Posts

Showing posts with the label கருப்பையா மெஸ்

சாப்பாட்டுக்கடை - கருப்பையா மெஸ்

Image
மெஸ் என்கிற பெயரில் எதை ஆரம்பித்தாலும் தமிழகத்தில், குறிப்பாய் சென்னையில் ஏகோபித்த ஆதரவை தரத் தயாராக இருக்கிறார்கள் என்றதும் ஏகப்பட்ட மெஸ்கள்முளைத்துக் கொண்டேயிருக்கிறது. அதைப் போலத்தான் இதுவும் என்று நினைத்திருந்தேன். சிவகங்கை மாவட்டத்துக்காரர்களின் உணவகம் என்றதும் நாக்கு சப்பு கொட்ட ஆரம்பித்தது. ஃபேம் நேஷனல் மாலில் உள்ளே அமைந்துள்ள இந்த உணவகத்தின் மெனு கார்ட் போட்டைப் பார்த்ததும் உள்ளே போகத் தூண்டியது. பிச்சிப் போட்ட கோழி, வஞ்சிரம் மீன், நண்டு, மட்டன் சுக்கா என லிஸ்ட் போடப்பட்டிருக்க மெனுவில் சிக்கன், மட்டன், மீன் என மீல்ஸ் வகைகள். கூடவே சீரக சம்பா மட்டன் பிரியாணி என பரந்து விரிந்த மெனுக்கள். ஒரு மட்டன், ஒரு சிக்கன், மீன் மீல்ஸ் ஆர்டர் செய்தோம்.  சிக்கன் மீல்ஸில் சிக்கன்சுக்காவும், மட்டன் மீல்ஸில் சுக்காவும், மீன் மீல்ஸில் வஞ்சிரம் மீனும், அயிரை மீன் குழம்பும்  வந்தது.  நன்கு வெந்த சின்ன துண்டுகளோடு மட்டன் சுக்கா நல்ல காரத்துடன் வைத்தார்கள். உடன் கொடுக்கப்பட்ட, மட்டன், சிக்கன், மீன் கிரேவிக்கள் கெட்டியாக இருந்தது. மிளகு அதிகம் போடப்பட்டிருந்தாலும் அந்த கார...