Thottal Thodarum

Sep 18, 2008

ராமன் தேடிய சீதை - விமர்சனம்


இயக்குனர் ஜெகன்நாத் தனக்கு கிடைத்த மூன்றாவது சான்ஸில் தனது வெற்றி எனும் சீதையை கண்டு விட்டார். இதற்கு முன்னால் அவர் ஜெகன் என்ற பேரில் விஜயின் புதியகீதை, ஜெகன்.ஜி என்ற பெயரில் கோடம்பாக்கம் என்று இயக்கிய படங்கள் எல்லாமே பப்படமாகி டப்பாவுக்கு போய்விட்ட நிலையில்.. இதோ.. ஜெகன்நாத என்ற பெயரில் ராமன் தேடிய சீதை..

ஸ்டேட் லெவலில் இரண்டாவது ரேங்க் டென்த்தில் வாங்கிய மாணவனை எல்லோரும் பாராட்ட,அவனது தாய் மட்டும் திட்ட, அதனால் +2வில் முதல் மாணவன் ஆகவேண்டிய கட்டாயத்தில் அதிகமாய் படிக்க, மெண்டல் ஸ்டெரெஸ் ஏற்பட்டு மனநல மருத்துவமனையில் 8 மாதம் சிகிச்சை பெற்று , படிப்பை விட்டு சொந்தமாய் தொழில் செய்து வாழ்கையில் உயர்ந்து நிற்கும் வேணுவுக்கு, கல்யாணத்திற்கு நாகர்கோயிலில் பெண் பார்க்க போகிறார்..
அங்கே பார்கும் பெண்ணிடம் (விமலா ராமன்)தனியாய் பேச வேண்டும் என்று சொல்லி, தன்னை பற்றிய எல்லா விவரங்களையும் சொல்ல, அவர் வேணுவை திருமணம் செய்ய மறுக்கிறா. அவரின் வாழ்வில் நடந்த சம்பவத்தை சொன்னதனாலேயே வருகிற வரன்கள் எல்லாம் தட்டி போக, ஒரு சமயம் மணிவண்ணனின் மகளுக்கு நிச்சயம் செய்து திருமணம் வரைக்கும் வந்து, மணப்பெண் ஓடிப் போய்விட, அதனால் கல்யாணம் தடைபடுகிறது.


வாழ்கையே நொந்து போய்.. மன் அமைதியின்றி கால் போனபோக்கில் போகும் வேணு ஓரு காரில் அடிபடப் போக, அப்போது அங்கே இருக்கும் கண் தெரியாத பசுபதி அவரை காப்பாற்றுகிறார். அந்த சம்பவத்தில் அவரும், வேணுவும் ந்ண்பர்களாக.. அந்த நட்பினால் வேணுவின் வாழ்வில் மேல் நம்பிக்கை எழுகிறது.

வேணுவுக்கு வேறு ஓரு பெண்ணை பார்த்து கல்யாணம் செய்து வைத்தால்தான் என் மகள் செய்த தப்பிற்கு பரிகாரம் என்று நினக்கும் மணிவண்ணன் வேணுவிக்கு வேறு ஓரு பெண்ணை நாகர்கோவிலில் பெண் பார்க்க போகிறார்கள். போன இடத்தில் ஓடிப்போன மணிவண்ண்னின் மகளை நிறைமாத கர்பிணீயாக, மிக ஏழ்மை நிலையில் பார்க்க, அவளூக்கு உதவி செய்ய ஹாஸ்பிடலுக்கு செல்ல..அங்கே ரிசப்ஷ்னிஸ்ட் ஆக வேலைப் பார்க்கும் விமலாராமனிடம் சொல்லி வைத்து அவளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறான்.


இதற்கிடையில் நாகர்கோவில் பெண் கார்திகாவை ஓரு கோயிலில் வைத்து பெண் பார்த்துவிட்டு, திரும்பும் போது ஓரு ஆட்டோ டிரைவரின் கதையை கேட்டு நெகிழ்ந்து போய் அந்த பெண் யார் என்று கேட்க, அவன் தன்னுடய ஆட்டோவில் கார்திகாவின் படத்தை காட்ட, வேணு அதிர்ந்து போய் என்ன் செய்வது என்று தெரியாமல் அந்த பெண்ணிடம் பேச, அவளும் என்ன முடிவு செய்வது என்று தெரியாமல் முழித்ததால் தான் பத்து நாள் டயம் கேட்டதாக சொல்ல.. வேணு விரக்தியுடன் சிரிக்கிறான்

அந்த சமயத்தில் மணிவண்ணனின் பெண்ணிற்கு பிரசவ வலி வந்து ஹாஸ்பிடலில் அட்மிடாக, வேணுவிக்கு போன் செய்யும் விமலா ராமன் , வேணு வந்ததும் பணம் கட்ட சொல்கிறான். மணிவண்ணனுக்கு அப்போது தான் விஷயத்தை சொல்கிறான். கோபத்தில் வந்த மணிவண்ணன் வேணுவை அடிக்க, அப்போது அங்கே வரும் விமலா ராமன் தடுக்க, உண்மையை சொல்கிறார் மணிவண்ணன். அதிலிருந்து வேணுவின் மேல் மரியாதையும் , அவனையா தான் வேண்டாம் என்று சொன்னோம் , என்று எப்ப்டி தன் காதலை சொல்லவது என்று உருக, அந்த் நேரத்தில் அதே ஊரில் இன்ஸ்பெக்டராக வேலைப் பார்க்கும் நவ்யா நாயரை பெண் பார்கக, விமலா ராமனை கூட்டி சென்று போக.. மீதி என்ன வென்று வெள்ளித்திரையில் பார்க்க..


கஜாலா, பசுபதியின் சேப்டர் கொஞ்சம் ஓல்ட் என்றாலும் கோல்ட்.. பசுபதி கண்தெரியாமல் சண்டை போடுவதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

அதே போல் திருட வரும் நிதின் சத்யா ஓவர் நைட்டில் திருந்தி அவரை காதலிக்க ஆரம்பிப்பதும், அவருக்காக திருந்துவதும் கார்திகாவின் பிரண்டின் வண்டியை திருடி சென்று விற்றவ்னிடம் சண்டை போட்டுவதும்,கொஞ்சம் பழசு. ஆனால் நாலு பேருக்கு முன் பாராட்டும்படி நடந்தால் பேசுவேன் என்றதும் லோக்கல் மாராத்தானில் 10கிமீ ஓடி வெற்றி பெற்றுவது.. அதை கொண்டு போய் கார்திகாவிடம் கொடுக்க அதற்கு அவர் இனிமேல் தன்னை எப்போதும் பார்க்க கூடாதென்று சொல்ல.. அப்போது வர்ரும் வித்யாசகரின் பாடல்" என்ன செஞ்சே புள்ளே" பாடல் மனதை அறுக்கிறது.

அதே போல் வேணுவும்,மணிவண்ணனின் மகளும் சந்தித்து கொள்ளும் இடமும் சிம்ப்ளி சூப்பர்ப்..

ஆங்காங்கே.. சில இடங்களில் நாடகதனம் தெரிந்தாலும், இயல்பான நெகிழ்சியான பல காட்சிகள் நம் மனதை லேசாக பிசையத்தான் செய்கிறது.

மீண்டும் சொல்கிறேன் இந்த முறை இயக்குனருக்கு வெற்றி எனும் சீதை கிடைத்துவிட்டாள்..
Post a Comment

20 comments:

முருகானந்தம் said...

அப்போ படத்தை நம்பி பாக்கலாம் போல இருக்கே..

cable sankar said...

//அப்போ படத்தை நம்பி பாக்கலாம் போல இருக்கே..//

நிச்சயமாய் முருகானந்தம்..

Bee'morgan said...

சேரன் என்றாலே கதாபாத்திரம் இப்படித்தான் என்று முடிவு செய்துவிடுகிறார்கள் போல.. :)

cable sankar said...

//சேரன் என்றாலே கதாபாத்திரம் இப்படித்தான் என்று முடிவு செய்துவிடுகிறார்கள் போல.. :)//

அவர் ஓருத்தராவது ஓழுங்கா, பறந்து , பறந்து, சண்டை போடாம,,பஞ்ச் டயலாக் பேசாம இருக்கட்டுமே..

ஆர்.கே.சதீஷ்குமார் said...

விமர்சனமே படம் பார்த்த மாதிரி இருக்குன்னு சொல்லலாம்.அனா தொழில் நுட்பங்கள் பத்தி இன்னும் எழுதி இருக்கலாம்

cable sankar said...

//விமர்சனமே படம் பார்த்த மாதிரி இருக்குன்னு சொல்லலாம்.அனா தொழில் நுட்பங்கள் பத்தி இன்னும் எழுதி இருக்கலாம்//

எழுதலாம்தான் ஏற்கனவே ஏறக்குறைய படத்த பாத்த பாதிப்புல புல்லா எழுதிட்டேன்.. கொஞ்ச நஞ்சமாவது படம் பாக்கற மக்கள் கணிக்கட்டுமேன்னுதான் சதீஷ்குமார்...நன்றி உங்கள் கருத்துக்கும், வருகைக்கும்

முருகானந்தம் said...

//சேரன் என்றாலே கதாபாத்திரம் இப்படித்தான் என்று முடிவு செய்துவிடுகிறார்கள் போல.. :)//

//அவர் ஓருத்தராவது ஓழுங்கா, பறந்து , பறந்து, சண்டை போடாம,,பஞ்ச் டயலாக் பேசாம இருக்கட்டுமே..//

சொல்லிடீங்கள்ள இனி பாருங்க தலை என்ன பண்ண போகுதுன்னு... பறக்கட்டும் இல்ல பறக்காம இருக்கட்டும்.. ஆனா வாய கொஞ்சம் கொரச்சாருன்னா இன்னமும் நிறைய வெற்றி தேடி வரும்..

சினிமா காரர்கள் பத்திரிக்கை நண்பர்களை பகைத்து கொள்வது தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொள்வது மாதிரி..

ARUVAI BASKAR said...

ஆனால் இந்த படத்தின் இயக்குனர் கோடம்பாக்கம் படத்தின் இயக்குனர் என்பதால் சிறுது பயம் வருகிறது !

cable sankar said...

//சொல்லிடீங்கள்ள இனி பாருங்க தலை என்ன பண்ண போகுதுன்னு... பறக்கட்டும் இல்ல பறக்காம இருக்கட்டும்.. ஆனா வாய கொஞ்சம் கொரச்சாருன்னா இன்னமும் நிறைய வெற்றி தேடி வரும்..//

சேரன் இந்த மாதிரி கதைக்கான கேரக்டரில் நடித்தால்தான் பருப்பு வேகும். இல்லாவிட்டால் அவரே ஓரு ச்ந்திப்பில் கூறியது போல் மூட்டை கட்டிக் கொண்டு போய் சேரவேண்டியது தான்.

cable sankar said...

//ஆனால் இந்த படத்தின் இயக்குனர் கோடம்பாக்கம் படத்தின் இயக்குனர் என்பதால் சிறுது பயம் வருகிறது !//

அந்த பயமே உங்களூக்கு தேவையில்லை அறுவை பாஸ்கர்.. நிச்சயமாய் நிறைய இம்ப்ரூவ் ஆயிருக்கார்.நன்றி உங்கள் கருத்துக்கும், வருகைக்கும்

குடுகுடுப்பை said...

ரெண்டு $ கொடுத்து திருட்டு டிவிடி ல கண்டிப்பா பாத்துருவோம்

லக்கிலுக் said...

படத்தோட கதையையே எழுதிட்டீங்களே? :-)

ச்சே.. இந்தப்படத்தை பார்க்காம பந்தயத்துக்கு போயி டவுசர் கிழிஞ்சிடிச்சி :-(

ஜுர்கேன் க்ருகேர் said...

நல்ல விமர்சனம்.
கல்யாணத்துக்கு பொண்ணு தேடறவங்க அவசியம் பாக்கணும் போலருக்கு!

cable sankar said...

//ரெண்டு $ கொடுத்து திருட்டு டிவிடி ல கண்டிப்பா பாத்துருவோம்//

தலைவரே.. தயவு செஞ்சு தியேட்டர்ல பாருங்க.. அப்பத்தானே இந்த மாதிரி நல்ல படம் எடுக்க முயற்சி பண்ணுவாங்க..

cable sankar said...

//படத்தோட கதையையே எழுதிட்டீங்களே? :-)

ச்சே.. இந்தப்படத்தை பார்க்காம பந்தயத்துக்கு போயி டவுசர் கிழிஞ்சிடிச்சி :-(//

பந்தயம் படத்தோட கதை எனக்கு முன்னமே தெரியும் அதனால தான் நான் எஸ்கேப் ஆயிட்டேன். சாரி லக்கி.. ரொம்ப எமோஷலானதுனால கண்டரோல் பண்ண முடியல.. சாரி

Bleachingpowder said...

இந்த படத்திலும் எம்ஜிஆர் மாதிரி முஞ்சியில கைய பொத்திட்டு அழுவாரா, அப்புறம் இல்லடா செல்லம்னு சொல்லீட்டு மேட்டுக்குடி கவுண்டமணி மாதிரி ஒரு ரொமாண்டிக் லுக் வுடுவாரா. விரக்த்தியில சிரிக்குறேன்னு சொல்லி வாயை காக்கா ராதாகிருஷ்ணன் மாதிரி வச்சு எதாச்சு செய்யறார?

மாயக்கண்ணாடி பார்த்த அதிர்ச்சி இன்னும் என்னை விட்டு போகல. நிஜமாவே இந்த படத்த பார்க்கலாம்னு சொல்றீங்களா??

cable sankar said...

//இந்த படத்திலும் எம்ஜிஆர் மாதிரி முஞ்சியில கைய பொத்திட்டு அழுவாரா, அப்புறம் இல்லடா செல்லம்னு சொல்லீட்டு மேட்டுக்குடி கவுண்டமணி மாதிரி ஒரு ரொமாண்டிக் லுக் வுடுவாரா. விரக்த்தியில சிரிக்குறேன்னு சொல்லி வாயை காக்கா ராதாகிருஷ்ணன் மாதிரி வச்சு எதாச்சு செய்யறார?//

இயக்குனர் ஏற்கனவே ஓரு பேட்டியில சொன்னா மாதிரி இந்த தடவை அந்த கொடுமையிலேர்ந்து தப்பிச்சிட்டோம்.முக்கியமா அந்த வாடா..போடா.. கவுண்டமணி ரொமான்ஸ் லுக்கும் இல்லை.
அந்த காக்கா ராதாகிருஷ்ணன் மாதிரி வாயை வச்சிக்கிறது மட்டும் இருக்கு என்ன பண்றது அவருக்கு வாயே அப்படித்தான்..

இவ்ளோ சொல்லியும் படம் பாக்கலாமான்னு கேட்ககூடாது..பாத்துட்டு பதிவு போடுங்க.. நன்றி

cable sankar said...

//ச்சே.. இந்தப்படத்தை பார்க்காம பந்தயத்துக்கு போயி டவுசர் கிழிஞ்சிடிச்சி :-(//

லக்கி டைரக்‌ஷன் எஸ்.ஏ.சின்னு போட்டதுக்கு அப்புறம் கூட போனா அவ்ர் தப்பா?

தமிழ்நெஞ்சம் said...

படம்பார்த்த திருப்தியை உங்களது விமர்சனம் தருகிறது. பாராட்டுக்கள்

cable sankar said...

நன்றி தமிழ்நெஞ்சம் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்