Posts

Showing posts with the label ஓ.டி.டி.எனும் மாயவன்

ஓ.டி.டி.எனும் மாயவன் -3

ஓ.டி.டி.எனும் மாயவன் -3 இன்றைய தேதிக்கு தமிழ் நாட்டில் மீடியா ஆட்களுக்கு மத்தியில் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் எல்லாருமே சட்டென அதை நிறுத்தி விட்டு ஏன் நாம வெப்.சீரீஸ் ஆரம்பிக்க கூடாது என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். சில பலர் தயாரிபில் கூட இறங்கிவிட்டார்கள். எப்படி டிஜிட்டல் சினிமா பிரபலமான பின் முன் பின் அனுபவமில்லாதவர்கள் எல்லாம் சினிமா தயாரிப்பில் இறங்கினார்களோ, அது போல இப்போது வெப் சீரீஸ் தயாரிப்பில். இவர்களில் பெரும்பாலோருக்கு டிவி தொடருக்கும் வெப் சீரீஸுக்கும் குறைந்தபட்சம் ஆறுவித்யாசங்கள் கூட தெரியுமா என்று தெரியவில்லை. சரி.. வெப் சீரிஸ் தயாரிப்பதால் என்ன லாபம்?. எப்படி அதை சந்தைப் படுத்துவது? எவ்வளவு செலவு ஆகும் என்பது போன்ற முக்கிய கேள்வியெல்லாம் பற்றியெல்லாம் கவலைப் படாமல் ஆட்டத்தில் இறங்கியவர்களி விடுங்கள் தெரிந்து ஆட்டத்தில் இறங்கியவர்கள் சில இருக்கிறார்கள். கார்த்திக் சுப்புராஜ் தன் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் சார்பாக ஒர் வெப் சீரீஸையும், ட்ரெண்ட் லவுட் சேனல் தன்  பங்குக்கு அமெரிக்க மாப்பிள்ளை எனும் சீரீஸையும், மெட்ராஸ் செண்ட்ரல் லிவின் எனும் சீரீஸின் வெற்றிக்கு ...