Thottal Thodarum

Feb 3, 2010

பரிசலும், நானும், புத்தக வெளியீடும்..


ரொம்ப சந்தோஷமாவும், நெர்வஸாகவும் இருக்கு. முதல் முறையா என்னுடய சிறுகதைகளை புத்தகமா பாக்கிறதுக்கு. முதல் காப்பிய திருவெல்லிக்கேணி பாரதியார் வீட்டு முன்னாடி வச்சி பப்ளிஷர் குகன் கொடுக்கும் போது ஒரு மாதிரி நெகிழ்ச்சியா இருந்திச்சு.

நெகிழ்ச்சிக்கு காரணம் புத்தகம் மட்டுமில்லை மிக குறுகிய காலத்தில் நான் கடந்து வந்திருக்கிற பாதையை நினைத்து வந்தது. இதற்கு காரணம் யார் என்று பார்த்தால் நிச்சயம் அது என்னை ஊக்குவித்த வாசகர்களினாலும், பதிவர்களாலும்தான். இவர்கள் இல்லையேல் நான் இவ்வளவு தூரம் வந்திருப்பேனா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே இருந்திருக்கும். இவர்கள் கொடுத்த உற்சாகத்தால் தான் பதிவுலகிலிருந்து பத்திரிக்கைகளில் என் எழுத்துக்கள் வெளியாகி, இன்று சிறுகதை தொகுப்பாய் உங்கள் கைகளில் தவழப் போகிறது. ஆம் தவழத்தான் போகிறது.. வெளிவரப்போகும் புத்தகம் உங்கள் குழந்தை, அதை தாலாட்டி, சீராட்டி, தட்டி கொடுத்து வளர்ப்பீர்க்ள் என்கிற நம்பிக்கையில்

வருகிற 14 தேதி என்னுடய புத்தகமான “லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும் என்கிற சிறுகதை தொகுப்பும், பிரபல பதிவர் பரிசல்காரன் எழுதிய “டைரிகுறிப்பும்,காதல் மறுப்பும்” என்கிற சிறுகதை தொகுப்பும் வெளியாக இருக்கிறது. பரிசல்காரனை பற்றி நான் சொல்ல வேண்டியது இல்லை. அருமையான, எளிமையான, நகைச்சுவையான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர். அவருடய புத்தகத்தோடு என்னுடய புத்தகம் வெளிவருவது மிக சந்தோஷமே.
lemon tree 28 without  image parisal  with content 1

நிகழ்ச்சி நிரல்
தேதி : 14.02.10

நேரம் : மாலை 5.30

விருந்தினர்கள் : பிரமிட் நடராஜன், நடிகர், தயாரிப்பாளர்,
சி.எஸ்.அமுதன் இயக்குனர் தமிழ்ப்படம்
அஜயன் பாலா, எழுத்தாளர்
பொன்.வாசுதேவன், பதிப்பாளர், அகநாழிகை பதிப்பகம்.

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6.முனுசாமி சாலை
முதல் மாடி, மஹாவீர் காம்ப்ளெக்ஸ்
பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்,
மேற்கு கே.கே.நகர்
சென்னை –78

அனைவரும் வந்திருந்து விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

கேபிள் சங்கர் : 9840332666
பரிசல் காரன் : 9894147014
குகன் : 9940448599

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


வருகிற பிப்ரவரி மாதம் 14 ஆம் நாள், காதலர் தினத்தன்று, சென்னையில் ஒரு மாபெரும் நிகழ்வு நடக்க இருக்கிறது. அது வேறொன்றும் இல்லை. என்னுடய சிறுகதைகள், பரிசலின் சிறுகதைகளில் சிறந்தவற்றை தொகுத்து,(எல்லாமே சிறந்தவைதான் என்று நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது…ஹி…ஹி..) இரண்டு சிறுகதை தொகுப்பாக வெளியிட இருக்கிறது நம் பதிவர் குகனின் நாகரத்னா பதிப்பகம்.

அதே போல இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக என்பது போல நம்ம புத்தகங்களுக்கு அட்வான்ஸ் புக்கிங் செய்து கொள்பவர்களுக்கு சலுகை விலையில் புத்தகங்களை கொடுக்க முன் வந்திருக்கிறது நாகரத்னா பதிப்பகம்.. இது பற்றி குகனின் பதிவிலிருந்து…..
lemon tree 28 without  image வரும் 14.2.10 அன்று கேபிள் சங்கர் எழுதிய 'லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் ' மற்றும் பரிசல்காரன் எழுதிய 'டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் ' நூல் Discovery Book Palace யில் நடைபெறவுள்ளது. பொதுவாக முன் பதிவு முறை ஆங்கில புத்தகங்களுக்கு தான் பயன்படுத்துவார்கள். முதல் முறையாக தமிழ் புத்தகங்களுக்கு முன் பதிவு முறையை முயற்சி செய்ய போகிறோம்.

சென்னை வாசகர்களுக்கு
15% தள்ளுபடி மற்றும் தபால் செலவு இலவசம்.

சென்னை தவிர தமிழ்நாட்டு வாசகர்களுக்கு
10% தள்ளுபடி மற்றும் தபால் செலவு இலவசம்.

மற்ற மாநில வாசகர்களுக்கு
தபால் செலவு மட்டும் இலவசம்.
parisal  with content 1

இரண்டு நூலின் விலை (சலுகை விலை இல்லாமல்) ரூ.100. இரண்டு புத்தகம் சேர்த்து முன் பதிவு செய்பவர்களுக்கு தான் இச்சலுகை ஏற்றுக் கொள்ளப்படும்.

கீழ் காணும் முறையில் புத்தகத்தை முன் பதிவு செய்யலாம்.
1.பெயர் : K.G.Kannan
வங்கி எண் : 50132 82449
வங்கி : Citibank, Chennai
வங்கியில் பணம் செலுத்திய பிறகு, nagarathna_publication@yahoo.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 'Advance Book Order' என்று 'Subject' போட்டு உங்கள் வீட்டு முகவரி அல்லது தொடர்பு கொள்ளும் முகவரி அனுப்புங்கள்.

2. Cheque (At par Only) / DD மூலம் பதிவு செய்ய விரும்புபவர்கள் 'K.G.Kannan' என்ற பெயரில்,Nagarathna Pathippagam, 3A., Dr.Ram Street, Paddy field Road, Perambur, Chennai - 11 முகவரிக்கு அனுப்பவும்.

3. MO/eMO மூலம் பதிவு செய்ய விரும்புபவர்கள் தங்கள் முகவரியை பின்பக்கத்தில் தெளிவாக குறிப்பிட்டு, K.G.Kannan,Nagarathna Pathippagam, 3A., Dr.Ram Street, Paddy field Road, Perambur, Chennai - 11 என்ற முகவரிக்கு அனுப்பவும்.
முன் பதிவு செய்ய கடைசி நாள் : 12.2.10

பதிவு செய்த வாசகர்களுக்கு வெளியீட்டு விழா (14.2.10) முடிந்த பிறகு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.

இதன் மூலம் வெளியூர்களில் இருக்கும் வாசக அன்பர்களுக்கு குறைந்த விலையில் ஒரு நல்ல நூலை வாங்கிய நிறைவை பெற்று புத்தக வெளியீட்டுக்கு முன்பே இரண்டாவது பதிப்புக்கு ஆர்டர் கொடுக்க வைக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்..

ICICI BANK A/C DETAILS

SANSWAS INFOTECH

A/C NO. 007705010890
ASHOK NAGAR BRANCH

இது என்னுடய அக்கவுண்ட் தான்.Post a Comment

103 comments:

Sukumar said...

உங்களுக்கும் பரிசல்ஜிக்கும் வாழ்த்துக்கள்...
மேலும் கலக்குங்க.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாழ்த்துக்கள் கேபிள் அண்ணா

பரிசல்காரன் said...

வாழ்த்துக்கள் கேபிள். நீங்கள் இன்னும் பல படிங்கள் உயர்ந்து சாதா கேபிளிலிருந்து, ஆப்டிகல் கேபிளாகவும், நான் கப்பல்காரனாகவும் வாழ்த்துவார்கள் என்று நம்புவோம்!

தராசு said...

ரொம்ப சந்தோஷமா இருக்குதண்ணே.

நீங்க ரெண்டு பேரும் இன்னும் நிறைய சிகரங்களை தொட வாழ்த்துக்கள்.

Sridharan said...

வாழ்த்துக்கள்......

anujanya said...

இருவருக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து கலக்குங்க.

அனுஜன்யா

கே.என்.சிவராமன் said...

இரு எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துகள் :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் கேபிள் & பரிசல் :)

Anbu said...

வாழ்த்துக்கள் கேபிள் அண்ணா.....

Romeoboy said...

Present Sir

Paleo God said...

வாழ்த்துக்கள் ஜி ..::))

----------------
சென்னை வாசகர்களுக்கு
15% தள்ளுபடி மற்றும் தபால் செலவு இலவசம்.

சென்னை தவிர தமிழ்நாட்டு வாசகர்களுக்கு
10% தள்ளுபடி மற்றும் தபால் செலவு இலவசம்.

மற்ற மாநில வாசகர்களுக்கு
தபால் செலவு மட்டும் இலவசம்//

வேற்று கிரக வாசிகளுக்கு 100% தள்ளுபடி :)))

வரதராஜலு .பூ said...

மிக்க மகிழ்ச்சி :-)))

உங்களுக்கும் பரிசலுக்கும் வாழ்த்துக்கள்

சினிமா வியாபாரம் புத்தகத்தொகுப்பாக எப்போழுது வருகிறது?

Balakumar Vijayaraman said...

எனக்கொரு செட் பார்சேல்...

Unknown said...

வாழ்த்துக்கள் தல...

பாபு said...

வாழ்த்துக்கள்......

நிலாரசிகன் said...

வாழ்த்துகள் ஜி ,பரிசல் :)

எறும்பு said...

உங்களுக்கும் பரிசலுக்கும் வாழ்த்துக்கள்

:)

Unknown said...

வாழ்த்துகள் கேபிள் மற்றும் பரிசல்..

//சென்னை வாசகர்களுக்கு
15% தள்ளுபடி மற்றும் தபால் செலவு இலவசம்.

சென்னை தவிர தமிழ்நாட்டு வாசகர்களுக்கு
10% தள்ளுபடி மற்றும் தபால் செலவு இலவசம்.

மற்ற மாநில வாசகர்களுக்கு
தபால் செலவு மட்டும் இலவசம்//

வேற்று கிரக வாசிகளுக்கு 100% தள்ளுபடி :)))
//

வெளிநாடுவாழ் வாசகர்களுக்கு?

butterfly Surya said...

கேபிள், அளவில்லா மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

பரிசல் கிருஷ்ணாவிற்கும் வாழ்த்துகள்.

butterfly Surya said...

Slide Show சுகுமாரின் கைவண்ணமா..??

சூப்பரா இருக்கு.

Athisha said...

தோழர்கள் மென்மேலும் வளர வாழ்த்தும் உள்ளங்கள்.

அத்திப்பட்டு அதிஷா
சாலிகிராமம் விஜய்
பெசன்ட் நகர் அஜித்
சின்மயாநகர் நர்சிம்
மடிப்பாக்கம் யுவகிருஷ்ணா
ரேணிகுண்டா ரெட்டி
மற்றும் பலர்

சங்கர் said...

வாழ்த்துகள்

புலவன் புலிகேசி said...

வாழ்த்துக்கள் தல

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்.

Suresh said...

உங்களுக்கும் பரிசல்ஜிக்கும் வாழ்த்துக்கள்.

Ashok D said...

எழுத்தாளர்களுக்கு என் வாழ்த்துகள் :)

Ashok D said...

தலைவரே உங்க போட்டோ சூப்பரா வந்திருக்கே! க்ராபிக்ஸுக்கு எவ்வளவு செலவாச்சு? :))

விக்னேஷ்வரி said...

உங்களிருவருக்கும் வாழ்த்துக்கள். அப்படியே எனக்கும் ரெண்டு புத்தகங்களும் பார்சல்.

சிவாஜி said...

வாழ்த்துகள் நண்பர்களே!

Sornakumar said...

Is this email address is correct "nagarathna_publication@yahoo.in"

I think the correct address is "nagarathna_publication@yahoo.co.in"

மணிஜி said...

ஏம்லேய்..ஒரு எடத்துல நிக்க மாட்டியோ?

செ.சரவணக்குமார் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் கேபிள் அண்ணா.

வெள்ளிநிலா said...

என் பேங்க் கணக்குல நூறு ரூபாய் கழிந்ததாக நினைசாச்சி

vasu balaji said...

வாழ்த்துகள். பண்ணீருவோம்.:)

திருவாரூர் சரவணா said...

சொந்தப் பணத்தைப் போட்டு புத்தகம் பதித்து ராயல்ட்டிக்கு பதில் அதே புத்தகங்களையே வாங்கி வைத்து வீட்டிற்கு வருபவர்க்கெல்லாம் ஸ்வீட் காரம் கொடுப்பது போல் தரும் சூழ்நிலையும் இருக்கிறது.

அது போல் இல்லாமல் முன்பதிவு செய்து நூலின் விற்பனையை உறுதிசெய்யும் உங்கள் முயற்சி உங்களுக்கு வெற்றியையும் மற்றவர்களுக்கு ஊக்கத்தையும்தரட்டும்.

வாழ்த்துக்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

இருவருக்கும் வாழ்த்துக்கள்.

நர்சிம் said...

வாழ்த்துக்கள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்..மிக்க்க்க்க்க்க மகிழ்ச்ச்சி

சிவக்குமரன் said...

Greetings!
Wishes to cable and parisal...

Ganesan said...

வாழ்த்துக்கள் கேபிள், பரிசல்.
மிக்க மகிழ்ச்சி.

CS. Mohan Kumar said...

இருவருக்கும் வாழ்த்துகள். உங்க புக் பின் பக்க அட்டையில் போட்டோவில் இருப்பது யாருங்க.:))) போட்டோ சூப்பர்.

Ganesan said...

மருத்துவர் ஷாலினி மதுரை கருத்தரங்கம்-தொகுப்பு--புகைப்படங்கள்.

www.kaveriganesh.blogspot.com

Sanjai Gandhi said...

//சென்னை தவிர தமிழ்நாட்டு வாசகர்களுக்கு
10% தள்ளுபடி மற்றும் தபால் செலவு இலவசம்.
//

இன்னாபா இது அக்குருவுமா கீது.. போடான்னுவோம் போடான்னுவோம்.. மெட்ராசவிட 1% கூடுதலா கிடைக்கும் வரை போடான்னுவோம்.. :)

2 பேர்க்கும் வாழ்த்துகள் சாமியோவ்..

gulf-tamilan said...

உங்களுக்கும் பரிசலுக்கும் வாழ்த்துக்கள்!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

உங்களுக்கும் பரிசல்க்கும் வாழ்த்துக்கள்...

ஜெட்லி... said...

வாழ்த்துக்கள் அண்ணே....

creativemani said...

ரெண்டு பேருக்கும் உளங்கனிந்த வாழ்த்துக்கள்..

புத்தகங்களைக் காணும் ஆவலுடன்!!!

திவ்யாஹரி said...

வாழ்த்துக்கள் கேபிள் அண்ணா..
வாழ்த்துக்கள் பரிசல் அண்ணா..

செ.பொ. கோபிநாத் said...

வாழ்த்துக்கள் கேபிள்..
வாழ்த்துக்கள் பரிசல்..

RAJAPPA said...

congrats anna
As you know I am not very good with computers, I have tried my best to link the one you sent me.It worked, you may chech this out.once again congrats.wishes to parisal too.( he doesn't know me anyway)
rajappa william

Unknown said...

வாழ்த்துக்கள் : கேபிள் சங்கர்
பரிசல் கிருஷ்ணா.
தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி

அரவிந்தன் said...

அன்பின் கேபிள்/பரிசல்,

இணையம் வழி முன்பதிவு செய்தால் உங்கள் கையெழுத்திட்ட புத்தகங்கள் கிடைக்குமா.?

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாழ்த்துகள் கேபிள் & பரிசல் :)

அறிவிலி said...

பரிசலுக்கு ஒரு ரிப்பீட்டு。。。

வாழ்த்துகள் :)))

ரவி said...

பே பால் மூலம் செலுத்தும் வகை செய்யமுடியுமா ?

அல்லது குறைந்தபட்சம் ஒரு ஐசிஐசிஐ
அக்கவுண்டு தரச்சொல்லுங்க..

இருவருக்கும் வாழ்த்துக்கள்...

RAMYA said...

வாழ்த்துகள் கேபிள் & பரிசல் :)

வால்பையன் said...

இப்போ புக்கு எழுதிட்டிங்க, அப்புறம் மேடையில யார் புக்கையாவது கிழிச்சி போடுவிங்க, அப்புறம் உலக டூர் போக காசு வேணும்னு கேப்பிங்க, நாங்க கியூவுல நின்னு பணம் கட்டனும்!

ண்ணே, டொரினோ வாங்கியாரட்டுமாண்ணே!

சி.வேல் said...

வாழ்த்துகள் கேபிள் & பரிசல்

சில்க் சதிஷ் said...

வாழ்த்துக்கள் கேபிள் அண்ணா..
வாழ்த்துக்கள் பரிசல் அண்ணா..

vanila said...

வாழ்த்துக்கள் கேபிள்ஜி..

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

வாழ்த்துக்கள் கேபிள் & பரிசல் !!

ஒரு பா....ர்..சல் (முன்பதிவு செஞ்சாச்சு)

பா.ராஜாராம் said...

வாவ்!

வாழ்த்துக்கள்ஜி!

பரிசல்ஜி!

கண்ணா.. said...

//வால்பையன் said...
இப்போ புக்கு எழுதிட்டிங்க, அப்புறம் மேடையில யார் புக்கையாவது கிழிச்சி போடுவிங்க, அப்புறம் உலக டூர் போக காசு வேணும்னு கேப்பிங்க, நாங்க கியூவுல நின்னு பணம் கட்டனும்//

வால்.. ஜட்டியானந்தா மேட்டரை மறந்துட்டீங்க....:)

BTW வாழ்த்துக்கள்...கேபிள் யூத்

வாழ்த்துக்கள் பரிசல்

ஜீவன்சிவம் said...

வாழ்த்துக்கள் நண்பர்களே

ஜீவன்சிவம் said...
This comment has been removed by the author.
Santhappanசாந்தப்பன் said...

புத்தகங்களின் பதிப்புகள் வெள்ளி விழா காண வாழ்த்துக்கள் !!!

வெளி நாட்டு வாசகர்களுக்கு சலுகை இல்லாம பண்ணிட்டீங்களே!

தமிழ் அமுதன் said...

இருவருக்கும் வாழ்த்துகள். கலக்குங்க.

Unknown said...

பல பதிப்புக்கள் பெற

வாழ்தத வயதில்லை.... அதனால்

வேண்டிக்கும்...ஒரு ஐசிஐசியை அக்கவுண்டு கொடுத்தால்..மிக எளிதாக இருக்கும்...

அன்புடன் அருணா said...

வாழ்த்துகள் கேபிள் & பரிசல் :)

அக்னி பார்வை said...

vazhtha vayathillai vanangkukiren

நேசமித்ரன் said...

ரொம்ப சந்தோஷமா இருக்குங்க சங்கர் சார்

ஜோசப் பால்ராஜ் said...

இணையத்தில் இருந்து புறப்பட்டு இணையில்லா உயரங்களை அடைய இருவரையும் இறைவன் ஆசீர்வதிக்க ப்ரார்திக்கிறேன்.

வெளிநாட்டு வாசகர்களுக்கு என்ன சலுகை?

பாலா அறம்வளர்த்தான் said...

வாழ்த்துகள் கேபிள்!!!

Cable சங்கர் said...

ஐ.சி.ஐ.சி.ஐ.வங்கி கணக்கு வேண்டுவோருக்கு

என்னுடய கணக்குக்கு பணம் அனுப்பி புத்தகத்தை பெற்றுக் கொள்ளலாம்

ICICI BANK
SANSWAS INFOTECH
A/C NO.007705010890
ASHOKNAGAR BRANCH

ச.முத்துவேல் said...

வாழ்த்துக்கள் எழுத்தாளர் !

அதுசரி, உங்க போட்டாவுக்குப் பதில் கமலஹாசன் போட்டோவப் போட்டு வச்சிருக்கிங்க?

sriram said...

யூத்து / மைனஸ் ஒட்டு மைனர்,
வாழ்த்துக்களை நேத்தே சாட்டில் சொல்லியாச்சு..

எனக்கு ஒரு உண்மை தெரியணும்: இந்த பதிவுக்குக் கூட மைனஸ் ஓட்டு போட்ட அந்த புண்ணியவான் யாருப்பா??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

வெற்றி said...

வாழ்த்துக்கள்..உங்க போட்டோல ஹீரோ மாதிரியே இருக்கீங்க :)

kanagu said...

vazthukkal anna... :) :)

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துகள் ரைட்டர்ஸ்...

ஸ்ரீ.... said...

வாழ்த்துக்கள் இருவருக்கும். இன்று எழுத்தாளர், நாளை துணை முதல்வர், நாளை மறுநாள் முதல்வர். வாழ்க வாழ்க!

ஸ்ரீ....

செல்ல நாய்க்குட்டி மனசு said...

வாழ்த்துக்கள் : கேபிள் சங்கர்
பரிசல் கிருஷ்ணா.

Menaga Sathia said...

வாழ்த்துக்கள் இருவருக்கும்.

மீன்துள்ளியான் said...

வாழ்த்துக்கள் கேபிள் , பரிசல்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

இருவருக்கும் வாழ்த்துகள் :)

Mugilan said...

இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

அமர பாரதி said...

இருவருக்கும் வாழ்த்துக்கள். //இந்த பதிவுக்குக் கூட மைனஸ் ஓட்டு போட்ட அந்த புண்ணியவான் யாருப்பா??// சமீப (உண்மையாலுமே) பிரச்சினையின் விளைவா?

Naadodigal said...

வாழ்த்துக்கள், உங்கள் இருவருக்கும். சீனாவிற்கு அனுப்ப முடியுமா? புத்தகத்தை தான்.........
http://naadodigal.wordpress.com

கோவி.கண்ணன் said...

இருவருக்கும் நல் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் !

Ravichandran Somu said...

வாழ்த்துக்கள் சங்கர் & பரிசல்!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

Vidhoosh said...

ஆப்டிகல் கேபிள்கா"ரரா"கவும், கப்பல் கா"ரரா"கவும் வாழ்த்துக்கள்.
ரொம்ப சந்தோஷம் :)

வித்யா

Vidhoosh said...

அதிஷா said...

///// தோழர்கள் மென்மேலும் வளர வாழ்த்தும் உள்ளங்கள்.

அத்திப்பட்டு அதிஷா
சாலிகிராமம் விஜய்
பெசன்ட் நகர் அஜித்
சின்மயாநகர் நர்சிம்
மடிப்பாக்கம் யுவகிருஷ்ணா
ரேணிகுண்டா ரெட்டி
மற்றும் பலர்/////
வேளச்சேரி கார்க்கி ஜீப்புல விட்டுட்டீங்களே...

PRINCENRSAMA said...

வாழ்த்துகள் பதிவர்களுக்கு!
தகவலுக்காக...
முன்பதிவுத் திட்டம் தமிழுக்கு புதிதல்ல.. 1970-களின் தொடக்கத்தில் வெளிவந்த "பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்" நூல் முன்வெளியீட்டுத் திட்டத்தில் வெளியிடப்பட்டதுதான்.. அதைத்தொடர்ந்து பலர் முயன்றார்கள்... இதுவரை ஆயிரக்கணக்கில் மதிப்புள்ள பெரு முயற்சிகளுக்குத்தான் இதுபோல் செய்யப்பட்டது. சிறு முயற்சிகளுக்கும் தொடங்கியிருக்கிறீர்கள்... தொடரட்டும்.. வாழ்த்துகள்!!!

Balaji-Paari said...

Best wishes Sankar.

Balaji-paari

Cable சங்கர் said...

வாழ்த்து சொன்ன அத்துனை நண்பர்களுக்கும் மிக்க நன்றி.. நிச்சயம் விழாவுக்கு வந்திருந்து சிறப்பிக்க வேண்டுக்கிறேன்

Cable சங்கர் said...

@தராசு
நன்றிங்கண்ணா.. எத்தனை புக்கு பார்சல்? :)

@ஷங்கர்
கொடுத்துருவோம்.. உங்களூக்கில்லாததா..?:)

@வரதராஜுலு.பூ

விரைவில் அது கிழக்குபதிப்பகத்திலிருந்து வெளி வர இருக்கிறது

@வி.பாலகுமார்

அட்ரஸும் பணத்தையும் அனுப்பிச்சீங்கண்ணா..பதிப்பாளரை விட்டு பார்சல் அனுப்பிச்சிருவேன்..:)

Cable சங்கர் said...

@முகிலன்

யாராவது உஙக் ஊருக்கு வரும் போது கொடுத்தனுப்பவேண்டியதுதான்..:)

@விக்னேஷ்வரி

நிச்சயம்.. உடனடியாய்மேலிருக்கும் ஏதாவது ஒரு அக்கவுண்டுக்கு பதிவு செய்து பணம் அனுப்பிவிடுங்க..நிச்சயம் பதிப்பாள்ர் உங்களுக்கு அனுப்பி வைப்பார்..நன்றி

@

Cable சங்கர் said...

@மோகன் குமார்
அது நாந்தாஙக்

@ரவி
அக்கவுண்ட் போட்டாச்சு செந்தழல்

@ச.முத்துவேல்
ஆனாலும் என்ன ரொம்பத்தான்புகழறீங்க..

@ஸ்ரீராம்
அது திருஷ்டிக்கு

@வெற்றி

ஹிரோ மாதிரி என்ன ஹிரோவே தான்..:)


@ஸ்ரீ
ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி இருக்கே

@பிரின்ஸ்ன்சாமா
தகவலுக்கு நன்றி

sriram said...

அமர பாரதி said...
இருவருக்கும் வாழ்த்துக்கள். //இந்த பதிவுக்குக் கூட மைனஸ் ஓட்டு போட்ட அந்த புண்ணியவான் யாருப்பா??// சமீப (உண்மையாலுமே) பிரச்சினையின் விளைவா?//

இருக்காதுன்னு நம்புறேன், அவரும் தன் வலைப்பூவில் புத்தகங்களுக்கான லின்க் கொடுத்திருக்கிறார்...

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ராஜன் said...

இருவருக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து கலக்குங்க.

CM ரகு said...

முன்பதிவு செய்து நூலின் விற்பனையை உறுதிசெய்யும் உங்கள் முயற்சி உங்களுக்கு வெற்றியையும் மற்றவர்களுக்கு ஊக்கத்தையும்தரட்டும்.

Senthilkumar said...

இருவருக்கும் வாழ்த்துகள்!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

வாழ்த்துகள்!

thiyaa said...

நல்ல தகவல் ஆனால் அந்த இடம் எது?

(Discovery Book Palace address?)

எங்கு வெளியீடு விவரம் சரியாக இல்லை

சொன்னால் நாங்களும் வருவோம்.

akshpoems@gmail.com

Tech Shankar said...

அப்படியே ஆகுக..

//வாழ்த்துக்கள் கேபிள். நீங்கள் இன்னும் பல படிங்கள் உயர்ந்து சாதா கேபிளிலிருந்து, ஆப்டிகல் கேபிளாகவும், நான் கப்பல்காரனாகவும் வாழ்த்துவார்கள் என்று நம்புவோம்!