எத்தன், கண்டேன், மைதானம்
எத்தன் கண்டேன், மைதானம், சுட்டும் விழிச் சுடரே ஆகிய படங்கள் இன்று வெளியாகியிருக்கின்றன. எத்தனைத் தவிர மற்ற படங்கள் எல்லாம் வெளியாகிவிட்டது. எத்தன் மட்டும் டெபிஸிட்டில் இருப்பதால் வெளியாக்வில்லையாம். பெரும்பாலான படங்களுக்கு மல்ட்டிப்ளெக்ஸ், மற்றும் சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களில் கூட டேட் கிடைக்கவில்லையாம். ஒரு ஷோவும், அரை ஷோவுமாய் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான தியேட்டர்களில் ஏற்கனவே வெற்றிகரமாய் ஓடிக் கொண்டிருக்கும், கோ, வானம், ஆகிய படங்களுடன், எங்கேயும் காதல், போன்ற படஙக்ள் ஓடுவதாலும், தெலுங்கு படங்கள் சுமார் நான்கு பெரிய தியேட்டர்களில் வெளியாகிறது. சமீபகாலமாய் தமிழ் தவிர, தெலுங்கு படங்கள் தமிழ் படங்களுக்கு ஈடாக பத்து செண்டர்களுக்கு மேல் ஓடுகிறது. கூட்டமும் வருகிறது என்பதால் பல சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்காரர்கள் அமோகமாய் வரவேற்கிறார்கள். ஆட்சி மாறியும், தமிழ் படங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்று இப்போது புலம்புவார்கள் இருக்கிறார்களா? சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்