ஒர் விமர்சனக் கடிதம்.

உரைநடையின் வெற்றியை அனுபவித்தும், எழுதியும் மகிழ்கிற எழுத்து கேபிள் சங்கருடயது. ஒரு தனித்த வாசகனின் மனப் பரப்பை மீண்டுமொரு முறை ஆக்ரமிக்கிறார். தனது  நேர்த்தியான கதை சொல்லலில் தன்னுடைய கதை வயப்படுத்துகிறார். தொகுப்பும், கட்டமைப்பும், நமக்கு உற்சாகத்தை நமக்குள் மட்டுமல்ல, இளைய இணைய தலைமுறை வாசகனைத் தக்க வைக்கும் என்று கூறலாம்

 Final Layout1 ஒரு படைப்பூக்கம்,தொடர்ந்த உற்சாகம், இரவில் ஊர்சுற்றுதல், மக்களின் ரசனை அறிதல் என்று ஒரு மல்டிகலரில் இத்தொகுப்பு காணப்படுகிறது. இரவு ஒரு அழகான கவிதையாக மாறுவது ஒரு எழுத்தாளருக்கு அபூர்வமல்ல. சங்கருக்கு இரவு மட்டும் கதையில் இரண்டாவது கதாநாயகனாக வருகிறது. முதல் கதாநாயகன் யார்?. சங்கரைத் தவிர யாருமில்லை எனலாம். தொகுப்பில் அனைத்து வித  பெண்கள், பெண்களின் பங்களிப்பும், உணர்வும் இல்லாமல் கதைகள் நகர்வது இல்லை. பலம் பலவீனம் இரண்டும் பெண்கள், பல்வேறு சூழல், பல்வேறு அக,புற உணர்வலைகள். அப்புறம் தலைப்புக் கதையில் சொல்லும் ஆணாதிக்க, மற்றும் பெண்ணாதிக்கம் பற்றிய புரிதல் மிகவும் புரிதலுடன் இருக்கிறது. அனுபவமற்ற, சாரமற்ற எந்த மொழித் திருகும், எழுத்தின் துலேறமும் அற்ற பல கதைகள் உள்ளன. வாழ்க சங்கர்.

ஒரு தேர்ந்த தொகுப்பில் சில கதைகள் சுமாரகவும் உள்ளது தவிர்க்க இயலாது.பரவாயில்லை. மெயின் சாப்பாடு. சிலது ஊறுகாய் அளவேனும் தேவைதான். நாளைய இயக்குனர் எனக்கு பிடித்த கதைகளில் ஒன்று. மனிதநேயம் மிளிரும் கதைகளை அன்புடன் தந்து கொண்டிருப்பது மிகப் பெரிய ஆசுவாசம். சந்திப்போம். நன்றி சங்கர்.
இப்படிக்கு
கீதாஞ்சலி (கவிஞர், சிறுகதை ஆசிரியர்)
டிஸ்கி: நன்றி கவிஞர் கீதாஞ்சலி அவர்களுக்கு
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Comments

நல்ல விமர்சனம்..வாழ்த்துகள்!
Sendhilkumar AV said…
அனுபவமற்ற, சாரமற்ற எந்த மொழித் திருகும், எழுத்தின் துலேறமும் அற்ற பல கதைகள் உள்ளன. வாழ்க சங்கர்
sorry in typing in english.
enakku puryalai..paratrangla, vaarangla nnu theriyala..tamil vocabularyla naan romba week. thularm means what ?
Sorry to bother.
I completely read the book meendum kathal kathai with full of tension to know the end. Your narration is like super fast express and 200% fit for making movie.But for short stories pls make the narration bit slow.
All the best cable ji!
Sendhilkumar
Vadivelan said…
Congrats.
வாழ்த்துக்கள் .
Unknown said…
கவிஞர் கீதாஞ்சலி அவர்களுக்கு, ழ பதிப்பகம் சார்பில் நன்றிகள்..
நல்ல விமர்சனம்... வாழ்த்துகள்!
kalil said…
வாழ்த்துகள்! thala
@செங்கோவி
நீங்களும் புத்தகத்தைபடித்துவிட்டு விமர்சனங்களை எழுதலாம் தலைவரே..

@செந்தில்குமார் ஏவி
அதெல்லாம் இலக்கிய வாதிங்க எழுதுறது தலைவரே படிச்சி கெட்டுப் போகாதீங்க..

உங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி முயன்ற வரை முயற்சிக்கிறேன்.

@வடிவேலன்
நன்றி

@காவேரிகணேஷ்
நன்றி

@சே.குமார்
நன்றி

@கலீல்
நன்றி

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்