கொத்து பரோட்டா -23/04/13
இயக்குனர், நடிகர் பார்த்திபன் அழைத்திருந்தார். ஃபேஸ்புக்கில் ஆரம்பித்து தற்கால சினிமாவை வரை மிகச் சுவாரஸ்யமாய் பேசினார். பேச்சின் நடுவே அவருக்கு போன் வர, பேசி முடித்துவிட்டு, எங்கே விட்டேன் என்று நினைவுகளை தட்டிக் கொண்டிருந்த போது எங்கே விட்டேனோ அங்கே சரியாய் ஆரம்பித்தார். செம அப்சர்வேஷன். அவரின் கிறுக்கல்கள் கவிதைகளை ஆடியோ சிடியாய் வெளியிட்டிருக்கிறார். விரைவில் திரைப்படம் இயக்கவிருக்கிறார். சந்தடி சாக்கில் அவரிடம் ஒர் கதை சொன்னேன். நன்றாக இருப்பதாய் சொன்னார். மீண்டும் சந்தித்து பேசுவோம் என்றிருக்கிறார். காத்திருக்கிறேன். மனுஷனுக்கு எங்கேயிருந்துதான் விதவிதமான பொருட்கள் கிடைக்கிறதோ.. அவர் வீட்டில் இருந்த கடிகாரம் அட்டகாசம். சில பேரின் குரலில் இருக்கும் வசீகரம் அவர்கள் எது பேசினாலும் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அதுவே சுவாரஸ்யமான விஷயங்களுடனான பார்திபனின் குரலில் என்றால் கேட்கவா வேண்டும். தனிமையான கார் பயணத்திலோ, அல்லது எதையாவது கிறுக்கிக் கொண்டிருக்கும் போதோ மெல்லியதாய் ஒர் இசையை ஒலிக்கவிட்டுக் கொண்டு வேலை செய்பவர்களுக்கு ராஜேஷ் வைத்யாவின் உணர்வுகளை நெகிழச் செய்யும் வீணையிசை மேலும் ...