Sasirekhaa Parinayam- Telugu Film Review
Technorati Tags: Sasirekhaa Parinayam , telugu film review வழக்கமாய் கிருஷ்ணவம்சி படமென்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். சாதாரண கதையை மேக்கிங்கில் அசத்துவார். அதிலும் ஜெனிலியா என்றவுடன் ஏகப்பட்ட ஆர்வத்துடன் பார்த்தேன். கண்டிப்புக்கும், முட்டாள்தனமான கோபத்துக்கும் சொந்தக்காரரான சசிரேகாவின் தந்தை அவருக்கு திடீர் என்று திருமணம் ஏற்பாடு செய்ய, அமெரிக்க மாப்பிள்ளையின் தந்தை வரதட்சணை, அது இது என்று பிரச்சனை செய்ய திருமணம் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறுகிறார், வழியில் ஆனந்தை சந்திக்கிறார். அவர்கள் இருவருக்கும் நடக்கும் சம்பவஙக்ள தான் கதை.. இறுதியில் அவர்க்ளூக்குள் காதல் மலர்ந்ததா இல்லையா என்பதை ஒரு சின்ன சஸ்பென்ஸையும் வைத்து முடித்து இருக்கிறார்கள். படம் முழுக்க ஜெனிலியா, அழுகிறார், சிரிக்கிறார், குதிக்கிறார், குதூகலிக்கிறார். அவருடன் நாம் அதே உணர்வுகலை உணர்கிறோம். சசிரேகாவாக வாழ்ந்திருக்கிறார் ஜெனிலியா. ஆனந்தாக தருண், படம் முழுவதும் வியாபித்திருக்கும் ஜெனிலியாவுடன் ஈக்குவலாய் போட்டி போடுகிறார். விஜயவாடா பற்றி கேவலமாய் ஜெனிலியா பேசுமிடத்தில், அதன் பெருமைகளை...