மனு சர்மா லண்டனில் வசிக்கும் ஒரு டாக்டர். ரொம்பவும் கன்சர்வேட்டிவ், மொஹமத் ரபியின் குரலுக்கு அடிமை. இண்ட்ரோவர்ட், ஸாப்ட் ஸ்போக்கன் என்று கொஞ்சம் பழைய மோஸ்தரில் இருக்கும் இளைஞன். தனு டெல்லியில் படித்த, கான்பூர்காரி. மேற்கத்திய வாழ்கையில் ஈடுபாடுடையவள். எக்ஸ்ட்ரோவர்ட், தொண, தொண பேச்சுக்காரி, தம்மடிப்பவள், ஒல்ட் மங்க் குவாட்டரை ராவாக அடிப்பவள்,அவ்வப்போது பாய் ப்ரெண்டை மாற்றுபவள்.பெற்றோர் பார்த்து வைக்கும் கல்யாணத்தில் இண்ட்ரஸ்ட் இல்லாதவள். இப்படிப்பட்டவளை லண்டனிலிருந்து பெண் பார்க்க வருகிறான் மனு. இரு குடும்பமும் வைஷ்ணவோ தேவி கோயிலுக்கு போகும் போது, ரயிலில் தனியாய் மனுவை சந்திக்க சொல்கிறாள் தனு. ஆசையுடன் தனுவைப் பார்க்கப் போகும் மனுவின் தலையில் கல்லைத் தூக்கி போடுகிறாள். தனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டமில்லை என்றும், ஏற்கனவே ஒருவனை காதலிப்பதாகவும் அவனைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று சொல்லி, அவன் பெயரை தன் மார்பில் பச்சைக் குத்தி வைத்திருப்பதாய் காட்டுகிறாள். வேறு வழியில்லாமல் கல்யாணத்தை நிறுத்திவிட்டு வேறு பெண்களை பார்த்து நொந்துப் போய் ஊருக்கு போகிறேன் என்று கிளம்பும் போது மனுவின் நண்பன் திருமணத்துக்கு அழைக்க, மாப்பிள்ளைத் தோழனாய் போகிறான். அங்கே மணப்பெண்ணின் நெருங்கிய தோழியாய் தனு வர, மீண்டும் தன் காதலை சொல்ல முயற்சிக்கும் போது தனுவின் காதலன் ஜிம்மி ஷெர்கில் அங்கு வருகிறான். திருட்டு கல்யாணம் செய்ய முயற்சிக்கிறார்கள் தனுவும், ஜிம்மியும். மனு அவர்களை சேர்த்து வைக்க முயற்சிக்க, மனுவுக்கும் தனுவுக்கும் எப்படி திருமணம் நடந்தது?. ஜிம்மியின் கதி என்னாவாயிற்று என்பதை வெள்ளித்திரையில் காண்க.
மாதவனுக்கு அதிரடியான கேரக்டரில்லையென்றாலும் உணர்ந்து செய்திருக்கிறார். முக்கியமாய் தன் காதலிக்கே திருமணம் செய்ய ரிஜிஸ்தர் ஆபீஸ் போகும் காட்சியில் நெஞ்சைத் தொடுகிறார். மனு சர்மா கேரக்டருக்கு சரியாய் பொருந்தியிருக்கிறார்.
தனுவாக கங்கணா ராவத். சட்டென மனதை கொள்ளைக் கொள்ள வேண்டிய கேரக்டர். என்னவோ ஒட்டாமலிருக்கிறார். முக்கியமாக அவரது உதடுகளுக்கு என்னவானது? ஏதோ அரைகுறையாய் செய்யப்பட்டது போலிருக்கிறது. படம் முழுவதும் அவரின் பாடி லேங்குவேஜ் கொஞ்சம் ஆக்வேர்ட்டாகவே இருக்கிறது. இம்மாதிரியான கேரக்டர்களுக்கு இன்னும் இளைமையான, வித்யாபாலன், ப்ரியங்கா, ஷோஹல் கபூர் போன்றோரை போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். குறையெல்லாம் மீறி ஒரு எக்ஸ்ட்ரோவர்ட் பெண்ணை கண் முன் நிறுத்த முயற்சித்திருக்கிறார். ஓல்ட் மங்கை ராவாக ஒரு மூணு கட்டிங் அடித்துவிட்டு ”கஜ்ரா மொஹப்த் வாலா” என்கிற பழைய பாடலுக்கு ஒரு ஆட்டம் போடுகிறார் பாருங்கள் அடிதூள்..
பாதி படத்தில் வரும் ஜிம்மிஷெர்கிலுக்கு நல்ல ரோல். கிடைத்த சந்தர்ப்பததை சரியாக பயன்படுத்தியிருக்கிறார். மனுவின் நண்பனாய் வரும் தீபக் ஓபராலின் ந்டிப்பும் நச்சென இருக்கிறது. அதே போல் ஒளிப்பதிவும்,கிஸ்னாவின் இசையும் ஸூத்திங்.
இயக்கியவர் ஆனந்த் எல்.ராய். கதை திரைக்கதை வசனம் என்று வேறொருவர் பெயர் போட்டார்கள். படத்தின் முதல் காட்சியான பெண் பார்க்க வரும் காட்சியில் ஆர்ம்பித்து சுறுசுறுப்பாக ஓடும் திரைக்கதை, இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் தொய்ந்துதான் போகிறது. மீண்டும் க்ளைமாக்ஸ் வரும் போது எழுந்து நின்று பர்பாப்பாகிறது. படம் முழுக்க ஆங்காங்கே ரசிக்கும் படியான காட்சிகளும், பீல் குட் படங்களுக்கான க்ளீஷே காட்சிகளாய் இருந்தாலும் ரசிக்க வைக்கிறார்கள். முதல் நாள் தண்ணியடித்த மப்பிலிருக்கும் பெண்ணை உடம்பு சரியில்லை மாத்திரை கொடுத்ததில் மயக்கமாகியிருக்கிறாள் என்று சொல்லி முக்காடிட்டு அழைத்து வரும் காட்சி, கங்கணாவும் அவரது தோழியும் காதல் பற்றியும், செக்ஸைப் பற்றியும் பேசிக் கொள்ளும் காட்சியில் வசனமாகட்டும், இருவரது நடிப்புமாகட்டும் அருமை. இப்படத்தினால் அறியப்படும் நீதி என்னன்னா? ஐபிஎல், உலகக் கோப்பை சமயத்திலக் கூட சுமாரா ஒரு படம் பண்ணா நிச்சயம் ஓடுங்கிறதுதான்.
Manu Weds Thanu – A Feel good ok Movie
Comments
'அலைபாயுதே' ஹிந்தி ஆக்கம், 'ஸாத்தியா'வில் மாதவன் இல்லையே நாயகன்.
Madhavan Nala tamayanthi matrum minnale remake hero ah panni irukkare anga B'wood la.
அழகிய தீயே சாயல் இருப்பதாக உங்கள் எழுத்து சொல்கிறது... உண்மைதானோ?
மாதவனின் ஹிந்தி எண்ட்ட்ரி பத்தி நம்ம தயாரிப்பாளர் மீட்டிங்கில் இப்பதான் பேசிக்கிட்டிருந்தோம்
thanks for ur immediate response...
i really appreciate ur honesty..
most of the blogger did't care about viewer comments, once they posted they never change... but u changed after heard my word...
its quiet strange for me..
i am already big fan of ur blog, i regularly keep seeing ur blog, after this i mad about u...
keep rocking..
உங்கள் ப்ளாக் ரசிகன் நான். பதிவு போடுவதர்க்காகவே படம் பாப்பீங்களோ? நல்லா விமர்சனம் பண்ணுறீங்க. படம் பார்க்குற மாதிரி ஆசை கிளப்புறீங்க !!! உங்கள் சேவை தொடரட்டும்...
-அருண்-
எனக்கு சந்தேகமாய் இருந்ததால் தான் இருக்குமென்று போட்டேன்.நிச்சயமாய் சரியான தகவல்களை கொடுக்க கடமைப்பட்டுள்ளேன். அதற்கு உங்களைபோன்றவர்களின் அன்பும் ஆதரவும் என்னை மேலும் ஊக்குவிக்கும் நன்றி ஜி
@நண்பன்
பதிவு போடுவதற்காக நான் படம் பார்ப்பதில்லை. அப்படிப் பார்த்தால் நான் பார்த்த படத்தையெல்லாம் விமர்சனம் எழுதுவதென்றால் ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து பதிவாவது போட வேண்டியிருக்கும்
@அருண்
அது கொஞ்சம் உட்டாலக்கடி.. தமிழ், இந்தி ரெண்டும் சேர்ந்தது.. இருந்தாலும் தகவல் பிழைதான் திருத்திவிட்டேன்னே..