கொத்த பங்காரு லோகம் - திரை விமர்சனம்
”கொத்த பங்காரு லோகம்”ன்னா “புதிய தங்க உலகம்”ம்னு அர்த்தம்.. ஹாப்பி டேஸ் ஹீரோ..வருண் சந்தேஷ், புசு,புசுவென பசுங்கன்று குட்டி போல சுவேதா பிரசாத், அலட்டாமல் மனதை அள்ளும் பிரகாஷ்ராஜ், அமைதியான அழகான அம்மா ஜெயசுதா.. மைக்கேல்ஜே. மேயரின் இனிய இயல்பான இசை.. இவை எல்லாம் சேர்ந்து நம்மை புதிய் உலகுக்கு அழைத்து செல்ல முயன்றிருக்கிறார்கள். படத்தின் ஆரம்ப காட்சியில் ஓரு தாய் தன் குழந்தையை மேலே தூக்கி போட்டு பிடிப்பது போல் வரும் காட்சி அப்படியே ஃபிரிஸ் ஆக.. வாய்ஸ் ஓவரில்.. எல்லாருக்குமே மேலேர்ந்து கீழே விழுந்துவோமேன்னு நினைச்சாலே பயந்துடுவாங்க.. ஆனா குழந்தை மட்டும் தான் சிரிக்கும், ஏன்னா.. அதுக்கு தன் அம்மா நம்மை பிடிச்சிருவாங்கன்னு ஓரு நம்பிக்கை, அது போல குழந்தையை நாம விடமாட்டோம்னு அம்மாவோட நம்பிக்கை.. இப்படித்தான் என் குழந்தைய வளர்த்தேன்னு ஓரு ஜெயசுதாவோட தன் நினைவுகளை பின்னோக்கி போக.. ஸ்கூல் முடித்து ரெஸிடென்ஸியல் காலேஜில் படிக்கும் வருண், அப்பா, அம்மாவின் கெடுபிடிகளோடு வளர்ந்த சுவேதா இருவரும் ஓரே காலேஜில் சேர்ந்து படிக்க ஆரம்பிக்கிறார்கள், வேறென்ன அடுத்தது காதல் தானே.. ஆம் காதல் தான் வருகிறது.. அன...