மீனாட்சீ.. சாமான் நிக்காலோ.....
சாந்தி மீனாட்சியை நான் மீண்டும் பார்பேன் என்று நினைக்கவில்லை..அவள்தானா?..அவள்தானா? யெஸ்.. அவளேதான்.. எப்படி மறக்க முடியும் அவளை... அவளால் அடிவாங்கியதை எப்படி மறைக்க முடியும்? எதற்கு அடி வாங்கினேன்.. என்று தெரியாமல் நான் அலைந்ததை எப்படி மறைக்க முடியும்? நானும் ஆனந்த ராஜூம ரொம்ப நெருங்கிய நண்பர்கள் ஓவ்வொரு திங்கட்கிழமையும்.. ஆம் ஓவ்வொரு திங்கட்கிழமையும்தான்.. ஏன்னா அன்னைக்குத்தான் அவன் குடும்பத்தோடு எல்லா ஞாயித்துகிழமையும் படம் பார்த்துட்டு, அடுத்த நாள் வந்து கதை சொல்வான்..அதனால் நானும் அவனும் திங்கட்கிழமை மட்டும் ரொம்ப க்ளோஸ் ப்ரண்ட்.. அவன் கதை சொல்லும் போதே ஓரு முழு படத்தை பார்த்தா மாதிரி இருக்கும்.. காலையில முதல் ப்ரீயட் போதே ஏதாவது சாக்கு சொல்லி நானும் அவனும் கடைசி ரோவில் போய் உட்கார்திருவோம்.. அப்புறம் எங்க வேலையை ஆரம்பிச்சுடுவோம்..சத்தமே இல்லாம..(அதெப்படி சத்தமே இல்லாமன்னு..) தியேட்டர்ல போட்ட அட்வர்டைசிங் முதக் கொண்டு ஓண்ணு விடாம மியூசிக்கோட சொல்லுவான்.. அப்படி அவன் அந்த வாரம் சொன்ன படம் சூப்பர் படம் ..அந்த படத்தோட பாட்டுவேற சும்மா சூப்பர் டூப்பர் ஹிட்.. தமிழ்நாடே பத்திக்கிட்டு எறி...