சாப்பாட்டுக்கடை - கறி விருந்து

வளசரவாக்கத்தில் நல்ல உணவகங்கள் கொஞ்சம் குறைவுதான். நிறைய உணவங்கள் இருந்தாலும், நல்ல குவாலிட்டியான உணவகங்களை விரல் விட்டே எண்ணி விடலாம். ஜில் ஜில் ஒயின்ஸ் என்றாலே அந்த ஏரியாவில் பிரபலம். என்ன தான் அரசு டாஸ்மாக் ஆனாலும்  அந்த வகையில் இந்த கறி விருந்து ரொம்ப வருடங்களாய் நான் சென்று வரும் உணவகம். நாட்டாமை பிரியாணிக்கு பிறகு ஓரளவுக்கு நல்ல தரமான சீரக சம்பா மட்டன் பிரியாணி இங்கு சிறப்பு. மட்டன் சுக்கா, முட்டை சுக்கா, ஆகியவை நல்ல சுவை. முக்கியமாய் சுக்கா நன்கு சாப்டாக வெந்து மசாலாவுடன் கலந்து கொடுக்கபடுகிறது. மதியத்தில் ராஜ விருந்தெல்லாம் 1700 ரூபாய்க்கு நான்கைந்து பேர் சேர்ந்து சாப்பிடும் பேக்கெஜெல்லாம் இருக்கிறது. மீல்ஸில் மட்டன், சிக்கன், மீன் மீல்ஸ் அப்பளத்துடன் தருகிறார்கள். ரசமும், சிக்கன் குழம்பும் நன்றாக இருக்கிறது. ஹேவ் எ ட்ரை

Comments

மாறன் said…
This comment has been removed by the author.

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.