Thottal Thodarum

Jul 18, 2016

கொத்து பரோட்டா - 18/07/16

மாற்று சினிமாவிற்காக மட்டும் சுமார் பதினைந்து வருடங்களுக்கு மேலாய் கிட்டத்தட்ட சேவை மனப்பான்மையுடனே வலம் வரும் ‘நிழல்’ திருநாவுக்கரசு அவர்கள் புதியதாய் நிழல் பதியம் திரைப்பட  அகாடமி தொடங்கியிருந்தார். அவரது மகன் விஜய் அழைத்திருந்தார். நண்பர்கள் சூழ் கூட்டம். ஆரவாரமில்லாமல் தொடக்க விழா நடந்தேறியது. எம்.பி.இளங்கோவன், டிராஸ்கி மருது, எஸ்.பி.ஜனநாதன், கவிதாபாரதி, மீரா கதிரவன், சக்திவேல் பெருமாள்சாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்து பேசினார்கள். பின்பு தமிழகம் எங்கும் நிழல் நடத்திய குறும்பட பட்டறையில் பயின்று இன்றைக்கு திரையுலகில் காலூன்றி வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறவர்கள் பேசினார்கள். நல்ல அனுபவத்தை கொடுக்கக்கூடிய ஒர் அகாடமியாய் இது இருக்கும் என்பதற்கான சான்று இவர்கள் தான். வாழ்த்துக்கள் நிழல் திருநாவுக்கரசு சார்..
@@@@@@@@@@@@@@@@@@@@@@
எங்கே பார்த்தாலும் கபாலி படத்தின் ப்ரோமோ, அல்லது அதைப் பற்றிய பேச்சாய்த்தான் இருக்கிறது. முதல் நாள் படத்தின் ஸ்பெஷல் ஷோவுக்கு டிக்கெட் விலை ஆயிரம் ரூபாய் என்று பப்ளிக்காய் போட்டிருக்கிறார்கள். ஜாஸ் சினிமாதான் இப்படத்தின் தமிழக வியாபாரத்தை எடுத்துக் கொண்டிருக்கும் பட்சத்தில் முதல் நாள் காட்சிகள், முதல் வார காட்சிகளில் அதிக விலைக்கு விற்பதை யாரும் தடுக்கப் போவதில்லை. சத்யம் போன்ற மால்களில் உள்ள தியேட்டர்கள் மட்டுமே அரசு நிர்ணையித்த விலையில் படம் பார்க்க முடியும். நேரடியாய் இல்லாவிட்டாலும் மறை முகமாய் பாப்கார்ன், பெப்சியோடு முன்னூறுக்கும் ஐநூறுக்கும் டிக்கெட் விற்க முடிவு செய்திருப்பதாய் தெரிகிறது. இது சினிமாவை அழிக்கும் செயல். தங்க முட்டையிடும் வாத்தை  அறுப்பது போல..
@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
என்னடா நடக்குது சுல்தானை இலக்கியவாதிங்க பாராட்டுறாங்க திவத்துக்களிய திட்டுறாங்க.. இந்த இலக்கியவாதிகளை புரிஞ்சிக்கவே மிடியல  ‪#‎அடப்போங்கடா‬

நேத்து ராத்திரியிலேர்ந்து எட்டு வாட்டி கரண்டு கட்டு. அம்மா.. எக்ஸ்ட்ரா இருக்குன்னு இருக்குறதையும் வித்துட்டாங்களோ

போலீஸின் அடிக்குபின் ஏதோ ஒரு சிறு பூதமிருக்கறது
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ்நாடு மின் மிகை மாநிலமாய் ஆகிவிட்டது போலவும், எக்ஸ்ட்ரா கரெண்டையெல்லாம் வாங்கிக்கங்க..வாங்கிக்கங்க என்று கூவி கூவி விற்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் மின்மிகை ஆகியிருப்பது போலவும் செய்திகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து, சென்னையில் அதுவும் இரவு நேரங்களில் தொடர்ந்து மூன்று பேஸ்களுமோ, அல்லது ரெண்டு பேஸ் மின்சாரமோ இன்றிதான் இரவுகள் கடக்கிறது. அதுவும் கடந்த மூன்று நாட்களாய் தொடர்ந்து இரவில் சுத்தமாய் கரண்டே இருப்பதில்லை. நடக்குறத சொன்னா நம்மளை தி.மு.க காரங்கன்னு சொல்வாங்க.. 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பாரடைஸ் பிரியாணி சென்னையில் கடை பரப்பியிருக்கிறது என்று அறிவித்த நாளிலிருந்து அங்கே கூட்டம் அம்மிக் கொண்டிருக்கிறது. ஏழு மணிக்கு போனாலே ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியது கட்டாயம். அங்கே வேலை செய்யும் பையனை பார்க்க பாவமாய் இருந்தது. மொத்த பில்டிங்கிற்கும் ஜெனரேட்டரில் பவர் ஓடிக் கொண்டிருக்க, அந்த சத்தத்திற்கு நடுவே தன் கணீர் குரலில் பெயர்களை தொடர்ந்து அழைத்துக் கொண்டும், அடுத்த வருகிறவர்களின் பெயரை எழுதிக் கொண்டு, குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் ஆகும், அதற்கு முன்னால் இடம் இருந்தால் கொடுக்கப்படலாம் என்பதால் அருகிலேயே யாராவது ஒருவரை காத்திருக்க சொல்வதுமாய் இருந்தார். அவரின் முகத்தில் சிறு கடுப்பு கூட இல்லை. உள்ளேயிருந்து டேபிள் காலி லிஸ்ட் வயர்லெஸ்ஸில் வர, அதற்கேற்றார்ப் போல இங்கிருந்ந்து ஆட்களை அனுப்பிகிறார்கள். வரிசைப்படி. நான் 90 சதவிகித பேலியோக்காரன் என்பதால் அங்கே பிரியாணி சாப்பிடவில்லை என்பதை நம்புவீர்களாக..
@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
A father and his 6-year-old son are walking down the street, and they come across two dogs having sex. The boy is shocked by what he sees and asks his father "Daddy, what are they doing?" The father, not wanting to lie to his son, says "they're just making a puppy." "OK" says the son, and the father is relieved that he doesn't probe further. The next day, the son bursts into his parents' room and sees them having sex. The father jumps up and quickly covers himself. Knowing he's in for an interesting talk, walks downstairs with him and they sit at the dining room table. His son asks him "Daddy, what were you and mommy doing?" Again, wanting to be honest with his son, he says "me and mommy were making a baby." His son pauses for a moment, thinking, and then replies "flip mommy over, I want a puppy!"

Post a Comment

1 comment:

'பரிவை' சே.குமார் said...

கொத்துப் பரோட்டா அருமை...