பரிசலும், நானும், புத்தக வெளியீடும்..
ரொம்ப சந்தோஷமாவும், நெர்வஸாகவும் இருக்கு. முதல் முறையா என்னுடய சிறுகதைகளை புத்தகமா பாக்கிறதுக்கு. முதல் காப்பிய திருவெல்லிக்கேணி பாரதியார் வீட்டு முன்னாடி வச்சி பப்ளிஷர் குகன் கொடுக்கும் போது ஒரு மாதிரி நெகிழ்ச்சியா இருந்திச்சு. நெகிழ்ச்சிக்கு காரணம் புத்தகம் மட்டுமில்லை மிக குறுகிய காலத்தில் நான் கடந்து வந்திருக்கிற பாதையை நினைத்து வந்தது. இதற்கு காரணம் யார் என்று பார்த்தால் நிச்சயம் அது என்னை ஊக்குவித்த வாசகர்களினாலும், பதிவர்களாலும்தான். இவர்கள் இல்லையேல் நான் இவ்வளவு தூரம் வந்திருப்பேனா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே இருந்திருக்கும். இவர்கள் கொடுத்த உற்சாகத்தால் தான் பதிவுலகிலிருந்து பத்திரிக்கைகளில் என் எழுத்துக்கள் வெளியாகி, இன்று சிறுகதை தொகுப்பாய் உங்கள் கைகளில் தவழப் போகிறது. ஆம் தவழத்தான் போகிறது.. வெளிவரப்போகும் புத்தகம் உங்கள் குழந்தை, அதை தாலாட்டி, சீராட்டி, தட்டி கொடுத்து வளர்ப்பீர்க்ள் என்கிற நம்பிக்கையில் வருகிற 14 தேதி என்னுடய புத்தகமான “லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும் என்கிற சிறுகதை தொகுப்பும், பிரபல பதிவர் பரிசல்காரன் எழுதிய “டைரிகுறிப்பும்,காதல் மறு...