Thottal Thodarum

Mar 15, 2011

சாப்பாட்டுக்கடை – வள்ளி மெஸ்

பதிவர், நண்பர் சஞ்செய்யின் திருமணத்திற்காக தர்மபுரி சென்றிருந்தோம். திருமணத்தன்று காலையில் மிகவும் லேட்டாகத்தான் டிபன் சாப்பிட்டிருந்ததால், மதிய சாப்பாட்டை திருமணம் நடந்த மொரப்பூரிலிருந்து தர்மபுரிக்கு வந்த பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தோம். என் நண்பர்களுக்கு போன் செய்து ”நல்ல மெஸ்ஸா இருந்தா ஒண்ணு சொல்லுங்க?” என்று கேட்ட அடுத்த விநாடி அவர்களிடமிருந்து வந்த பதில் “வள்ளி மெஸ்” தான்.

Photo0192 ரூம்பாயிடம் போய் வாங்கி வர முடியுமா என்று கேட்டால் சார் ஏற்கனவே கும்பல் இருக்கும் குறைந்தது ஒரு மணி நேரம் ஆயிரும். பேசாம போய் நின்னு சாப்ட்டு வந்திருங்க என்று சொல்ல, நானும் நண்பர் வெங்கியும், நேரில் போய் சாப்பிட்டுவிட்டு வருவதாகவும், மற்றவர்களுக்கு பார்சல் வாங்கி வருவதாகவும் சொல்லிவிட்டு அட்ரஸ் கேட்டு கிளம்பினோம்.

நெசவாளர் காலனி மெயின் ரோடில் உள்ளே நுழைந்ததும் இடது வலதென நிறைய மெஸ்கள் முளைத்திருந்தன. ரோட்டின் உள் பக்கம் கடைசியில் இருந்தது வள்ளி மெஸ். மிகச் சிறிய கடை. பதினைந்து பேருக்கு மேல் உட்கார முடியாது. வழக்கம் போல எல்லா நல்ல மெஸ்களிலும் சாப்பிட உட்காருவது போல் சாப்பிடுபவர் பக்கத்திலேயே நின்று  கொண்டு, கிடைத்த நேரத்தில் சட்டென உட்கார வேண்டும். எங்களுக்கு ஏற்கனவே அந்த பழக்கம் இருபதால் சட்டென இடம் பிடித்து ஆளுக்கொரு சாப்பாடு சொல்லி, ஒரு மட்டன்,சிக்கன், மீன், ஆம்லெட்டையும் சொல்லிவிட்டு காத்திருக்க, சாப்பாடு போட்டவுடன் தான் தெரிந்தது ஏன் இவ்வளவு மக்கள் காத்திருந்து சாப்பிடுகிறார்கள் என்று?. சிக்கன், மட்டன், மீன் குழம்பில்லாமல், ரசம், வத்தக் குழம்பு என்று எல்லா அயிட்டங்களும் அசத்தல். நன்றாக மசாலாவில் ஊற வைத்து, கல்லில் போட்டு புரட்டி எடுக்கப்பட்ட நன்கு வெந்த மட்டன், சிக்கன், மீன் அயிட்டங்களை இப்போது நினைத்தாலும் எச்சில் ஊறுகிறது. இந்த மெஸ்சின் சிறப்பம்சம் என்னவென்றால் முழுக்க முழுக்க பெண்களால் சமைக்கப்படும் கிச்சன். பார்சல் வாங்கியவர்கள் காரக்குழம்பையே ரசம் போல் குடித்தார்கள். தர்மபுரி போகிறவர்கள் நிச்சயம் இந்த மெஸ்சில் சாப்பிட மிஸ் செய்யக் கூடாது.
வள்ளி மெஸ்
நெசவாளர் காலனி
மெயின் ரோட்
தர்மபுரி.
ஹரி தியேட்டர் எதிர்புறம்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

21 comments:

sugi said...

chicken, mutton,fish and omelette?Is this enough?Now I ve found ur belly secret..:)

தமிழ்வாசி பிரகாஷ் said...

தர்மபுரி வந்தால் ருசியான உணவு கிடைக்கும். எல்லோரும் வாங்க.


எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை ரெண்டு!

பொன் மாலை பொழுது said...

// நன்றாக மசாலாவில் ஊற வைத்து, கல்லில் போட்டு புரட்டி எடுக்கப்பட்ட நன்கு வெந்த மட்டன், சிக்கன், மீன் அயிட்டங்களை இப்போது நினைத்தாலும் எச்சில் ஊறுகிறது.//

ஆத்து மாமிக்கு உம்முடைய தில்லாலங்கடி வேலைகள் தெரியுமோன்னோ? தெரியாதா...................... இரும் ஒய் மெயில் அனுப்புறேன்!

Anonymous said...

Thanks Cable. This is my friends mess and i will let him know this. He would be happy.

Regards,
Ovi

Anonymous said...

ஓ......வள்ளி மெஸ் மாதிரி ஒரு வல்லிய மெஸ் இருப்பது இந்த பாலக்காட்டு மாதவனுக்கு தெரியாம போயி..! யான் பேரரசு எடுத்த 'தர்மபுரி' மட்டும்தான் கண்டு! நிஜ தர்மபுரி பாக்கும் வாய்ப்பு இதுவரை கிட்டில்லா. எந்தா செய்யும் சாரே?

pichaikaaran said...

சாப்பாடு கடை புத்தகம் விரைவில் எதிர்பார்க்கிறேன்

ம.தி.சுதா said...

அம்புட்டு ருசியா பேஸ் பேஸ்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

shanmugavel said...

அரசு அலுவலர்கள்,ஊழியர்கள் மதிய பார்சல் அங்கேதான்.அது நல்ல அனுபவம்.விலையும் அதிகமில்லை.நானும் தர்மபுரிதான்.வர்றவங்க என்னையும் கூப்பிட்டுக்கோங்க.

குரங்குபெடல் said...

"சாப்பிடுபவர் பக்கத்திலேயே நின்று கொண்டு, கிடைத்த நேரத்தில் சட்டென உட்கார வேண்டும். எங்களுக்கு ஏற்கனவே அந்த பழக்கம் இருபதால் சட்டென இடம பிடித்து ஆளுக்கொரு சாப்பாடு சொல்லி "

நீங்கதானா . . . . அவரு . . .


நன்றி

பிரபல பதிவர் said...

அருளானந்தம் மெஸ்ஸ விடவா நல்லா இருந்துது????????

jbarani said...

It is a sweet surprise to see a review about a mess from my town.
'Valli Mess' is a house hold name for our town people. I know this mess from my school days.

'பரிவை' சே.குமார் said...

அம்புட்டு ருசியா..!!!!!!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சில இடங்களில் சில விஷயங்கள் சுவாரஸ்மாக இருக்கும்...
பகிர்வுக்கு நன்றி..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தொப்பி தொப்பி-யின் அதிரவைக்கும் உண்மைகள்..


தெரிந்துக் கொள்ள கவிதை வீதி வாங்க..

http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_15.html

Cable சங்கர் said...

@சுகுணா
அது ரெண்டு பேருக்கும் சேர்த்து.. நாங்கல்லாம் டயட்ல இருக்கோமாக்கும்.. :)

@தமிழ்வாசி
நிச்சயம்

2சுக்கு மாணிக்கம்
அட்ரஸ் தரவா?:)

Cable சங்கர் said...

!ரமேஷ்
நிச்சயம் சொல்லுங்க..

@சிவகுமார்
எந்தா இது மோனே.. நெக்ஸ்ட் டைம் கூட்டிட்டு போறாம்.

@ம.த்.சுதா
ஆமா. சுதா.

Cable சங்கர் said...

@ஷண்முகவேல்
ஆமாம் கேள்விப்பட்டேன். அடுத்த முறை வரும் போது சந்திப்போம்

@உதவி இயக்கம்
அப்ப அந்த ஆள் நீங்க தானா?

@சிவகாசி மாப்பிள்ளை
இது வேற டேஸ்ட் தலைவரே

@ஜேபரணி
மிக அருமையான் மெஸ் பரணி

Cable சங்கர் said...

@சே.குமார்
ம்

@கவிதைவீதி செள்ந்தர்
நன்றி

@

அ.சந்தர் சிங். said...

இங்கே திருப்பூர் பக்கம் குன்னத்தூர் டு பெருந்துறை செல்லும் வழியில் சீனாபுரம் என்றொரு கிராமம் உள்ளது,அங்கே UBM ஹோட்டல் உள்ளது ஒரு சாப்பாடு ருபாய் 300.00 தான்.பலவிதமான ஐட்டங்கள் உண்டு.இங்கே ஒரு முறை ருசித்தவர்கள் இந்தக் கடையை மறப்பதில்லை.

Cable சங்கர் said...

சிஎஸ். வர்ற வாட்டி திருப்பூர் வரும் போது நிச்சயம் சாப்பிட்டு விடுவோம்..

sada's said...

எனது சொந்த ஊர் தர்மபுரி தான். தர்மபுரில் மெஸ்கள் அதிகம், அதற்கு முக்கிய காரணம் வள்ளி மெஸ் தான். அவர்களை போல் நாமும் வருவோம் என்று எண்ணி பலர் கடை நடத்துக்கின்றனர்.

அதே போல் அடுத்த முறை வாய்ப்பு கிட்டினால், வள்ளி மெஸில் முட்டை சட்டினி சாப்பிட்டு பாருங்க :) (இரவு மட்டும் கிடைக்கும்)