Posts

Showing posts with the label films

மக்களுக்கு சீரியல் பார்க்கும் ஆர்வம் குறைந்து கொண்டேயிருக்கிறது. - பாஸ்கர் சக்தி - chat with x

Image

ம்..க்கும்.. இதுதாண்டா பஞ்ச்..

Image
1 படிச்சா என்ன சர்டிபிகேட் வேணும்னாலும் வாங்கலாம்.. ஆனால் உன்னால உனக்கு டெத் சர்டிபிகேட் வாஙக முடியுமா? 2 நீ ஏர்டெல் வச்சிருக்கலாம், ஏர்செல் வச்சிருக்கலாம், ஆனா நீ தும்மினா ஹட்சுன்னுதாண்டா தும்மணும் 3 இன்ஜினயரிங் காலேஜில படிச்சா இன்ஜினியர் ஆகலாம், அனா பிரசிடெண்ட்ஸி காலேஜில படிச்சா பிரசிடெண்ட் ஆக முடியாது. 4 மெக்கானிகல் இன்ஜினியர் மெக்கானிக்கா ஆகலாம். ஆனா சாப்ட்வேர் இன்ஜினியர் சாப்ட்வேர் ஆக முடியுமா? 5 டீ கப்புல டீய பாக்கலாம் வேர்ல்ட் கப்புல வேர்ல்ட பாக்க முடியுமா? 6 கீ போர்டுல கீயை பாக்க முடியும், மதர் போர்டுல மதரை பாக்க முடியுமா? 7 பஸ் ஸ்டாப்புல் பஸ்ஸை எதிர்பாக்கலாம். புல் ஸ்டாப்புல “ஃபுல்”ல எதிர்பார்க்க முடியுமா? படித்ததில் பிடித்தது ஓரு முத்தத்தை தொடர்ந்து.. திடுமென்று அந்தக் காட்சி உறைத்தது. பக்கத்தில் முழுக்கை சட்டையின் கையை மடித்துவிட்டுக் கொண்டு நெருக்கமாக நின்று கொண்டிருந்தவரின் கழுத்தில் கைகளை மாலை போல் போட்டுக் கொண்டு அவள் முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். வெகு சுதந்திரமாக லஜ்ஜையில்லாமல் அவர்கள் இருவரும் மோன நிலையில் இருக்க, அறைக்குள் வந்து ராஜ்குமாருக்கும், கார்த்திக்கும் சமிக்ஞ...

என் பெயரை இனிமேல் யூஸ் செய்ய வேண்டாம் - மணிரத்னம்

Image
எனது பெயரை இனிமேல் யூஸ் செய்ய வேண்டாம் என்று மணிரத்னம் அறிவித்திருக்கிறார். அவர் இவ்வாறு அறிவித்ததன் காரணம் என்னவாக இருக்கும் என்று அவரின் ரசிகர்களும், பத்திரிக்கையாளர்களும், தமிழ் திரையுலகமும் அறிய ஆவலாயிருக்கிறார்கள். சமீபத்தில் மணிரத்னத்தின் உதவியாளர் திரு. தினேஷ்குமார் இயக்கிய கத்திக்கப்பல் என்கிற திரைப்படத்தை பார்த்து விட்டு நொந்து போய்தான் மணிரத்னம் இந்த அறிக்கையை விட்டுள்ளார் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. அலைபாயுதே படத்தில் மட்டும் தன்னுடன் உதவியாளராக பணிசெய்த அதுவும் அந்த படத்தின் கதையாசிரியர் திரு செல்வராஜ் என்பதால். அதுமட்டுமில்லாமல் தன்னுடய உதவியாளர் என்று சொல்லி படத்தின் விளம்பரத்தில் தன்னையும், பாரதிராஜாவையும் போட்டு, ஏகப்பட்ட விளம்பரம் செய்து, படு அமெச்சூரான ஓரு படத்தை எடுத்திருக்கும் இவரை பார்த்து அடுத்து வரும் தலைமுறையினர் இவரே இப்படி என்றால் அவரின் குருவின் படம் எப்படி இருக்குமோ என்று நினைத்துவிடுவார்கள் என்று அஞ்சி தான் இந்த அறிக்கை வந்திருப்பாக சொல்கிறார்கள். இதில் பாரதிராஜாவை எதற்காக போட்டார்கள் என்று கேட்டீர்களானால் அது ஓண்ணுமில்லை தினேஷின் தந்தை ப...

எச்சரிக்கை..ரெடி..1..2..3....

Image
தயவு செய்து குழந்தைகள்,பெண்கள், இளகிய மனதுடையவர்கள், நோயாளிகள் பார்க்காமல் இருப்பது நல்லது. அப்புறம் சொல்லலைன்னு சொல்லப்படாது.. ஆமா..சொல்லிட்டேன். என்ன எப்படி இருந்திச்சு..??.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்க..

துரை -விமர்சனம்

Image
ஓரு ராஜாவிடம் விசுவாசமான ஓரு தளபதி..தளபதிக்கு அழகான மனைவி, மகள், தளபதியை ஓரு தலையாய் காதலிக்கும் ராஜகுமாரி, தன் மகனிடம் அரசாட்சியை ஓப்படைக்க இஷ்டமில்லாமல் தளபதியை அடுத்த வாரிசாக அறிவிக்க, அரசரின் மகன் தனது ராஜா ஆசையின் காரணமாக தன் தந்தையை கொன்றுவிட்டு பழியை தளபதி மீது போட்டுவிட்டு அவனையும் அவன் குடும்பத்தையும் அழித்துவிட பணிக்கிறான். தளப்தி மட்டும் தப்பிவிட்டு ஓரு க்ளேடியேட்டர் ஆகி அவனது நாட்டுக்கே திரும்ப வந்து அரசனை கொன்று நல்லாட்சி த்ருகிறான்.. இது தான் க்ளேடியேட்டரின் கதை. ராஜாவுக்கு பதிலாக ஓரு நல்ல அரசியல்வாதி, நேர்மையான அல்லக்கை ஹீரோ, ஹீரோவுக்கு நல்ல அழகான மனைவி, மகன், அரசியல்வாதியின் மகள் ஓரு தலையாய் ஹீரோவை காதலிக்கிறாள். அரசியல்வாதியின் மகன் அடுத்த முதல்வர் ஆக அசைப்பட்டு தன் தந்தையை கொன்று பழியை ஹீரோவின் மீது போட்டு போலீசை விட்டு என்கவுண்டர் செய்ய போக அதிலிருந்து தப்பித்த ஹீரோவுக்கு தான் யார் என்று மற்ந்து போய்விட, அதனால் தான் யார் என்றே தெரியாமல் அலைய, பின்னால் ஓரு மணிநேரத்திற்கு பின் ஞாபகம் வந்து தன் நிலைக்கு யார் காரணம் என்று கண்டுபிடித்து எல்லோரையும் கொன்று வென்று வெற்றி வா...

சக்கரகட்டி - விமர்சனம்

Image
என்னத்த எழுதறதுன்னே தெரியல.. அவ்வளவு நல்லாயிருக்கான்னு கேட்காதீங்க..ஹிந்தியில் “ஜானே தூ “போன்ற படங்களில் இருக்கும் இயல்பான எல்லோருக்கும் தெரிந்த கதையோட்டமாய் இருந்தாலும் படத்திலிருக்கும் கேரக்டர்களினால் சுவாரஸ்யமாய் சொல்ல முடியும் என்பதற்கு அந்த இந்தி படம் உதாரணம். எ.எம்.ரத்னதுக்கு ஓரு ஜோதி கிருஷ்ணா மாதிரி, தாணுவிக்கு ஓரு கலாபிரபு. என்ன மத்த டைரக்டரை எல்லாம் திட்டுன மாதிரி தன்னோட பையன திட்ட முடியாது. வழக்கமா தாணு படம் ஆரம்பிக்கும் போது “தம்பி, ஓரு கதை சொல்லிச்சு. அப்படி ஓரு கதைன்னு “ அறிக்கை விடுவாறு. படம் முடிஞ்சதும் “அந்த தம்பிக்கு படமெடுக்க தெரியல.. அது சரியில்ல.. இது சரியில்ல்ன்னு அறிக்கை விட்டு பப்ளீசிட்டி ஆக்கிடுவாரு.. இப்ப என்ன செய்வாருன்னு பாக்கலாம் ரஹ்மான் இனிமே கதையை கேட்டுட்டு படத்தை ஓத்துக்கலாம். ஏன்னா.. அவர் அருமையா போட்ட பாடல்களை எல்லாம் படு கேவலமா சூட் பண்ணியிருக்காங்க.. சாந்தனுவுக்கு நடிக்க யாராவது க்ளாஸ் எடுத்தா நல்லாயிருக்கும். அவரு அப்பா ஓருத்தரே போதும் அவர் கேரியரை காலி பண்ண. ஏன்னா.. அவர் முதல்ல ரிஜெக்ட் பண்ண சப்ஜெக்ட் பாலாஜி சக்திவேலோட “காதல்’ அடுத்து “சுப்ரமணியபுர...

சிவாஜி, தசாவதாரம், தாம்தூம், ராமன் தேடிய சீதை.....

Image
ஓரு விஷயம் மட்டும் புரியமாட்டேன் என்கிறது.. எவ்வள்வோ படங்களை பார்த்து நாம் விமர்சிக்கிறோம். ஆனால் நாம் நல்ல படம் என்று நினக்கிற படங்கள் விமர்சனங்களில் வேண்டுமானால் நல்ல வரவேற்பை பெறுகிறதே தவிர.. வசூலில் பெரிதாககூட சாதிப்பதில்லை. உதாரணத்திற்கு நமது விமர்சனத்திலும் சரி, வசூலிலும் சரி சாதித்த படங்கள், பருத்திவீரன், சுப்ரமணியபுரம் போன்ற படங்களே..இவை தவிர நமது விமர்சகர்களால் பிய்த்து, கடித்து குதறப்பட்ட சிவாஜி, தசாவதாரம், தாம் தூம், போன்ற படங்கள் நமது விமர்சனங்களை மீறி வெற்றி படங்களாய் வலம் வருகிறது. மிக நல்ல படம் என்று பலராலும் பாராட்ட படுகிற அன்பே சிவம், கன்னத்தில் முத்தமிட்டால், போன்ற படங்கள் எல்லாம் டீவியிலும், டிவிடியிலும் பார்த்து நன்றாகயிருக்கிறது என்று இன்ன்மும் சொல்கிறார்கள். ஆனால் அந்த படங்கள் எல்லாம் வசூல் ரீதியில் மிகப் பெரிய சரிவை சந்தித்த ப்டங்கள். தற்போது சமீபத்தில் ரிலீசான ராமன் தேடிய சீதை படம் விமர்சகர்களால் மிகவும் பாராட்ட பட்டு, மிக நல்ல படம் என்று படம் பார்த்த மக்கள் சொன்னாலும் கூட, வசூலில் மிக மிக பின் தங்கிய் நிலையிலேயே உள்ளது. ஆனால் சரோஜா, போன்ற இளைஞர்களுக்கான படங்கள்...

ராமன் தேடிய சீதை - விமர்சனம்

Image
இயக்குனர் ஜெகன்நாத் தனக்கு கிடைத்த மூன்றாவது சான்ஸில் தனது வெற்றி எனும் சீதையை கண்டு விட்டார். இதற்கு முன்னால் அவர் ஜெகன் என்ற பேரில் விஜயின் புதியகீதை, ஜெகன்.ஜி என்ற பெயரில் கோடம்பாக்கம் என்று இயக்கிய படங்கள் எல்லாமே பப்படமாகி டப்பாவுக்கு போய்விட்ட நிலையில்.. இதோ.. ஜெகன்நாத என்ற பெயரில் ராமன் தேடிய சீதை.. ஸ்டேட் லெவலில் இரண்டாவது ரேங்க் டென்த்தில் வாங்கிய மாணவனை எல்லோரும் பாராட்ட,அவனது தாய் மட்டும் திட்ட, அதனால் +2வில் முதல் மாணவன் ஆகவேண்டிய கட்டாயத்தில் அதிகமாய் படிக்க, மெண்டல் ஸ்டெரெஸ் ஏற்பட்டு மனநல மருத்துவமனையில் 8 மாதம் சிகிச்சை பெற்று , படிப்பை விட்டு சொந்தமாய் தொழில் செய்து வாழ்கையில் உயர்ந்து நிற்கும் வேணுவுக்கு, கல்யாணத்திற்கு நாகர்கோயிலில் பெண் பார்க்க போகிறார்.. அங்கே பார்கும் பெண்ணிடம் (விமலா ராமன்)தனியாய் பேச வேண்டும் என்று சொல்லி, தன்னை பற்றிய எல்லா விவரங்களையும் சொல்ல, அவர் வேணுவை திருமணம் செய்ய மறுக்கிறா. அவரின் வாழ்வில் நடந்த சம்பவத்தை சொன்னதனாலேயே வருகிற வரன்கள் எல்லாம் தட்டி போக, ஒரு சமயம் மணிவண்ணனின் மகளுக்கு நிச்சயம் செய்து திருமணம் வரைக்கும் வந்து, மணப்பெண் ஓடிப்...

அலிபாபா - விமர்சனம்

Image
தமிழ் சினிமாவில் இந்த மாதம் திரில்லர் மாதம் போலிருக்கிறது. மற்றுமொரு திரில்லர் அலிபாபா. திருட்டையே வாழ்க்கையாய் வைத்திருக்கும் கதாநாயகன் கிருஷ்ணா, திருடுவதை நியாயப்படுத்தும் அவரது அப்பா பிரகாஷ்ராஜ். ஓரு பெண்ணின் மேல் விருப்பபட்டு தன் திருட்டு தொழிலை விட நினைக்கும் போது, கிருஷ்ணாவின் அக்கவுண்ட்டில் லட்ச கணக்கில் பணம் விழ, அவர் அதை எடுத்து செலவு செய்ய ஆரம்பிக்கிறார். ஓரு கட்டத்தில் அவர் மீது கமிஷனர் கொலை பழி விழுகிறது. அந்த பிரச்சனையில் அவரது அப்பா இறந்து போகிறார். இதையெல்லாம் எப்படி வீழ்த்தி வெளிவருகிறார் என்பது தான் மீது கதை. ஆரம்பம் முதலே கிருஷ்ணாவை ஆக்ஷ்ன் ஹீரோவாக காண்பிக்க வேண்டும் என்ற கட்டாயத்தினிலால் அவரை திருடனாகவும், புத்திசாலியாகவும் காண்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இயக்குனர் இருப்பதால் அந்த கேரக்ட்ர் பிரச்சனையில் மாட்டும் போது அவர் மீது பரிதாபத்துக்கு பதிலாக ஓரு வெற்று உணர்வே தோண்றுகிறது. கிருஷ்ணா ,ஹீரோயின் ஜனனியின் பைக்கை திருட, அதே பைக்கை தண்ணியடிப்பதற்காக, ஓரு வீட்டின் வாசலில் வைத்துவிட்டு போவதும், அந்த வீடு ஜனனியின் வீடாய் இருப்பது, அவரது வீட்டிலேயே திருடப்ப் போய் மாட்டிக்...

வால் -ஈ

Image
வால்- ஈ ஓரு 3டி கார்டூன் படம். ஆனால் படம் ஆரம்பிக்கும் போது தான் கார்டூன் படம் போல் தோன்றும் சிறிது நேரத்துக்கெல்லாம் நாம் அந்த கேரக்டர்களூடன் ஒன்றி அவர்களீன் வெற்றி தோல்வி, சுகம்,துக்கம் எல்லாம் நமக்கும் வந்துவிடும். 22ஆம் நூற்றாண்டுக்ளில் பூமியே குப்பை மேடாக போய்,அங்கே வசிக்க முடியாது என்கிற நிலைக்கு வந்ததால் பூமியை ஓரு கம்பெனி க்ளின் செய்து அங்கே எப்போது ஓரு செடி முளைக்கிறதோ அதுவரை அவர்கள் எல்லோரையும் வானுலகத்தில் ஓரு மிகப் பெரிய பேஸ் ஷிப்பில் வசிக்க வைக்கிறது. இங்கே பூமியில் ஓரு சினன் ரோபோ ஓன்றும் மற்றும் ஓரு கரப்பான் பூச்சியும் வசிக்க, ரோபோ பூமியில் உள்ள எல்லா குப்பைகளையும் கட்டு, கட்டாக பண்டில் செய்து அடுக்கி வைத்து சுத்தம் செய்து கொண்டிருக்கிறது. அப்போது அங்கே ஓரு செடி முளைத்திருப்பதை பார்த்து அதை பத்திரபடுத்தி வைக்கிறது. அப்போது ஓரு ஸ்பேஸ் ஷிப்பிலிருந்து வரும் ஓரு பெண் ரோபோ “ஈவா” வுக்கும் வால்-எ க்கும் காதல் அரும்புகிறது. ஈவாவை அங்கிருந்து அப்புறபடுத்தி ஷிப்புக்கு கொண்டு போகும் போது வால் ஈயும் அந்த ஷிப் பில் ஓட்டியபடியே ஸ்பேசுக்கு போக, அங்கே போய் “ஈவா”வை பார்த்து தன் காதலை சொல...