Thottal Thodarum

Sep 5, 2008

வால் -ஈ



வால்- ஈ ஓரு 3டி கார்டூன் படம். ஆனால் படம் ஆரம்பிக்கும் போது தான் கார்டூன் படம் போல் தோன்றும் சிறிது நேரத்துக்கெல்லாம் நாம் அந்த கேரக்டர்களூடன் ஒன்றி அவர்களீன் வெற்றி தோல்வி, சுகம்,துக்கம் எல்லாம் நமக்கும் வந்துவிடும்.

22ஆம் நூற்றாண்டுக்ளில் பூமியே குப்பை மேடாக போய்,அங்கே வசிக்க முடியாது என்கிற நிலைக்கு வந்ததால் பூமியை ஓரு கம்பெனி க்ளின் செய்து அங்கே எப்போது ஓரு செடி முளைக்கிறதோ அதுவரை அவர்கள் எல்லோரையும் வானுலகத்தில் ஓரு மிகப் பெரிய பேஸ் ஷிப்பில் வசிக்க வைக்கிறது.

இங்கே பூமியில் ஓரு சினன் ரோபோ ஓன்றும் மற்றும் ஓரு கரப்பான் பூச்சியும் வசிக்க, ரோபோ பூமியில் உள்ள எல்லா குப்பைகளையும் கட்டு, கட்டாக பண்டில் செய்து அடுக்கி வைத்து சுத்தம் செய்து கொண்டிருக்கிறது. அப்போது அங்கே ஓரு செடி முளைத்திருப்பதை பார்த்து அதை பத்திரபடுத்தி வைக்கிறது.

அப்போது ஓரு ஸ்பேஸ் ஷிப்பிலிருந்து வரும் ஓரு பெண் ரோபோ “ஈவா” வுக்கும் வால்-எ க்கும் காதல் அரும்புகிறது. ஈவாவை அங்கிருந்து அப்புறபடுத்தி ஷிப்புக்கு கொண்டு போகும் போது வால் ஈயும் அந்த ஷிப் பில் ஓட்டியபடியே ஸ்பேசுக்கு போக, அங்கே போய் “ஈவா”வை பார்த்து தன் காதலை சொல்லி அங்கிருந்த கேப்டனுக்கு பூமியில் தாவரங்கள் முளைபதற்கான சாத்தியம் வந்துவிட்டதை புரியவைத்து 700 ஆண்டுகளுக்கு பிறகு மனிதர்களை பூமிக்கு அழைத்து வருகிறது . வால் இயும், ஈவாவும் ஓன்று சேர்கிறார்கள்.

படத்தில் ஓரு கட்டத்திற்கு பிறகு ஈவாவும், வால் இயும் ஓண்று சேர வேண்டுமென நாம நினைக்க ஆரம்பித்துவிடுகிறோம்.

எதிர்காலத்தில் பூமியில் நாம் போடும் குப்பைகளாலும், வான்வெளியில் சாடிலைட்டுகளாக நாம் அனுப்பி வைக்கும் விண்கலங்களும் வான் வெளி குப்பைகளாக உருமாருகிற்து என்பதை தெளிவுபட உறைக்கிறது இந்த படம்

இது ஓரு டோண்ட் மிஸ் படம்
Post a Comment

3 comments:

Bleachingpowder said...

படம் நல்லாருக்கும் போலிருக்கே, நம்ம ஊர்ல படம் ரீலீஸ் ஆயிடூச்சா

லக்கிலுக் said...

சத்யம் காம்ப்ளக்ஸில் ஓடுகிறது. பார்க்க வேண்டும் :-)

Cable சங்கர் said...

கட்டாயம் பாருங்கள் லக்கி