Posts

Showing posts with the label students..

ஸ்டேட் ஃபர்ஸ்ட்...

Image
D.சரண்யா. புவியியல் பாடத்தில் 200/195 2006ல் எடுத்தவர். எனக்கு பல நாட்களாய் ஒரு சந்தேகம். வருடா வருடம் தமிழ்நாடு முழுவதும் நடக்கும் பத்தாவது, மற்றும் +2 தேர்வுகளில் ஸ்டேட் பர்ஸ்டாக வரும் மாணவ, மாணவிகள் பலரும் தாங்கள் எப்படி முதல் மதிப்பெண் பெற்றார்கள், தங்களுடய பெற்றோர்கள், மற்றும் ஆசிரியர்கள், பள்ளி அவர்களுக்கு எவ்வாறு துணை நின்றது என்பதையும் சொல்வார்கள். அதிலும் மாணவிகள், தங்கள் எதிர்காலத்தில் டாக்டர் ஆகப் போறேன்.. இன்ஜினியர் ஆக போறேன்னு தங்கள் கனவுகளை சொல்வார்கள். அவங்க அப்படி சொல்லும் போது அவங்க கண்ல தெரியில கனவுகளும், அவர்களின் உழைப்புக்கான வெற்றி கிடைச்ச சந்தோசம் நிஜம். ஆனா வாழ்க்கை எல்லாருடய கனவுகளை நிஜப்படுத்துவதில்லை.. சென்ற வருடம் ஸ்டேட் பர்ஸ்ட் வந்த மாணவிகள் ரம்யா, ரூபிகா சில வருடங்களூக்கு முன் ஸ்டேட் பர்ஸ்ட் வந்த மாணவ, மாணவிகளின் கனவுகள் நிறைவேறிச்சா.. பத்தாவதுல ஸ்டேட் பர்ஸ்ட் வந்தவங்க.. +2வில ஏன் அந்த அளவுக்கு ஸ்கோர் பண்ண முடியல.. அட்லீஸ்ட் ஸ்கூல் பர்ஸ்டாவது வந்தாங்களா..? +2வில ஸ்டேட் பர்ஸ்ட் வந்தவங்க.. இப்ப என்ன பண்ணுறாங்க? கடந்த பத்து வருடங்கள்ல உங்களுக்கு தெரிஞ்சு யார...