Rann – Hindi Film Review
செய்தி சேனல்களின் முக்கியத்துவத்தை நாம் தேர்தல் நேரத்தில் பார்த்திருக்க முடியும், அல்லது ஏதாவது ஒரு முக்கிய நிகழ்வு, அது சுனாமியோ, பூகம்பமோ, தீவிரவாதிகள் முற்றுகையோ, நம் வாழ்க்கையின் இணை பிரிக்க முடியாத ஒரு அம்சமாக ஆகிவிட்ட ஒரு விஷயம் செய்தி சேனல்கள். ஒரு சேனலை வைத்து ஆட்சியையே பிடித்த விஷயம் நம் எல்லோருக்கு தெரிந்த விஷயம்தானே. இப்படி மீடியாக்கள் தங்கள் கையில் வைத்துள்ள பல அரசியல் கட்சிகள் சொல்லும் செய்திகளில் எவ்வளவு தூரம் உண்மையிருக்க முடியும்? அவ்வளவு சேனல்களை பார்க்கும் பார்வையாள்ர்கள் குழம்பி போவது நிதர்சனம் தானே? இது தான் ரான் படத்தின் கதை. இந்தியா 24X7 என்கிற சேனலை நடத்தும் அமிதாபுக்கு தன் சேனலில் வரும் செய்திகள் எப்போதும் உண்மைக்கு மாறாக இருக்கக் கூடாது என்று உறுதியாய் இருப்பவர். அவரது அமெரிக்க ரிட்டர்ன் மகன் சுதீப்புக்குகோ, நியூஸ் சேனல் என்பது இன்னொரு வியாபாரம் அவ்வளவுதான். அமிதாபினுடய தொழிலதிபர் மாப்பிள்ளை ரஜத் கபூர் ஒரு சந்தர்பவாத ஆசாமி. அமிதாபினுடய சேனலிலிருந்து வெளியேறி போட்டி சேனல் ஆரம்பித்த ஹெட்லைன் 24 என்கிற சேனலின் காரணமாய் டி.ஆர்.பி இறங்கி வெளிறி போயிருக்கிற நேரத...