கொத்து பரோட்டா - 18/07/16
மாற்று சினிமாவிற்காக மட்டும் சுமார் பதினைந்து வருடங்களுக்கு மேலாய் கிட்டத்தட்ட சேவை மனப்பான்மையுடனே வலம் வரும் ‘நிழல்’ திருநாவுக்கரசு அவர்கள் புதியதாய் நிழல் பதியம் திரைப்பட அகாடமி தொடங்கியிருந்தார். அவரது மகன் விஜய் அழைத்திருந்தார். நண்பர்கள் சூழ் கூட்டம். ஆரவாரமில்லாமல் தொடக்க விழா நடந்தேறியது. எம்.பி.இளங்கோவன், டிராஸ்கி மருது, எஸ்.பி.ஜனநாதன், கவிதாபாரதி, மீரா கதிரவன், சக்திவேல் பெருமாள்சாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்து பேசினார்கள். பின்பு தமிழகம் எங்கும் நிழல் நடத்திய குறும்பட பட்டறையில் பயின்று இன்றைக்கு திரையுலகில் காலூன்றி வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறவர்கள் பேசினார்கள். நல்ல அனுபவத்தை கொடுக்கக்கூடிய ஒர் அகாடமியாய் இது இருக்கும் என்பதற்கான சான்று இவர்கள் தான். வாழ்த்துக்கள் நிழல் திருநாவுக்கரசு சார்.. @@@@@@@@@@@@@@@@@@@@@@ எங்கே பார்த்தாலும் கபாலி படத்தின் ப்ரோமோ, அல்லது அதைப் பற்றிய பேச்சாய்த்தான் இருக்கிறது. முதல் நாள் படத்தின் ஸ்பெஷல் ஷோவுக்கு டிக்கெட் விலை ஆயிரம் ரூபாய் என்று பப்ளிக்காய் போட்டிருக்கிறார்கள். ஜாஸ் சினிமாதான் இப்படத்தின் தமிழக வியாபாரத்தை எடுத்...