கொத்து பரோட்டா-02/05/16
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க நண்பர் ஒருவரை சந்தித்தேன். உங்கள் தொகுதியில் தி.மு.கவின் வெற்றி வாய்ப்பு எப்படி என்று பேசிக் கொண்டிருந்த போது சுரத்தே இல்லாமல் பேசினார். கீழே யாரும் வேலை செய்ய மாட்டேன்குறாங்க.. காரணம்? என்னவென்று பார்த்தால் ராஜாவை சொன்னார்கள். மேலும் பேசிக் கொண்டிருந்த போது கலைஞர் ஏன் மீண்டும் இந்த கனிமொழி, ராஜா, என பேசிக் கொண்டிருந்தவர் சட்டென உணர்ச்சிவசப்பட்டு, இந்த தயாநிதி மாறனையும் கூட கூட்டிட்டு அலையிறாரு.. போன ஆட்சியில நம்ம கட்சி பேரக் கெடுத்ததே இவனுங்க தான் இவனுங்க கூட இருந்தா எவன் நமக்கு ஓட்டுப் போடுவானுங்க என்று மிக வருத்தத்துடன் பேசினார். என்ன அப்படியே செயிச்சாலும் ஒரு 140 சீட்டுக்குள்ள தான் வருமென்றார். அவரின் வருத்தம் நியாயமாத்தான் இருக்கு. @@@@@@@@@@@@@@@@ ஞாயிறன்று மகன்களுடன் ஒய்.எம்.சி.ஏ நீச்சல் குளத்திற்கு போயிருந்தேன். அவ்வளவாக கூட்டமில்லை. 150 ரூபாய் அனுமதிக் கட்டணம் ஒரு மணி நேரத்திற்கு. பல வருடங்களுக்கு பிறகு நீச்சல் அடித்ததில் மகிழ்ச்சி. தண்ணீரை விட்டு வெளியே வந்ததும் பகபகவென பசித்தது. பேலியோவாய் ஏதுமில்லாததால் வேறு வழியில்லாமல் வரும் வழியில் ஒரு ஹோட்ட...