Posts

Showing posts with the label மீண்டும் ஒரு காதல் கதை

Déjà vu -1

Déjà vu Translated By Priya Arun  from the Original Tamil Novella, Meendum Oru Kaadhal Kadhai by Cable Sankar

மீண்டும் ஒரு காதல் கதை -10

Image
”ஹலோ. .இஸ் ஷங்கர் ஓவர் தேர்?” என்ற அமெரிக்க ஆக்ஸண்ட் குரலை கேட்டதும் என்னுள் மின்சாரம் பாய்ச்சியதை போல ஜிவ் வென ஒரு புது ரத்தம் ஓடியது. அவளா? அவள் தானா..? இத்தனை வருடங்களுக்கு பிறகா..? நான்கைந்து  வருடங்கள் இருக்குமா? “யெஸ்” “ஹாய்.. ஐம் ஷ்ரத்தா ஹியர்..” என்ற சொல்லிவிட்டு அமைதியாய் இருந்தாள். ஷரத்தா.. ஆம ஷரத்தாவேதான். அவளுக்குத்தான் இந்த பெயரை இவ்வளவு ஸ்டைலாய் உச்சரிக்க முடியும். கர்வமாய், மந்தஹாசமாய்.. அவளால் மட்டுமே முடியும்.   அன்று போனவள்தான், அதற்கப்புறம் இப்போதுதான் பேசுகிறாள். இத்தனை வருடங்களுக்கு பிறகு அவளின் குரலை கேட்கும் போதும் உடலெல்லாம் ஒரு சிலிர்ப்பு ஓடத்தான் செய்கிறது. “யெஸ்.. ஷ்ரத்தா.. ஷங்கர் ஹியர்.. குட் டு ஹியர் யுர் வாய்ஸ்..” “இன்னும் என்னை மறக்கவில்லை இல்லையா..?. நான் உன்னை சந்திக்க வேண்டுமே..? உன்னால் ட்ரைடண்டுக்கு வரமுடியுமா?” நான் என் செல்லில் மணி பார்த்தேன். மதியத்துக்கு மேல் பெரிதாய் வேலையேதும் இல்லை. நாளை தான் ஒரு க்ளையண்டிடம் ஒரு விளம்பர பட விஷயமாய் பேச வேண்டும். “ஷ்யூர்.. ஷ்ரத்தா.. நிச்சயமா.. என்ன ரூம் நம்பர்?” “208.. உனக்காகத்தான் ...

மீண்டும் ஒரு காதல் கதை- 9

Image
”ஏய்.. என்ன பார்க்கிறாய்.. நம்ப முடியவில்லை இல்லையா..? அதான் என் அப்பா.. என் செல்ல அப்பா.. ஓகே… ஓகே.. என்னால் ஐ காண்ட் கண்ட்ரோல் மை செல்ஃப். நாளை காலை சீக்கிரமே ஆபீஸ் போய்விடுவேன். நீ நேரே ஆபீஸுக்கு வந்துவிடு, நிறைய பேச வேண்டும்.. நிறைய.. ஓகே..பாஸ்போர்ட் இல்லையென்றால் உடனே வாங்கிவிடு. அடுத்த வாரம் அப்பா வந்ததும் உன் வீட்டோடு வந்து பேசி முடித்துவிடுவோம் என்றிருக்கிறார்.” என்று துள்ளி குதித்தபடியே பேசினாள். அவளின்  உடம்பு முழுவதும் சந்தோஷம் பரவியிருந்தது நன்றாக தெரிந்தது. ஆனால் என்னால் அவளைப் போல சந்தோசப்பட முடியவில்லை. நான் அமைதியாய் இருந்ததை பார்த்து ஏதும் புரியாமல் ” ஏய்.. ஷங்கர்.. என்ன டல்லாக இருக்கிறாய். காதலித்த பெண்ணையே திருமணம் செய்யப் போகிறோமே என்று வருத்தமா..? உன் விதி அதுதான் என எழுதியிருக்கிறது” என்று விழுந்து விழுந்து சிரித்தாள். “ஓகே.. பை.. நான் என் அப்பாவிடம் இன்னும் சில விஷயஙக்ள் எல்லாம் பேச வேண்டும். உனக்கான வேலை எல்லாம் பற்றி பேச வேண்டும். என் செல்ல க்ண்ணாட்டி.. பை.. குட் நைட்.. சாரி.. குட் மார்னிங்..பை.. என்று என்னை இன்னும் இறுக்க அணைத்து, உதடு வலிக்க அழுத்...

மீண்டும் ஒரு காதல் கதை -8

Image
ஒரு சுபயோக சுபதினத்தில் எங்கள் காதல் அவளின் அண்ணனுக்கு தெரியவர, எல்லா அண்ணன்களை போல அவனும் என் பேக்ரவுண்ட் எலலாவற்றையும் விசாரித்து, என்னை போன்ற பக்கி பயலை தன் தங்கை காதலிப்பதை விரும்பாமல் என்னை ஒரு நாள் தனியாய் அழைத்துப் பேசினான். கிட்டத்தட்ட ஒரு அமெரிக்கன் தமிழ் பேசியதை போல பேசினான். என்னை கொசு போல பார்த்தான். முதல் பார்வையிலேயே அவனுக்கு என்னை பிடிக்கவில்லை என்று புரிந்தது. எந்த அண்ணனுக்கு தான் தன் தங்கையின் காதலனை பிடிக்கும்?.

மீண்டும் ஒரு காதல் கதை -6

Image
அண்ணாநகர் ரவுண்டானா வந்ததும் வண்டியை சரவணாபவன் பக்கம் நிறுத்தச்சொல்லி, அருகிலிருந்த ஒரு ப்ளாட்டை காட்டி அதில்தான் தான் இருப்பதாகவும், F4 என்றும் சொன்னாள். “ஓகே நாளை பார்க்கலாம்..பை..” என்றபடி  இறங்கியவள், சட்டென்று தோள் மீது கை போட்டு மெல்ல தன் பால் இழுத்து என் கன்னத்தில் அழுத்தமாய் “பச்சக்” என்ரு முத்தமிட்டு தன் ப்ளாட்டை நோக்கி ஓடி நின்று, “பை. ‘ என்றாள் அந்த ராட்சசி ஷ்ரத்தா. **********************

மீண்டும் ஒரு காதல் கதை -5

Image
ஷ்ரத்தாவின் நம்பரைபார்த்ததும் தூக்கமெல்லாம் பறந்து போய் துள்ளி எழுந்து  போனை எடுத்தேன். எதையும் வெளிகாட்டிக் கொள்ளாமல் “சொல்லு ஷ்ரத்தா” என்றேன்.

மீண்டும் ஒரு காதல் கதை -4

Image
எவ்வளவோ பெண்களிடம் பழகியிருக்கிறேன். ஏன் ஒன்றாய் ஒட்டியபடி வண்டியில் கூட போயிருக்கிறேன். ஆனால் இது புதுசாய் இருந்தது. உடலெங்கும் ஒரு விறு விறு உணர்ச்சி ஓடியது. அந்த சில நொடிகளில் என் இதயத் துடிப்பு எனக்கே கேட்டது, பை சொன்னபடி ஷ்ரத்தாவின் பின்னால் கிளம்பிய மீராவை, கை பிடித்திழுத்து நிறுத்தி “மீரா.. ஐ திங் ஐ லவ் ஹர்” என்றேன் ஷ்ரத்தா போவதை பார்த்தபடி. மீரா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

மீண்டும் ஒரு காதல் கதை -3

Image
வண்டியை எலக்ட்ரிக் ஸ்டார்ட் செய்து, பதட்டமில்லாமல் ஓட்டினேன். வண்டியை பார்க்கிங்கில் வைத்துவிட்டு நேரே ஏழாவது மாடிக்கு லிப்டில் ஏறி, நடந்து, அலுவலகத்தின் கதவை திறந்து, ரிஷப்ஷனில் இருந்த பெண்ணிடம் “லைக் டு மீட் மிஸ்.ஷ்ரத்தா ரெட்டி” என்றேன் ரிஷப்ஷனிஸ்ட் என்னை பார்த்தபடி இண்டர்காமில் நம்பர் ஒத்தினாள். காத்திருக்க பொறுமையில்லாமல் மீராவின் செல்லுக்கு போன் செய்தேன். “என்னடா..?” என்றாள் குரலில் கொஞ்சம் கோபத்துடன் “கொஞ்சம் ஷ்ரத்தாவை கூட்டிட்டி வெளியே வாயேன்” “ஏன் வாங்கி கட்டிட்டு போனது பத்தாதா.? வேண்டாம்டா. திரும்ப ஏதாவது பிரச்சனை ஆகப்போவுது.” “அதெல்லாம் ஆகாது. ஜஸ்ட் அவளை பார்த்து ஒரு விஷயம் சொல்லிட்டு போயிடறேன். ப்ளீஸ்.. “என்று கெஞ்சும் நேரத்தில், ரிஷப்ஷன் பெண் “சார்.. லைன் எங்கேஜ்டா இருக்கு. வெயிட் பண்ணுங்க” என்றவளை பார்த்து ‘சரி’ என்பது போல தலையாட்டிவிட்டு மீராவிடம் தொடர்ந்தேன். “ஜஸ்ட் எ மினிட்” என்று போனை மீரா கட் செய்ய, மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளியேற்றினேன். கைவிரலில் சிகரெட் சுட்ட எரிச்சல் இப்போது தெரிந்தது. ஷ்ரத்தாவும் மீராவும் வரும் வாசலை எதிர் நோக்கியிருந்தேன். ஏனோ உ...

மீண்டும் ஒரு காதல் கதை -1

Image
மீண்டும் உங்களுக்காக.. காதலர் தின ஸ்பெஷல் - ஷ்ரத்தா ”ஹலோ. .இஸ் ஷங்கர் ஓவர் தேர்?” என்ற அமெரிக்க ஆக்ஸண்ட் குரலை கேட்டதும் என்னுள் மின்சாரம் பாய்ச்சியதை போல ஜிவ் வென ஒரு புது ரத்தம் ஓடியது. அவளா? அவள் தானா..? இத்தனை வருடங்களுக்கு பிறகா..? இரண்டு மூன்று வருடங்கள் இருக்கும.? “யெஸ்”

ஒர் விமர்சனக் கடிதம்.

Image
உரைநடையின் வெற்றியை அனுபவித்தும், எழுதியும் மகிழ்கிற எழுத்து கேபிள் சங்கருடயது. ஒரு தனித்த வாசகனின் மனப் பரப்பை மீண்டுமொரு முறை ஆக்ரமிக்கிறார். தனது  நேர்த்தியான கதை சொல்லலில் தன்னுடைய கதை வயப்படுத்துகிறார். தொகுப்பும், கட்டமைப்பும், நமக்கு உற்சாகத்தை நமக்குள் மட்டுமல்ல, இளைய இணைய தலைமுறை வாசகனைத் தக்க வைக்கும் என்று கூறலாம்