சிங்கம்-2
ஏகப்பட்ட எதிர்பார்பு. அதை விட ஏகப்பட்ட விளம்பரமென்று அமர்களத்தோடு வெளியாகியிருக்கிற படம். போன பார்ட்டில் வேலையை ரிசைன் பண்ணிவிட்டதாய் உட்டாலக்கடி செய்து, ஸ்பெஷல் டூட்டியில் ரகசியமாய் ஜாயின் செய்து என்.சி.சி ஆபீஸாராய் வலம் வரும் இடத்திலிருந்து கதை ஆரம்பிக்கிறது. என்.சி.சி அதிகாரியாய் இருந்து கொண்டே தூத்துக்குடியில் நடக்கும் கள்ளக்கடத்தலை கண்காணித்து வருகிறார். ஒரு சுபயோக சுபதினத்தில் ஒரு முக்கியமான நிலையை சமாளிக்க, மீண்டும் போலீசாய் வந்து எல்லாரையும் மூன்றடி எகிறி பாய்ந்தடித்து எப்படி வெற்றி கொள்கிறார் எனபது தான் கதை.