Thottal Thodarum

Mar 19, 2011

முத்துக்கு முத்தாக..

muthuku_muthaga_movie_posters_wallpapers ராசு மதுரவனின் கம்பேக்கிற்கு பிறகு வரும் நான்காவது படம். பாண்டி, மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம் அடுத்து முத்துக்கு முத்தாக. மாயாண்டிக் குடும்பத்தாரின் மார்ஜின் வெற்றி, கோரிப்பாளையத்தில் வீழ்ந்துவிட, மறுபடியும், குடும்ப செண்டிமெண்டை போட்டு கலக்கியெடுத்திருக்கிறார் இயக்குனர்.
இளவரசு, சரண்யா, இவர்களுக்கு ஐந்து ஆம்புளைப் புள்ளைக, அல்லாரும் ஒண்ணு மண்ணா ஒருத்தருக்கு ஒருத்தர் வுட்டுக் கொடுக்காம பயபுள்ளைக பாசத்தில விளையாடுதுங்க, குளிக்குதுங்க, ததும்பி வழியுதுங்க. இப்படி பட்ட நேரத்தில ஒவ்வொரு புள்ளைகளுக்கும் கல்யாணம் செய்து வைக்க, அதது தனிக்குடித்தனம் போவுதுங்க. தனிதனித் குடும்பம்னு ஆனப்புறம் மருமகளுங்க சுயநலமியா மாற ஆரம்பிச்சிடுறாங்க. பொறவு என்னங்கிறதை மனசை உருக்குற மாரி ஒரு க்ளைமாக்ஸுல சொல்லியிருக்காங்க.

Muthuku_Muthaga_Movie_Stills_06
வர வர சரண்யா நடிக்கிறாங்கன்னா.. அது ஒரு பாசக் சூறாவளி கேரக்டராத்தான் இருக்கும்னு அடிச்சி சொல்லலாம் அப்படி உருகி வழியிறாங்க. இளவரசும் அதே போல் தான் ரொம்பவும் சப்ட்யூட்டா அடக்கி வாசிச்சிருக்காரு. இரண்டும் பேரும் தங்கள் கேரக்டர் உணர்ந்து நடித்திருப்பது படத்திற்கு மிகப் பெரிய பலம். மூத்த பையன் நட்ராஜ் தன் மனைவியிடம் கையாலாகாமல் நிற்கும் காட்சியிலும், அவளுடன் சண்டை போடும் காட்சியில் பேசும் வசனம் அருமை. அடுத்த ஜென்மத்திலேயாவது நீ ஆம்பளை பொறக்கணும்டி.. அப்பத்தான் ஒரு ஆம்பளையோட வலி தெரியும்ங்கிற வசனத்துக்கு தியேட்டரில் கிடைக்கும் கைத்தட்டலே சாட்சி. ஆண்களில் பெரும்பாலோனோர், மனைவிக்கும், பெற்றோருக்குமிடையே அல்லாடுவது நிதர்சன வெளிச்சம்

விக்ராந்துக்கும் மோனிக்காவிற்கும் ஒரு நல்ல லவ் ட்ராக் இருக்கிறது. வழக்கமான க்ளீஷே காட்சிகள் என்றாலும் கொஞ்சமாவது மனதில் நிற்பது இது ஒன்றுதான். மோனிகாவிற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. விக்ராந்துக்கு எப்போது ரியாக்‌ஷன்கள் எல்லாம் வரும்?
muthuku_muthaga_tamil_movie_stills_01 சிட்டி லவ்வாக வரும் ஓவியா, ஹரிஸ் காதல் காட்சிகள் அவர்களுக்கான புட்டேஜ் காட்சிகள். இவை இல்லாவிட்டால் ஓவியாவுக்கும் இன்னொரு மன்மதன் அம்பாயிருக்கும்.

ஆரம்பத்திலிருந்து வரும் நாடக காட்சிகளிலிருந்து கொஞ்சம் வெளியே வர ஒரே காரணம் சிங்கம்புலிதான். கொஞ்சம் செந்தில் நெடி அடித்தாலும் ஓகே. சூரியன் எப்.எம் சின்னத்தம்பி பெரியதம்பி புகழ் கவி பெரியதம்பி இசையமைத்து இருக்கிறார். ரெண்டு பாட்டு கேட்கும்படியாய் இருக்கு. பின்னணியிசையில் நான் சிங்காக ரெண்டு மூன்று இடங்களில் புதிதாய் யோசித்திருக்கிறார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் பெரிதாய் ஏதும் சொல்ல முடியவில்லை. ஆவரேஜ். எழுதி  இயக்கியிருப்பவர் ராசு மதுரவன். படத்தில் பல காட்சிகளில் கிளிஷேக்காட்சிகளாய் நாம் பல வருடங்களாய் பார்த்து பழகிய காட்சிகளை, இளவரசு, சரண்யாவின் இயல்பான நடிப்பால் கட்டுப் போட்டு விடுகிறார். ஆங்காங்கே வரும் துணைக்கதைகள் எல்லாம் புட்டேஜுக்குத்தான் ஆகும். முக்கியமாய் கடைசி தம்பி, கொலை எல்லாம் கொஞ்சம் கூட ஒட்டவில்லை. இந்த ஜவுளிக்கடை வீடியோ எடுக்கும் மேட்டரை விட மாட்டீங்களா? முடியலை. பாக்குற நாலு படத்தில் ஐந்து படத்தில வருது. மருமகள்கள் என்றாலே கொடுமைக்காரிகள் போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தும் காட்சிகள், எல்லாம் கொஞ்சம் எரிச்சலாகவே இருக்கிறது. எபிசோட் எபிசோடாக போகும் காட்சிகள் டிவிக்கு வேண்டுமானால் சரிப்படும். சினிமாவுக்கும் பொறுமையை சோதிக்கிறது. இதில் எல்லா நடிகர்களுக்கும், பாட்டு, பைட் என்று கட்டாய திணிப்பு ரொம்பவே சோதிக்கிறது. 
muthuku_muthaga_tamil_movie_stills_03 ஆங்காங்கு படம் பார்க்கும் ஆண்களின் மனது நெகிழ்ந்து போகும் டச்கள் அதிகம். எனக்கு ரொம்பப் பிடிச்சது க்ளைமாக்ஸின் போது இளவரசு, சரண்யாவிடம். இத்தனை வருஷம் என் கூட வாழ்ந்ததில கொஞ்சமாவது சந்தோஷமாய் வைத்திருந்தேனா? என்று கேட்கும் வசனம் தான். பெரும்பாலான தம்பதியர்களிடம் இந்த கேள்விக்கான சான்ஸோ, சாய்ஸோ வருவதில்லை என்பது என் எண்ணம். இந்த தேன்கூட்டில் கைவைக்காதீர்கள் பேனர் மேட்டர் குபிர் ரகம்.  நிச்சயம் முப்பது வயதுக்கு மேற்ப்பட்ட ஆண்களுக்கு தங்களைப் பற்றி எண்ணங்களை அசைப் போட இந்த படம் ஏதுவாக இருக்கும்.  வழக்கமாய் இம்மாதிரி படங்களை டிவி சீரியல்கள் தான் குத்தகைக்கு எடுத்திருந்தது. இப்போதெல்லாம் அவர்கள் ஒரு ஹீரோயினுக்கு மூன்று புருஷன், ரெண்டு கள்ளக் காதலன், இன்னொருத்தன் பொண்டாட்டிய தன் புருஷனுக்கு கூட்டிக் கொடுக்கிறது போன்ற குடும்ப கதைகளில் போய்விட்டதால். இதை டிவி சீரியல் என்றும் சொல்ல முடியவில்லை.
முத்துக்கு முத்தாக- ஓக்க்க்கே
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

12 comments:

காவேரிகணேஷ் said...

முத்துக்கு முத்தாக அழுகையின் ஒட்டுமொத்தம்.

காவேரிகணேஷ் said...

ஒ, மதுரை அன்பு அண்ணனின் சொந்த படம்.

Ashok D said...

//ஆண்களில் பெரும்பாலோனோர், மனைவிக்கும், பெற்றோருக்குமிடையே அல்லாடுவது நிதர்சன வெளிச்சம்//

//இத்தனை வருஷம் என் கூட வாழ்ந்ததில கொஞ்சமாவது சந்தோஷமாய் வைத்திருந்தேனா?//

:(

பிரபல பதிவர் said...

okay okay

CS. Mohan Kumar said...

ரெண்டு டவுட்டு:

அதென்னா ஓக்க்க்கே?("க்" அழுத்தி சொல்றீங்களே அது!!)

புட்டேஜ் , புட்டேஜ் ன்னு அடிக்கடி சொல்றீங்களே வாட் இஸ் திஸ்?

Thirumalai Kandasami said...

ஹ்ம்ம் ,,இந்த படம் உங்கள மாதிரி பெரியவங்களுக்கு தான் செட் ஆகும்..என்ன மாதிரி யூத்களுக்கு செட் ஆகாதுன்னு சொல்ல வரிங்க?..சரியா??

blogpaandi said...

முத்தான விமர்சனம்

gowtham் said...

hi friends try to visit this blog ... http://dhinakoothu.blogspot.com ..

R.Gopi said...

// விக்ராந்துக்கு எப்போது ரியாக்‌ஷன்கள் எல்லாம் வரும்? //

********

சங்கர் ஜி....

விக்ராந்த் விஜயோட தம்பின்னு தெரிஞ்சும் இந்த கேள்வி கேக்கறீங்களே.. என்னா நக்கலுங்க உங்களுக்கு?

deepika said...

gud review cable ji!!!!! :)

Enathu Ennangal said...

//வழக்கமாய் இம்மாதிரி படங்களை டிவி சீரியல்கள் தான் குத்தகைக்கு எடுத்திருந்தது. இப்போதெல்லாம் அவர்கள் ஒரு ஹீரோயினுக்கு மூன்று புருஷன், ரெண்டு கள்ளக் காதலன், இன்னொருத்தன் பொண்டாட்டிய தன் புருஷனுக்கு கூட்டிக் கொடுக்கிறது போன்ற குடும்ப கதைகளில் போய்விட்டதால். இதை டிவி சீரியல் என்றும் சொல்ல முடியவில்லை. //

சூப்பர் டயலாக். கரெக்டா சொன்ன தல.

Marimuthu Murugan said...

//விக்ராந்த் விஜயோட தம்பின்னு தெரிஞ்சும் இந்த கேள்வி கேக்கறீங்களே.. என்னா நக்கலுங்க உங்களுக்கு?//

:)