு வழியில்லாமல் அவனுக்கு எதிரியான இன்னொரு டான் ஆன ஜெயராஜிடம் அடைக்கலமாகிறார்கள். ஒரு பக்கம் கொத்தவாலின் சாம்ராஜ்யத்தை ஒழிக்க துடிக்கும் ஜெயராஜ், கொத்தவாலுக்கு உதவியாய் இருப்பது மாதிரியான நடவடிக்கைகளுடன், அவனை பழிவாங்க கொல்ல துடிக்கும் அதுல் குல்கர்னியும், அவனைது நண்பர்களும். கொத்தவால் உயிருடன் இருந்தால் தன் காதல் ஜெயிக்காது என்பதால், ஜெயராஜ், அதுலுடன் சேர்ந்து கொஞ்சம், கொஞ்சம் சேத்தனும் கிரிமினலாகுவது என்று மிக இயல்பான திரைக்கதையும், அளவான வசனங்களுடன் . ஒரு காட்சியில்...