Krishnam Vande Jagadgurum
பாபு பிடெக் படித்துவிட்டு தாத்தாவின் நாடக ட்ருப்பில் நடித்து வருபவன். அவனது தாத்தா அந்தக்கால பிரபல நாடக கலைஞர். தன் பேரனை வைத்து தன்னுடய கடைசி நாடகமான “கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்” என்கிற நாடகத்தை நடத்த மிகவும் ஆசைப் படுகிறார். ஆனால் பாபுவுக்கோ யு.எஸ் போகத்தான் விருப்பம். நாடகத்தில் ஈடுபட்டு வறுமையில் வாட விருப்பமில்லை என்று சொல்லிவிட, அதை தாங்காத தாத்தா இறந்துவிடுகிறார். தன்னுடய அஸ்தியை துங்கபத்ரா கரையில்தான் கரைக்க வேண்டும் என்ற அவருடய கடைசி ஆசையினால் அவருடய அஸ்தியை கரைப்பது மட்டுமில்லாமல், அவருடய நாடகத்தை அங்கேயே அரங்கேற்றுவது என்று முடிவு செய்து கிளம்புகிறான் பாபு. பெல்லாரியில் சுரங்க தொழிலில் மிகப் பெரிய மாபியாவாக வலம் வரும் ரெட்டப்பாவின் கோட்டையில் உள்ளவர்களுடன் சிறு உரசல் ஏற்படுகிறது. ரெட்டப்பாவின் சுரங்க மாபியாவை துகிலுரித்துக் காட்ட தில்லாக வரும் டிவி சேனல் ரிப்போர்ட்டராக தேவிகா வர, பாபுவுக்கும் தேவிகாவுக்கும் வழக்கம் போல காதல். ரெட்டப்பாவிற்கும் கர்நாடக சக்ரவர்த்தி என்பவனுக்கும் உள்ளூரிலேயே பிரச்சனை. இதன் நடுவில் பாபுவின் ஒரிஜினல் பிறப்புப் பற்றி அவனுக்கு தெரிய வர,...