Thottal Thodarum

May 2, 2016

கொத்து பரோட்டா-02/05/16

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க நண்பர் ஒருவரை சந்தித்தேன். உங்கள் தொகுதியில் தி.மு.கவின் வெற்றி வாய்ப்பு எப்படி என்று பேசிக் கொண்டிருந்த போது சுரத்தே இல்லாமல் பேசினார். கீழே யாரும் வேலை செய்ய மாட்டேன்குறாங்க.. காரணம்? என்னவென்று பார்த்தால் ராஜாவை சொன்னார்கள். மேலும் பேசிக் கொண்டிருந்த போது கலைஞர் ஏன் மீண்டும் இந்த கனிமொழி, ராஜா, என பேசிக் கொண்டிருந்தவர் சட்டென உணர்ச்சிவசப்பட்டு, இந்த தயாநிதி மாறனையும் கூட கூட்டிட்டு அலையிறாரு.. போன ஆட்சியில நம்ம கட்சி பேரக் கெடுத்ததே இவனுங்க தான் இவனுங்க கூட இருந்தா எவன் நமக்கு ஓட்டுப் போடுவானுங்க என்று மிக வருத்தத்துடன் பேசினார். என்ன அப்படியே செயிச்சாலும் ஒரு 140 சீட்டுக்குள்ள தான் வருமென்றார். அவரின் வருத்தம் நியாயமாத்தான் இருக்கு.
@@@@@@@@@@@@@@@@
ஞாயிறன்று மகன்களுடன் ஒய்.எம்.சி.ஏ நீச்சல் குளத்திற்கு போயிருந்தேன். அவ்வளவாக கூட்டமில்லை. 150 ரூபாய் அனுமதிக் கட்டணம் ஒரு மணி நேரத்திற்கு. பல வருடங்களுக்கு பிறகு நீச்சல் அடித்ததில் மகிழ்ச்சி. தண்ணீரை விட்டு வெளியே வந்ததும் பகபகவென பசித்தது. பேலியோவாய் ஏதுமில்லாததால் வேறு வழியில்லாமல் வரும் வழியில் ஒரு ஹோட்டலில் ஒரே ஒரு இட்லி மட்டும் சாப்பிட்டுவிட்டு, க்ரீன் டீ அருந்தினேன். செய்தி நான் இட்லி சாப்பிட்டதைப் பற்றியல்ல. சென்னையில் மிக நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வரும் நீச்சல் குளங்களில் ஒய்.எம்.சி.ஏ நீச்சல் குளமும் ஒன்று. நீச்சல் பயிற்சியும் அளிக்கிறார்கள். நான் பல வருடங்களுக்கு முன் அங்கே தான் கற்றுக் கொண்டேன். என் பையன்களும் அங்கே தான். நன்கு பராமரிக்கப்பட்டும், சகாய விலையிலும் நீச்சலடிக்க.. ரெகமெண்டேஷனுக்காக்த்தான் இந்த பதிவு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மனிதன்
ஜாலி எல்.எல்.பியின் ரீமேக். பெரிய ட்விஸ்ட் அண்ட் டர்ன் உடைய கதையும் கிடையாது. சுவாரஸ்ய பேக்டரே படத்தில் வரும் நடிகர்களின் நடிப்பும் அதன் நைவ் தன்மையும்தான். தமிழில் எங்கே? எப்படி எடுபடப்போகிறது ? என்ற சந்தேகம் இருந்து கொண்டேயிருந்தது. அதை முதலில் தகர்த்தெறிந்தவர் ராதாரவி, அவ்வளவு கேஷுவல். கோர்ட் ப்ரோசீடிங்கை ஆங்காங்கே கொஞ்சம் நிஜ வாழ்க்கைக்கு அருகில் காட்டப்பட்டிருந்தாலும் பல இடங்களில் டெம்ப்ளேட். ஹன்சிகா தொட்டுக்க ஊறுகாய். சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் ஒன்று சிலாக்கியப்படவில்லை. பின்னணியிசை மட்டும் ஓக்க்கே. மதியின் அடக்கமான ஒளிப்பதிவு, ஒரிரு இடங்களில் தெரிபடும் வசனம். கமலக்கண்ணனாக நடித்தவரின் நடிப்பை விட, அவர் டப்பிங் பேசிய விதத்தில் அட்டகாசமான நடிப்பு. உதயநிதி ஸ்டாலின் இத்தனை படங்களுக்கு பிறகு நடிகராகியிருக்கிறார். வாழ்த்துக்கள். ப்ரகாஷ் ராஜ் ரசிக்க முடிந்தாலும் கொஞ்சம் சிவாஜியாய் ஓவர் ஆக்ட் செய்துவிட்டாரோ என்று தோன்றுகிறது. அஹா ஓஹோ சுவாரஸ்யமில்லையென்றாலும் மல்ட்டிப்ளெக்ஸுக்கு பழுதாகாது.
@@@@@@@@@@@@@@@@@
புதிய வீடியோ
@@@@@@@@@@@@@@@@@@@@
கேரளாவில் இ டிக்கெட் மூலமாய்த்தான் இனி தியேட்டர்களில் டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும் என்று சட்டம் போட்டுள்ளது. இது வரவேற்க தகுந்த ஒன்று. வரவேற்பதற்கான முதல் காரணம். கணக்கு. எத்தனை டிக்கெட் விற்பனை ஆகியிருக்கிறது. என்பதை ஆன்லைனிலேயே தெரிந்து கொள்ள முடியும். கணக்கும் சரியாய் வாங்க முடியும். அதிக விலைக்கு கூப்பன் அடித்து விற்க முடியாது. விநியோகஸ்தர்களுக்கும் சரியான கணக்கு வர வாய்ப்பு உள்ள விஷயம். இதனால் நீ ஓவர் விற்று விடுவாய் அதான் எனக்கு எம். ஜி கொடு என்று விலையை அதிகப்படுத்த முடியாது. உன் விலை இவ்வளவுதான் அதனால் இது தான் உன் சம்பளம் என்று தயாரிப்பாளர்கள் தைரியமாய் பேசலாம். என இன்னும் பல விதமான நன்மைகள் இருந்தாலும்,  தியேட்டர் விலையை கட்டுப்படுத்த சட்டமுள்ள நம்மூரில் அதை செயல்படுத்தாமல் லஞ்சம் வாங்கிக் கொண்டு முன்னூறுக்கும் நானூறுக்கும் விற்க துணை போகும் அரசாங்கமும், அதிகாரிகளும் இருக்கும் வரை.. ம்ம்ம்ஹும்.
@@@@@@@@@@@@@@@@@@@
குவாண்டிகோ
நம்மூர் பிரியங்கா சோப்ரா நடித்த அமெரிக்க சீரியல். அமெரிக்க இந்தியப் பெண்ணான ப்ரியங்கா ஒரு எப்.பி.ஐ அதிகாரி. நகரில் நடந்த மாபெரும் குண்டு வெடிப்பில் அவர் தான் குற்றவாளி என சாட்சியங்கள் இருக்க, அவர் அதிலிருந்து தப்பி, எப்படி ஒரிஜினல் குற்றவாளியை கண்டுபிடிக்கிறார் என்பது தான் சீரீஸின் கதை. ஒவ்வொரு எபிசோடிலும், எப்.பி.ஐ பயிற்சிகள் அதில் பங்கு பெறும் ஆட்களைப் பற்றிய பின் கதை, அவர்களின் காதல், மோதல், காமம், அவர்களின் பின்னணி, இதற்கிடையில் பிரியங்காவின் அப்பாவின் வாழ்க்கையில் உள்ள பின்னணி கதை. தன் தந்தையை ஏன் பிரியங்கா கொன்றார் என்பது போன்ற உப கதைகள் என கிட்டத்தட்ட 11 எபிசோட்டின் முடிவில் ப்ரியங்கா குற்றச்சாட்டிலிருந்து வெளிவந்துவிட்டாலும், ஒரிஜினல் வெடிகுண்டு வெடிக்க வைக்கிறவனை கண்டு பிடிக்க முடியவில்லை. சீசன் 2 இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. கிட்டத்தட்ட அமெரிக்க, இந்திய திரைப்பட ஹீரோ படம் போல இருக்கிறது. பிரியங்கா சோப்ரா, கிஸ்டடிக்கிறார். காரில் ஐட்டியை கழட்டி விட்டு, அறிமுகமில்லாதவனுடன் செக்ஸ் வைத்துக் கொள்கிறார். அழுகிறார். செண்டிமெண்ட் டயலாக் பேசுகிறார். அழகாயிருக்கிறார். லாஜிக்கில்லாமல் மிக் ஈஸியா பின்பக்க வழியாய் தப்பிப் போகிறார். எப்.பிஐ ஆட்களே அவர்களுடன் உள்ளடி வேலை செய்கிறார்கள் என்பது பொல எல்லாம் கதை போகிறது. ஒரு சில எபிசோடுகளுக்கு பிறகு நான் குவாண்டிகோ ட்ரைனிங்கை எல்லாம் பார்வேட் செய்துதான் பார்த்தேன் அத்தனை சுவாரஸ்யம். அப்படியான ஹிட்டு. இப்படியான ஹிட்டு என்றெல்லாம் சொன்ன அளவிற்கு ஒன்றுமேயில்லை. 
@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
were having a big argument at breakfast. He shouted at her, "You aren't so good in bed either!" then stormed off to work. By mid-morning, he decided he'd better make amends and called home. "What took you so long to answer?" he asked. "I was in bed," she replied. "What were you doing in bed this late?" "Getting a second

Post a Comment

1 comment:

none said...

140 சீட் வரும்னு உங்க நினைப்பை வெளிபடுத்தி இருக்கிறீர்கள்... என்னைக்காவது ஒரு நாள் பேரன்களை வைத்து படம் டைரக்ட் செய்ய இப்போதே தயார் ஆகி வருவதற்க்கு இந்த 140 உதவும்....