Posts

Showing posts with the label குக்கிராமம்

சாப்பாட்டுக்கடை - குக்கிராமம்

 குக்கிராமம். பெயரே வித்யாசமாய் இருக்க அண்ணாநகரில் இருக்கிறது என்றார்கள். முழுவதும் ஆர்கானிக் உணவு மட்டுமே என்றிருக்க முதல் பயமே விலை வச்சி செய்யப் போறாங்க என்பதுதான்.  இடம் ஒரு சின்ன பார்க் போல இருந்தது. ஒரு பழைய பில்டிங்கில் உள்ளே ஆர்கானிக் பொருட்களின் ஸ்டோராகவும், வெளியே உணவகமாகவும் செயல்பட்டுக் கொண்டிருந்தது. உள்ளே நுழையும் முன்னே வாசலில் ஒரு கோயில் மணி தொங்க விட்டிருந்தார்கள். வழக்கமாய் பிட்ஸா கடைகளில் தான் இம்மாதிரி பாத்திருக்கிறேன். போகும்போது உணவும், உங்க பரிமாறலும் நன்றாக இருந்தது என்று மெட்டபராய் சொல்ல வைத்திருப்பார்கள். அது போல இங்கேயும் தொங்குகிறதே? என்று ஆச்சர்யமாய் உள்ளே போனேன்.  மெனு லிஸ்ட் எதிர்பார்த்ததை விட பெருசாகவே இருந்தது. முதலில் ஏதாவது ஸ்டார்டரிலிருந்து ஆரம்பிப்போம் என வெங்காயப்பூ ப்ரையில் ஆரம்பித்தோம். நல்ல ஆர்கானிக் வெங்க்கயத்தை போட்டு கிரிஸ்பியான ரிங்க் பக்கோடா வெங்காயம் வாயில் வைத்தவுடன் கரைந்ததால் அடுத்ததாய் புடலங்காய் செய்யப்பட்ட ஸ்டார்டர் ஆர்டர் செய்தோம். புடலங்காயை எப்படி அத்தனை சுவையாய் செய்ய முடியும் என்று தெரியவில்லை. நீர் சத்து உள்ள காய்...