Thottal Thodarum

May 30, 2016

கொத்து பரோட்டா - 30/05/16

கேட்டால் கிடைக்கும்
மெட்ப்ளஸில் மருந்து வாங்க சென்றிருந்தேன். வலது பக்கத்தில் ஒரு விளம்பரம் போட்டிருந்தார்கள். அதில் 100 ரூபாய்க்கு பொருள் வாங்கினால் 20 ரூபாய் மதிப்புள்ள டூத் ப்ரஷ் இலவசம் என. அது போல ஓவ்வொரு தொகைக்கு ஒவ்வொரு பொருட்களை பட்டியலிட்டிருந்தார்கள். என் மனதில் என்னவோ இதில் ஒரு டகால்டி வேலையிருக்கிறது என்று தோன்றியது. எனது பில் 172 ரூபாய். சரி.. என் போன் நம்பர் கொடுத்தால் பத்து சதவிகிதம் டிஸ்கவுண்ட் தருவதாய் சொன்னார்.. இல்லையே போன் நம்பர் இல்லாமலேயே உங்க மருந்தகத்தில் 10 சதவிகிதம் டிஸ்கவுண்ட் உண்டே என்று கேட்டதற்கு யோசித்து நம்பர் இருந்தா கொடுங்களேன் என்றார். உங்க டேட்டா பேஸுல நம்பர் ஏத்துறதுக்கும் டிஸ்கவுண்டுக்கும் என்ன சம்பந்தம் என முனகிக் கொண்டே நம்பர் அளித்தேன். மருந்தையும், பில்லையும் கொடுத்தவரிடம் அந்த இலவச விளம்பரத்தைக் காட்டி அந்த பொருட்களை கொடுங்கள் என்றேன். அது டிஸ்கவுண்ட் பெற்றவர்களுக்கு கிடையாது என்றார்கள். அப்படியென்றால் இந்த விளம்பரத்திலேயே அதை போட்டிருக்கணும் இல்லையா? என்று கேட்டபோது அது வரை மொபைலில் கேம் ஆடிக் கொண்டிருந்த அந்த கடை இன்சார்ஜ் அதெல்லாம் தர முடியாது சார். என்றார். அப்படியென்றால் இந்த விளம்பரத்தை மாற்றுங்கள் என்றேன். எனக்கு இந்த பொருட்கள் தேவையில்லை. ஆனால் இதை வைத்து இன்னும் பல பேர் ஏதாவது டார்கெட் வரட்டும் என்று மேலும் சில பொருட்களை வாங்கி ஏமாறுவார்கள் இல்லையா? அல்லது அப்படி ஏமாறட்டும் என்று தான் இதை வைத்திருக்கிறீர்களா? என்று கேட்டது. உங்களால் முடிந்ததை பாருங்கள் என்றார்.. இதோ முதல் முடிந்தது.. கேட்க ஆரம்பித்திருக்கிறேன்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
வழக்கமாவே ரொம்ப பேசுறவர்னு பேர் எடுத்தவர் நிறைய பேர பேச வைக்குற மாதிரி டயலாக் எழுதுறவர் படத்துல நடிச்சா? இப்படித்தான இருக்கும்

லோ வோல்டேஜும், பத்து நிமிடத்துகொரு பேஸும் மாறி மாறி கட் ஆகிக் கொண்டிருக்கிறது. நான் 100 யூனிட்டுக்கு காசு வேணா கொடுத்துடறேன்.துங்கணும்மா

வாழ்த்துக்கள் @sameerbr @Vijay_B_Kumar உங்கள் உறியடிக்காக‪#‎உறியடி‬

ரெண்டு நாளா ராவு பூரா கரண்டு இல்லை.காலையில லோ வோல்டேஜு..அம்மா மீபாவம் தூங்கி ரெண்டு நாளாச்சு.. அம்மாவுக்கு தெரியாதா மகனோட தூக்கம் முக்யமுனு

என் கண்ணு பட எங்கேயும் விவாதம் நடந்ததா தெரியலை.. ஆனா நடந்தா மேரியே ஹைஃப்பை ஏத்துறது நல்லதா? டீசர் கதைகள்

அம்மா.. அப்படியே.. ஒரிஜினல் சரக்கு, மற்றும் பாட்டிலுகு பத்து ரூபாய் வாங்கறத தடுக்கக்கூடாதா? இப்படிக்கு குடிமகன்கள்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Game of Thrones Season  1-4
இந்த அமெரிக்க சீரீஸ் உலக பிரசித்தம். பார்லைன்னு சொன்னா ஏற இறங்க பாக்குற வரைக்கும் போயிருச்சுன்னா பாத்துக்கங்க.. ஸ்டார் வேர்ல்டு ப்ரீமியர்ல இப்ப ஆறாவது சீசன் ஓடுது. முன் சீசனையெல்லாம் ஒட்டுக்கா போட்டாங்க.. என்னால அவன் போடுற நேரத்துல பார்க்க முடியாதுங்கிறதுனால டவுன்லோட் செய்து பார்த்தாகிவிட்டது. புதியதாய் கதையெல்லாம் இல்லை.7 கிங்க்டம், வலேரியன் பாஷை, கலீசி, ட்ரையன் லைனஸ்டர், ஆர்யா, ஜான் ஸ்நோ, பாரத்தான், வைட்வாக்கர்ஸ், என ஆயிரம் கிளைக்கதைகள் கேரக்டர்கள் என இருந்தாலும் ஒரே விஷயம் நம்மூர் மகாபாரதக் கதைதான். அந்நாட்டு வரலாற்று புனைவு. முட்களால் ஆன அரியணையை அடைய நடக்கும் போராட்டம், சூது, துரோகம், காதல், காமம், நம்பிக்கை துரோகம், அக்கா தம்பி இன்ஸெட் செக்ஸ், அவர்களுடய பிள்ளை, தெரிந்தும் தெரியாதது போல நடிக்கும் ஊர் உலகம். போர், ப்ளாக் மேஜிக், லாஜிக்கல் அப்ரோச், மொத்த ஆட்டத்தையும் வழி நடத்தும் ராஜ குருக்கள், எபிசோடுக்கு பத்து இளம் பெண்கள் முழு நிர்வாணமாய் நடந்தும், யாரோடு வேண்டுமானாலும் உறவு வைத்துக் கொள்வது, கதையில் அறிமுகமாகும் எந்த பெண்ணையும், ரெண்டாவது எபிசோடில் உரித்து காட்டுவது, ஆண் - ஆண் செக்ஸ், போர், வீரம், அதீத வயலன்ஸ், மூன்று ட்ராகன்கள் என்பது போன்ற விஷயன்க்கலை மீறி, ஒவ்வொரு கேரக்டரையும் செதுக்கியிருக்கிறார்கள். அதே போல வீஷுவல்கள். ஒவ்வொரு எபிசோட் செலவையும் பார்த்தால் ரெண்டு மூன்று தமிழ் படம் நல்ல பட்ஜெட்டில் எடுக்கலாம். அந்த அளவிற்கு செட், சிஜி, மேக்கிங் எல்லாம் கலக்கல். டெக்னிக்கல் விஷயமில்லாமல், நடிப்பிலும் செம்மையாய் கேஸ்டிங் செய்திருக்கிறார்கள். ட்ரையன் லானிஸ்டராய் வரும் Peter Dinklageவின் நடிப்பு க்ளாஸ்.. நம்மூரில் இம்மாதிரியான பட்ஜெட் கொடுத்தால் பட்டையக் கிளப்பும் டிவி சீரியல்கள் வர வாய்ப்புகள் அதிகம். அதுவும் இந்தியில் வேண்டுமானால் சாத்தியம். ஒவ்வொரு சீசனிலும் யாராவது ஒரு பெரும் தலையை போட்டுவிடுவதால், இந்த சீசனில் யார் யார் எல்லாம் சாவார்கள் என்று கெஸ் செய்வதே ஒரு சுவாரஸ்யம்தான்.  இன்னும் ஒரு சீஸன் பாக்கியிருக்கிறது. முடிந்ததும், ஆறாவது சீசன் டவுன்லோட் செய்ய வேண்டும். பட் டோண்ட் மிஸ்
@@@@@@@@@@@@@@@@@@@@@
இது நம்ம ஆளு
ரொம்ப வருஷமாய் எடுத்துக் கொண்டிருப்பதால் முதலில் நயன், சிம்பு காம்பினேஷன் கொடுத்த பெப் குறைந்தே போய்விட்டது. வழக்கமாய் கல்யாணத்துக்கு முன்னான காதல் படங்கள் வரும் காலத்தில் நல்ல மெச்சூர்டான வயதில், அதுவும் கல்யாண வயதில் கல்யாணம் நிச்சயமான பிறகு காதல் வயப்படுவது லிமிடெட் சுவாரஸ்யம் உள்ள விஷயம் தான். இருந்தாலும் ஆரம்பக் காட்சிகளில் சுவாரஸ்யம் இருக்கவே செய்கிறது. சிம்பு ஆண்ட்ரியா காதல் காட்சிகள் எல்லாம் மொக்கையோ மொக்கை, தூக்கம் தூக்கியடித்து. அதன் பின்பு ஸ்கீரின் சிஜியில், போன் கூப்பிடுவது, லோடிங், யூட்பூப் லோடிங் போல் முன் பின் காட்சிகளுக்கு பயன்படுத்துவது போன்ற ஸ்லீக் ஐடியாக்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டதாலேயே மொக்கையானது. சம்பந்தமே இல்லாமல் ஆங்காங்கே பாடல்கள் வருவதும், போனில் பேசிக் கொண்டேயிருப்பதும் நம்மை கடுப்பேற்றுகிறது என்று சொன்னால் அது கொஞ்சம் அடக்கி திட்டுகிறார் போலத்தான். வழக்கமாய் காதலிபவர்கள் போனில் பேசுவதை உடனிருந்து பார்கிற்வர்களுக்கு எரிச்சலாய் இருக்கும். அதே உணர்வு இங்கேயும் நமக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. நாம் சொல்ல நினைக்கும் கமெண்டுகளை சூரியை விட்டு சொல்லச் சொல்லியிருக்கிறார்கள். அது எடுபடுகிறது. மத்தபடி தியேட்டருக்கு ஜோடி ஜோடியாய் வந்தவர்கள் அப்படியொண்ணுமில்லையே என்று அவர்கள் பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்தார்கள். மூன்று மணி நேரம் வைத்து ஆங்காங்கே செய்கிறார்கள்
##################################
உறியடி
இரண்டு வருடங்களுக்கு முன் தயாரான படம். நலன், சமீர் கைங்கர்யத்தில் உறியடியாகி மக்களின் கவனத்தை பெற்றிருக்கிறது. சம கால தமிழ் சினிமா வழியில் இல்லாமல் எடுத்த கதைக்கு நியாயமாய் இலக்கு நோக்கி போகும் திரைக்கதை, கொஞ்சம் அமெச்சூர் தனமான ஆரம்பமாய் இருந்தாலும், மெல்ல கிரிப்பிங்காய் மாறி தடக்கென நெஞ்சில் அடிக்கும் இடைவேளை சண்டைக் காட்சி. அதை கோரியோகிராப் செய்த விதம், அதன் பின் நடக்கும் ஜாதி அரசியல், அந்த அரசியலை அடிப்படையய் வைத்து நடக்கும் வன்முறை. அதை சினிமாத்தனம் இல்லாத  வன்முறையாய் மிக ராவாய் அமைத்த விதம் எல்லாமே நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் விஜயகுமாருக்கு பெருமையைத் தரும். வாழ்த்துக்கள் விஜய்குமார்
@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
How do you make your girlfriend cry while having sex?
Phone her! 
கேபிள் சங்கர்

Post a Comment

No comments: