Thottal Thodarum

May 23, 2016

கொத்து பரோட்டா - 23/05/16

ஸ்கீரின் ப்ரெசென்ஸ் என்பது ஒரு வரம். ரஜினிக்கு, கமலுக்கு, அஜித்துக்கு, விஜய்க்கு என்று இருப்பது போல, டிவிக்களில் எஸ்.பி.பியின் ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் இன்ஸ்பயரிங் அண்ட் க்யூட் என்றே சொல்ல வேண்டும். மிக சுவாரஸ்யமாக, பேசக்கூடியவர். முடிந்த் வரை யாரையும் புண்படுத்தாமல், நகைச்சுவை இழையோட, மிகவும் தன்னடக்கத்தோடு பேசுவார். பாடுவார். மிமிக்கிரி செய்வார். அவருடய நாஸ்டால்ஜியா பயணங்கள் படு சுவாரஸ்யமாய் இருக்கும். இவரின் பேட்டிகளை பார்க்கும்போது மனதினுள் ஒரு விதமான பாஸிட்டிவ் வைப்ரேஷன் கிடைப்பதை மறுக்க முடியாது. அந்த வகையில் நடுநடுவே பாஸ்கியின் இடைச்சொருக இடைஞ்சல்கள் இருந்தாலும் அருமையான, சுகமான பேட்டி. டூ வாட்ச் இட்.
@@@@@@@@@@@@@@@@@@@@
மீண்டும் ஜெயலலிதா முதல்வராகியிருக்கிறார். ஆனால் தமிழகத்தில் முதல் முறையாய் சிறப்பான எதிர்கட்சியாக செயல்பட தி.மு.கவிற்கு வாய்ப்பு வந்திருக்கிறது. அதை ஸ்டாலின் அவர்கள் நமக்கு நாமே என தி.மு.கவிற்கு உத்வேகம் அளித்தது போல வெளிநடப்பு செய்யும் எதிர்கட்சியாய் இல்லாமல், மக்களின் பிரதிபலிப்பாய் செயல்பட்டு, கட்சிகளில் உள்ள முக்கிய மக்கள் விரோத ஆட்களை களையெடுத்து செம்மைப்படுத்தும் பொறுப்பை ஏற்கவேண்டும். வாழ்த்துகள்
@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
10 சீட்டுகூட பெறாத காங்கிரஸுக்கு சீட்டு கொடுத்ததுக்கு பதிலா தனியா நின்னுருந்தா கூட செயிச்சிருக்கலாம்

சின்னத்தம்பி படத்துல பொட்டு வைப்பாங்க.. இதுல மருதாணி. ம்ம்ம்ம்ம்

if u've seen Ulidavaru Kandanthe kannada this malayalam film wont impress u very much ‪#‎Kammatipaadam‬

Poor Story, mooshy,mooshy scenes, aimless screenplay, even maheshbabu can't save ‪#‎Brahmotsavam‬

மத்த ஊரு எக்ஸிட் போலெல்லாம் சரியா இருக்க நம்மூரு ரிசல்ட் மட்டும் இப்படி உட்டுக்கிச்சே ‪#‎அம்மாடா‬

ரிசல்ட் முடிஞசதும் கரீட்டா தெரிஞ்சுரும். 1500 கோடி எவ்வளவு தூரம் வேலை செஞ்சிருக்குன்னு

தமிழ் திரைப்படங்களின் வசூல் பற்றி இணையத்தில் சொல்லப்படும் கணக்கிற்கும் ஒரிஜினல் வசூலுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை என்பதும் உண்மை

ஆன்லைன்ல எழுதுற பில்டப் செய்யப்படுகிற அத்தனை விஷயங்களுக்கும் நிஜத்துக்கும், சம்மந்தமில்லை என்பது மீண்டும் நிருபணமாகியிருக்கிறது.

தமிழ் நாட்டில் இன்னும் நான்கு புதிய தமிழ் சேனல்கள், இரண்டு நியூஸ் சேனல்கள் ரெடி.. ‪#‎தேர்தல்ரிசல்ட்‬

நான் அன்னைகே சொன்னேன். குடிமக்கள் எல்லாம் ஒண்ணா சேர்ந்துட்டு ஒட்டுப் போட்டுற போறாங்கன்னு “பார்”ருங்க

சரக்கு கிடைக்காது இன்னைக்கே அடிச்சிக்க
யார் வந்தாலும் சரக்கு நிக்காது.
என்ன பெட்டு?
ரெண்டு புல்லு
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மீண்டும் எல்லா தியேட்டர்களிலும், அம்மாவின் பொற்கால ஆட்சி டாக்குமெண்டரி ஓட ஆர்மபித்துவிடும், வரிவிலக்கு பெற மினிமம் கட்டணமாக 5 லட்சம் என்பது எட்டு பத்து லட்சம் ஆக வாய்ப்பு இருக்கிறது. டிக்கெட் விலை அரசு அனுமதியில்லாமல் ஏற்றப்படும். மிண்டும் கண்டு கொள்ள பட மாட்டாது. மல்ட்டிப்ளெக்ஸ் கட்ட மீண்டும் பகீரத பிரயத்தனப்பட வேண்டியிருக்கும். பார்க்கிங் கொள்ளைகள்  தடுக்கப்பட மாட்டாது. சென்னைக்கும் படப்பிடிப்பு என்பது கனவாகவே போய்விடக்கூடிய காலம் விரைவில் வந்துவிடும். இன்னும் சிலபல தியேட்டர்கள் ஜாஸ் சினிமாஸின் பெயரில் ஆரம்பிக்கப்படும். அம்மா தியேட்டர் என்று தியேட்டர்கள் ஆரம்பிக்கப்பட்டு, டாஸ்மாக் கடை போல செயலபட ஆரம்பிக்கும். இப்படி இன்னும் பல விஷயங்கள் தொடரும். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் மாற்றியிருப்பார்களா? என்று கேட்டீர்களானால், மாற்று ஆட்சி வந்தால் சில விஷயங்கள் மாறலாம். என்கிற எதிர்பார்ப்பு இருக்கும். இப்போது பழைய ஆட்சியே தொடரும் போது, ஸ்டிக்கரும், அம்மா நாமமும் தொடரத்தானே செய்யும். நத்திங் டூ சேஞ்ச்..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ரம்மோஸ்தவம்
சீதாம்மா வகுட்லோ சிறுமல்லிப்பூவூ படத்தின் மூலம் குடும்ப செண்டிமெண்ட் படங்களில் சூப்பர் ஸ்டார்கள் நடிப்பது தொடர்ந்து ஆளாளுக்கு குடும்பம் தான் முக்கியம். நம் மூதாதையர்கள் தான் முக்கியம் என்பது போன்ற் கதைக்களன்களில் கூடவே ஆந்திர மசாலாவை தூவி படமெடுத்துக் கொண்டிருக்க, மகேஷ்பாபு இம்முறை முழுக்க, முழுக்க, குடும்ப செண்டிமெண்ட் படத்தில் நடித்துள்ள படம் தான் ப்ரம்மோஸ்தவம். படம் நெடுக, சுமார் 100-150 கேரக்டர் ஆர்டிஸ்டுகள், கலர் கலராய் செட்டிங், மற்றும் வீஷுவல்கள். நாலு சீனுக்கு ஒரு வாட்டி குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும், நீ அழகன், ஆம்பளைன்னா இவன் தான், இவனைப் போலஒரு  பிள்ளை இருந்தா போதும் என மகேஷ்பாபு துதி பாடிக் கொண்டேயிருக்கிறார்கள். மிகுதி காட்சிகள், மகேஷ்பாபுவை, வேதிகா, காஜல், சமந்தா ஆகியோர் காதலிப்பதாய் இம்சிக்கிறார்கள். மற்ற கேரக்டர்கள் எல்லோரும் மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதல் பாதி முடிவதற்குள் ஆறு பாட்டு வந்து விடுகிறது. ஒரு பாட்டும் வெளங்கவில்லை. மிக்கி ஜே. மேயரின் பெயிலியர். இரண்டாவது பாதியில் ஊர் ஊராய் சுற்றி தன் உறவின் முறைகளை எல்லாம் தேடி அலைந்து கண்டு பிடிக்கிறார். என்ன கருமத்துக்காக என்று தெரியவில்லை. சீக்கிரம் படத்த முடிச்சா வீட்டுக்கு போலாமே என்று நினைக்கிற அளவுக்கு மகேஷ் பாபு படம் இது வரை இருந்ததில்லை. இப்போ ஸ்டார்ட் ஆயிருக்கு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மருது
நேரிடையாகவோ, மறைமுகமாகவோ, மறவர், தேவர் என ஜாதி சொம்படிக்கும் படம் தான். சீனுக்கு சீன், என் பேரனுக்கு பதவி தானாவே வரும், அவன் அழகன், கருப்பன், பொண்ணுங்களை கும்பிடுறவன். அவன் புலி, சிங்கம், புலிவேட்டை என ஆளாளுக்கு சீனுக்கு சீன் விஷாலை சூப்பர் ஸ்டார் ஆக்குகிறேன் என்று ஆசையை தூண்டிவிட்டு வின்னர் வடிவேலுவாக்கியிருக்கிறார்கள். இடைவேளை பார்ட்டில் ஹீரோயின் அம்மா சிலம்பகாரி என்பதை தவிர புதுசாய் ஏதுமில்லை. பாட்டி பாசமெல்லாம் மொக்கையிலும் மொக்கை என்றால், அவரை கொல்ல, வில்லன், உச்சந்தலையில் விளக்கெண்ணைய் எல்லாம் தேய்த்து, ஐஸ் வாட்டரில் முக்கி, விதவை பாட்டிக்கு மருதாணியெல்லாம் வைத்து ஜன்னி வர வைத்து கொல்வது எல்லாம் மிடியலைடா சாமி.. யாரோ ஒரு புண்ணியவான் 15 கோடி கொடுத்து தியேட்டரிக்கல் ரைட்ஸ் மட்டுமே வாங்கியிருக்காராம். மருது தான் அவருக்கு பண்ட் பண்ணனும். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சில வருடங்களுக்கு முன்னால் கன்னடத்தில் Ulidavaru Kandanthe என்றொரு படம் வெளிவந்தது. மிக அழகாய் எடுக்கப்பட்ட ஒரு லைவ் படம். நண்பனைத் தேடி அலையும் போது அவர்களின் வாழ்க்கையை விவரிக்கும் நான்லீனர் படம். சிறுவயது முதலே ஒன்றாய் திர்ந்து, ரவுடியாக மாறி வாழ்க்கை பாதையே மாறிய துல்கரின் வாழ்க்கையை பின்னோக்கி பாயும் படம். மிக நிதானமாய், மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாய் ஒவ்வொரு கேரக்டராய் விவரித்து, நுணுக்கமாய் அவர்களின் சாவைப் பற்றியும், வாழ்வியலைப் பற்றியும் சொல்லிய ஒரு பக்கா ஆக்‌ஷன் படம். துரோகம், நட்பு, காதல் என போய் டிப்பிக்கல் பழிவாங்கும் பட்மாகவும் மாறும். ஆனால் அந்த மாறுதல் கொஞ்சம் லேட்டாய் வர பொறுமை அவசியம். முதலில் சொன்ன கன்னட படத்தைப் பார்க்காதவர்கள், நிச்சயம் இப்படத்தின் மேக்கிங்கை, பாராட்டுவார்கள். என்னால் முடியவில்லை. ஏனென்றால் அது க்ளாஸ்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
UTurn
லூசியா மூலம் இந்தியாவையே கன்னட சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பவன் குமார். அவரின் அடுத்த படைப்பு. யூ டர்ன். கதாநாயகி ஒரு பத்திரிக்கைக்காரி. பெங்களூர் டபுள் ரோட் ப்ரிட்ஜின் மேல் மீடியன் கல்லை எடுத்துவிட்டு இல்லீகல் யூடர்ன் செய்யும் ஆட்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுத அங்கிருக்கும் ஒர் பிச்சைக்காரனின் உதவியை பெறுகிறார். அவர் கொடுக்கும் வண்டி எண் தகவல் மூலம் அவர்களை பேட்டி எடுப்பதுதான் இவரது குறிக்கோள். அப்படி யு டர்ன் செய்தவர் தற்கொலை செய்து கொண்டிருக்க, அவரை பார்க்க சென்ற ஒருவர் என இவரை போலீஸ் சந்தேகப்படுகிறது. விசாரணையின் போது கதாநாயகியிடம் இருக்கும் வண்டி நம்பர்களின் ஓனர்கள் அனைவரும் அந்தந்த நாளிலே தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என. ஏன் அப்படியாகிறது? இவர்களுக்கும் அந்த யுடர்ன் எடுக்குமிடத்துக்கும் என்ன சம்பந்தம்.? விடை தேட கதாநாயகியே யு டர்ன் அடிக்கிறார்.. பின்பு என்ன ஆனது என்பது தான் படம். எடுத்த வேகத்தில் படம் பர பரவென போக ஆரம்பிக்கிறது. இடை வேளை ட்விஸ்ட் அட்டகாசம். அதன் பின் நடக்கும் காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாய் பில்டப் ஏற்றி.. ப்ரீ க்ளைமேக்ஸ் காட்சிகளின் போது அட போட வைத்தாலும் அட என்னடா இது கொஞ்சம் ரூட் மாறிப் போகுது போல.. என்று தோணும் அளவுக்கு இருக்க, க்ளைமேக்ஸில் பொட்டென ஒரு சாதாரண செண்டிமெண்ட் பேய் படமாய் முடிகிறது. அத்தோடு இல்லாமல் நிறைய லாஜிக்கல் கேள்விகளும் எழத்தான் செய்கிறது. பேய் படத்துல என்னய்யா லாஜிக் என்று கேட்டீர்களானால். பேய் ஏன் கொல்கிறது என்பதற்கு லாஜிக் கேட்கும் போது லாஜிக் தேவையாகத்தான் இருக்கிறது. கதாநாயகியிடம் வண்டியில் யுடர்ன் அடித்தவர்கள் அனைவரின் டீடெயிலும் கிடைத்திருந்தாலும், அவரின் அம்மா ஊரிலிருந்து வந்ததினால் போய் பேட்டி எடுக்க முடியாத நிலையில் அம்மா ஊருக்கு சென்றவுடன் பேட்டி எடுக்கப் போகும் முதல் ஆளை சந்திக்க முடியாமல் திரும்புகிறார். அன்றே அவர் தற்கொலை செய்து கொள்கிறார். சரி.. பேய் இவரை பாலோ செய்து கொன்றது என்று வைத்துக் கொண்டால் கூட.. இதற்கு முன்பு செத்த பத்து பேரை எப்படி பேய் கண்டுபிடித்தது. கடைசியாய் பேய் கதாநாயகியிடம் தன்னையும் , தன் மகளையும் கொன்ற அந்த யூடர்ன் காரன் யார் என்ற பதிலை கேட்க, அவர் அவரது அட்ரஸை போராடி கண்டுபிடித்து பலூனில் அட்ரஸ் எழுதி யுடர்ன் எடுக்கும் இடத்தில் வைக்கிறார். இதற்கு முன்னால் பத்து பேரை கொன்ற பேய்க்கு யார் உதவி செய்தார்கள்? எப்படி கண்டுபிடித்தது? இப்போது மட்டும் தங்களை கொன்றவன் யார் என்ற துரத்தலும், அதனை சார்ந்த கேள்விகளும் எதற்கு? என பல கேள்விகள் படத்தின் சுவாரஸ்யத்தை கெடுத்துவிடுகிறது. நீட் ஸ்கீரின்ப்ளே, இயல்பான நடிப்பு. அருமையான டாப் ஆங்கிள் ஷாட்கள், பொயட்டிக்கான க்ளைமேக்ஸ் எல்லாம் இருந்தும்.. யுடர்ன் கொஞ்சம் ஜெர்க் தான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
A mother is in the kitchen making dinner for her family when her daughter walks in. “Mother, where do babies come from?” The mother thinks for a few seconds and says, “Well dear, Mommy and Daddy fall in love and get married. One night they go into their bedroom, they kiss and hug, and have sex.” The daughter looks puzzled so the mother continues, “That means the daddy puts his penis in the mommy’s vagina. That’s how you get a baby, honey.” The child seems to comprehend. “Oh, I see, but the other night when I came into your room you had daddy’s penis in your mouth. What do you get when you do that?” “Jewelry, my dear. Jewelry.”
கேபிள் சங்கர்


Post a Comment

No comments: