சாப்பாட்டுக்கடை - ID@ Sathyam
நல்ல தியேட்டரில் சினிமா பார்க்க வேண்டுமென்றால் சென்னைவாசிகளின் முதல் ஆப்ஷன் சத்யமாய்த் தான் இருக்கும். சென்னையின் முக்கிய டெஸ்டினேஷன்களில் ஒன்றாக விளங்கும் இந்த மல்ட்டிப்ளெக்ஸில் முதல் மாடியில் ஒரு வெஜிட்டேரியன் ரெஸ்டாரண்ட் இருக்கிறது. பெயர் ஐடி. நிர்வாகத்தினர் பெயருக்கான பாண்ட் டிசைனிலேயே நம்மை கவர்ந்து விடுவார்கள். உள்ளே சென்றதும் அருமையான ஆம்பியன்ஸ். நடுவே சமையல் இடம். அதை சுற்றி பாரில் உள்ளது போல ஒரு சீட்டிங் அரேஞ்ச்மெண்ட். அவசர அடியாய் தனியாய் என்னைப் போன்றவர்களுக்காக அமைத்திருப்பார்கள் போலும். தோசைக்கல்லுக்கு முன்னாடியே உட்கார்ந்து சுடசுட சாப்பிடலாம்.