Posts

Showing posts with the label தமிழன்

TAMILAN என்று சொல்லடா.. தலை குனிந்து நில்லடா..

Image
தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா.. இப்படி சோல்லி சொல்லியே நம்மள உசுப்பேத்தி விட்டுராங்க.. அப்படி உசுப்பேரிய நாம தமிழை தவிர எதையும் படிக்காம எத்தனை பேர் தமிழ்நாட்டு பார்டர் தாண்ட முடியாம இருக்கோம்? அது சரி அதைப்பத்தி நமக்கென்ன கவலை..அறிவுரை எல்லாம் மத்தவங்களூக்கு தானே.. தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்று முதல்வர் அறிவித்தவுடன், தமிழில் பெயர் தேடி அலைய ஆரம்பித்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தமிழிலேயே அர்த்தம் சொன்னால்தான் புரியும்படியான் தலைப்புகளை வைத்து வரிவிலக்கு பெற்று வருகிறார்கள்.. (உ.த: வாரணம் ஆயிரம்(ஆயிரம் யானைகள்) ஏகன் (சிவன், எல்லாம் அறிந்தவ்ன்)). அதே போல் அந்த படங்களை தயாரிக்கும், விநியோக செய்கிற நிறுவனங்களின் பெயர்களும் தமிழில் இருந்தால்தான் வரிவிலக்கு என்று அறிவித்தால் நன்றாய் இருக்கும் போலருக்கு. நம் முதல்வரின் வாரிசுகள் நடத்தும் அத்தனை நிறுவனங்களூக்கும் ஆங்கிலத்திலேயே பெயர் வைத்திருக்கிறார்கள். 1. Suntv 2. Ktv 3. Sun Music 4. Sun news மேற்படி பெயர்களை வைத்த பேரன்களுக்கும், ந்ம் தலைவருக்கும் இப்போது தொடர்பு இல்லாவிட்டாலும்,மாறன் சகோ...