Thottal Thodarum

Mar 20, 2011

பதிந்ததில் பதிந்தது -2

எம்.எம்.அப்துல்லாஓண்ணுமில்ல சும்மா..
இணைய உலகில் யாருக்கும் அண்ணே என்றாலே தெரியுமளவுக்கு பிரபலம். இவர் எழுதியதினால் மட்டுமே பிரபலமில்லை. இவரிடம் ஒரு முறை பழகிவிட்டால், நிச்சயம அவரது அன்பில் நெகிழ்ந்துவிடுவார்கள். பதிவுலகில் இவரது தம்பியின் டைரிக் குறிப்புகள் மிகப் பிரபலம். அதே போல ஆணித்தரமான அரசியல் விஷயங்கள், மற்றும் பொது நல சமுதாய விஷயங்கள் என்று கலந்து கட்டி பின்னியெடுப்பவர்.|
’’அமெரிக்க ஃபுளோரிடாவில் உள்ள எதோ ஒரு பல்கலைக்கழகம் தே.மு.தி.க இயக்கத்தின் தலைவர் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு மதிப்புறு முனைவர்(டாக்டர்) பட்டம் வழங்குகின்றது.முதலில் அவருக்கு எனது வாழ்த்துகள்.பொதுவாக மதிப்புறு முனைவர் பட்டம் பெறுபவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் டாக்டர் என்ற அடைமொழியைப் போட்டுக்கொள்ளக்கூடாது என்பது அதன் விதிகளுள் ஒன்று. எனக்குத் தெரிந்து அதை மிகச் சரியாக கடைபிடிக்கும் ஒரே தலைவர் மாண்புமிகு.துணை-முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் மட்டுமே.திருச்சிக்கு ஒருமுறை அவர் வந்த போது ஒரு நிர்வாகி வரவேற்பு விளம்பரத்தில் டாக்டர்.ஸ்டாலின் என்று அடித்து இருந்தார்.அவரை அழைத்து அவ்வாறு அடிப்பது தவறு என்று அறிவுரை வழங்கியதை நேரில் கண்டிருக்கிறேன். திரு.விஜயகாந்த் என்ன செய்யப்போகிறார்??பார்ப்போம்.’’
மேலும் படிக்க http://www.mmabdulla.com/2010/12/27.html

2.மதார் “சொல்லத் துடிக்குது மனசு
மதார் என்கிற வித்யாசமான பெயர் கொண்ட இந்த இளம் பெண் குறுகிய காலத்தில் தமிழ் பதிவுலகில் பிரபலமானவர். இவரின் பதிவுகளை படித்தால் நிச்சயம் இவ்வளவு சின்ன வயதில் இவ்வளவு சீரியஸானவரா? என்று தோன்றும். ஆனால் பல சமயம் வயதுக்கே உரிய  இயல்பான துறுதுறுப்போடும் எழுதக்கூடியவர்.
"கத்தரிக்காய்க்கு கை கால் முளைச்ச மாதிரி இப்பவே வந்துட்டா "
இவை அவள் அம்மாவின் திருவாய் மொழிகள் ...........
பதிமூன்று வயதில் ஒரு நான்கரை அடி உயரத்தில் 30 கிலோ எடையுடன் கூடிய அவள் பெரிய மனுசியானபோது அதைக் கொண்டாடியதை விட கேலி பேசியதுதான் அதிகம் . எட்டாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு நடந்து கொண்டிருக்க அவளுக்கோ தேர்வு மேலேயே எண்ணம் முழுக்க இருந்தது . வகுப்பிலும் முதல் மாணவி என்பதால் தேர்வு எழுத முடியாமல் போய்விடுமோ என்பதிலேயே அவளின் கவலை முழுவதும் குடிகொண்டிருந்தது .  சகோதரன் பள்ளியில் போய் இதுவிசயமாய் கேட்க தலைமையாசிரியரும் தேர்வு கண்டிப்பாய் எழுத வேண்டும் என்று சொல்ல அவளுக்கு கேட்ட மாத்திரத்திலேயே பறப்பது போல் இருந்தது .அதுவரையிலும் கேட்ட கேலி பேச்சுக்கள் கூட அதில் காணாமல் போய்விட்டன 
மேலும் இவரின் பதிவுகளை படிக்க http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/11/blog-post.html

3. எங்கே செல்லும் பாதைகே.ஆர்.பி.செந்தில்
இவரின் சில  பதிவுகளை பார்க்கும் போது மிகவும் கோபக்காரராய் நமக்கு தோன்றும். திடீரென மனதை வருடும் கவிதை ஒன்றை போடுவார். வானத்தின் கீழ் உள்ள அத்துனை விஷயங்களின் பேரிலும் ஆவேசமாய் பயோடேட்டா எழுதுவார். இவரது பயோடேட்டா மிகவும் பிரபலம். பதினெட்டு ஆண்டுகளுக்கு மேல் சிங்கப்பூர் வாசியாய் இருந்துவிட்டு, பல நாடுகள் சுற்றியவர். சமீபத்தில் இவர் எழுதி வரும் “பணம்என்கிற தொடர் செம ஹிட்..
இது ஒரு தொடர், நிறைய மனிதர்கள் பணம் ஒன்றிற்காக மட்டுமே வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாய் செல்கிறார்கள், அப்படி சென்ற பல்வேறு நபர்கள் தங்கள் வாழ்வில் சந்தித்த அனுபவங்களின் தொகுப்பு, பல்வேறு நாடுகளுக்கு செல்கையில் நான் சந்தித்த நபர்கள் சொன்னதை உங்களுக்கு தருகிறேன்.. 

 கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் - தமிழகத்தின் பழமொழி...
 சிங்கப்பூர் டாம்பினீஸ் (TAMPINES) சிறையின்மேல் மாடியின் நீண்ட அறைக்கு வெளியே எங்களை வரிசையாக நிரவாணமாக அமரவைத்து இருந்தனர்
 மிகவும் சுவாரஸ்யமான, பதற வைக்கும் நிஜக் கதைகள். http://krpsenthil.blogspot.com/2010/07/blog-post_31.html
 4. குசும்பனின் “குசும்பு
தமிழ் கூறும் நல்லுலகில் சட்டயர் எனும் கிண்டலை யார் செய்தாலும் சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு கொஞ்சம் கூட நகைச்சுவை உணர்வற்ற ஆட்கள் இருக்கு தமிழ் பதிவுலகில், இவர் கலாய்த்தால் மட்டும் யாருக்கும் கோபமே வராது. அப்படியே வந்தாலும் மீண்டுமொரு முறை படித்தால் ரசிக்க அரம்பித்துவிடுவார்கள். அவ்வளவு குசும்பும், நையாண்டியுமாயிருக்கும் இவரது பதிவுகள். நகைச்சுவையாய் எழுதுவது என்பது அவ்வளவு சுலபமானதல்ல. அபபடியிருக்க மற்றவர்கள் மனம் நோகாதபடி எழுதுவது அதைவிட சிறப்பு.  படங்களை போட்டு அதற்கான கமெண்டுகளை போடுவது இவரது ஸ்பெஷாலிட்டி. http://kusumbuonly.blogspot.com/2010/10/blog-post_24.html

5.ஹரீஷ் நாராயணன் நான் ஒரு Dreamer
ஓர் இரவுஎன்கிற படத்தின் மூன்று இயக்குனர்களில் ஒருவர். இளைஞர். வித்யாசமாய் படமெடுக்க ஆசைப்படுபவர். அதை ஓர் இரவு படத்தின் மூலம் செய்தும் காடியவர். அமானுஷ்ய கதைகள், த்ரில்லர் வகை கதைகள் எழுதுவதில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். இவரிடமிருந்து மீண்டுமொரு வித்யாசமான படம் நிச்சயம் வரும் என்று காத்திருக்கும் நபர்களில் நானும் ஒருவன்.
இவரது “கேணிவனம்என்கிற ஒரு அமானுஷ்ய த்ரில்லர்.. அட்டகாசமாய் இருக்கும். இதோ உங்களுக்காக.. http://hareeshnarayan.blogspot.com/2010/08/blog-post.html
6. சுரேகா சுரேகா “ஒண்ணும் கண்டுபிடிக்கலைங்கோ
 நினைவில் காடுள்ள மிருகத்தை பழக்க முடியாது. நான் நினைவில் காடுள்ள மிருகம். இதோ காடு நோக்கி.. என்று  தன்னை அறிமுகப்படுத்திக் கொள்பவர். இவரின் ப்ரொபைல் மிகப் பெரியது. ஆனால் இவரது எழுத்தோ மிக எளிமையாய் இருக்கும். எதை சொன்னாலும் ஒரு கதை சொல்லும் பாணியில், மற்றவர்களுடன் பேசும் பாணியிலேயே எழுதுவது இவரது பலம். பல சமூக சிந்தனையுடனான கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எழுதுபவர்.


கலைஞரின் இலவசங்களுக்குப் பிண்ணனி என்னவென்று எல்லோருக்கும் தெரியும். என்றுமே மனிதர்கள் தன் தவறுகளை மறைக்க தானத்தில் கவனம் செலுத்துவார்கள். ஆனால், அது தன் பணத்தில்தான் இருக்கும்.  இவரோ, தன் குடும்பத்தினர் அனைவரது ஆக்கிரமிப்பும் கட்சி, சமூகம், அரசு அலுவலகங்கள் என்று சந்துபொந்தெல்லாம் வியாபித்திருப்பதை மறைக்க, இதோ இலவசம் ! அதோ இலவசம் என்று அறிவித்துக்கொண்டே இருக்கிறார். அவருக்கென்ன? சொந்தப்பணமா? அரசுதான் டாஸ்மாக் மூலம் அள்ளிக்கொடுக்கிறதே! இது உன் வீட்டைக் கொளுத்திக்கொள்கிறேன். அதில் கிடைக்கும் காப்பீட்டுத்தொகையில் உனக்கு உணவு வாங்கித்தருகிறேன் என்பதைப்போல் இருக்கிறது.
மேலும் படிக்க..  http://surekaa.blogspot.com/2010/10/blog-post.html

டிஸ்கி: பி.கே.பியின் ஊஞ்சல் இதழில் எழுதிக் கொண்டிருக்கும் பதிவர்கள் பற்றிய தொடரின் அடுத்த பகுதி.

Post a Comment

9 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

///மதிப்புறு முனைவர் பட்டம் பெறுபவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் டாக்டர் என்ற அடைமொழியைப் போட்டுக்கொள்ளக்கூடாது என்பது அதன் விதிகளுள் ஒன்று.///

நடிகர் விஜய், இப்போ டாக்டர் விஜய் என்றே அழைக்கிறார்கள்... அவரை என்ன செய்ய?


எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு

எல் கே said...

குட் :)

Unknown said...

நன்றி தலைவரே...

Ba La said...

2nd link is not working

Shanmugam Rajamanickam said...
This comment has been removed by the author.
ரப்பர் பூக்கள் (ரா.இளங்கோவன்) said...

அன்பின் சங்கர் அவர்களுக்கு உங்களுடைய வலைதளம் குறித்து எனக்கு எப்பொழுது பார்த்தாலும் மகிழ்ச்சியே.. கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைதளம் பாருங்கள்..உங்களுக்கு ஒரு அழைப்பிதழ் இருக்கு http://rubberelango.blogspot.com

மதார் said...

Thanks Uncle

DREAMER said...

இன்பாக்ஸில் திடீரென 'கேணிவனம்' குறித்த மெயில்கள் குவியவும், என்னடாவென்று பார்த்தால், நீங்கள் இங்கே 'கேணிவனம்' பற்றி எழுதியிருப்பது தெரிகிறது. மிக்க நன்றி ஜி..! நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்ற பதிவுகளையும் வாசிக்கிறேன்.

-
DREAMER

குசும்பன் said...

நன்றி கேபிளார்