Posts

Showing posts with the label அருந்ததீ

அருந்ததீ -திரைவிமர்சனம்

Image
      லாஜிக் இல்லாத பல உட்டாலக்கடி மாயாஜால ஆங்கில படங்களை அதனுடய பரபரப்பான திரைக்கதைகாக பார்பவரா..? கிராபிக்ஸ் அட்டகாசத்துக்காக பார்பவரா..? அப்படியென்றால் இதோ உங்களுக்காக.. ஒரு அட்டகாசமான படம் “அருந்ததீ” ராஜ குடும்பத்தின் ஓரே பெண் வாரிசான அருந்ததிக்கு அவளுடய காதலனுக்கும் திருமணம் நிச்சயிக்க படுகிறது. திருமணத்துக்கு முன்னால் தங்களுடய பாரம்பரிய அரண்மனைக்கு வருகிறாள். அங்கு சில நாட்கள் தங்கி இருந்துவிட்டு போக இருக்கும் போது, அங்கே அவளைபோலவே உருவம் கொண்ட அவளது பாட்டியின் உருவ படத்தை பார்த்து அவளை பற்றி கேட்கிறாள். அதே சமயத்தில் அந்த கோட்டையின் அருகில் உள்ள ஒரு பாழடைந்த கோட்டையில் உள்ள ஒரு கெட்ட சக்தி அவளை அடைய நினைக்கிறது. மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் ஜெக்கம்மா என்கிற அருந்ததியினால் கொல்லப்பட்ட அவளது மாமன் பசுபதியின் ஆவீ, தற்போது இருக்கும் அருந்த்தி பழைய அருந்ததியின் மறுபிறவி என்பதால் பூர்வ ஜென்மத்தில் அடைய முடியாதவளை, பசுபதி அரூப ரூபத்தில் அடைய துடிக்கிறான். இதையெல்லாம் படிக்கும் போது, ஏதோ அம்புலிமாமா கதை போல் இருந்தாலும், படம் ஆரம்பித்ததும் நம்ம...