Posts

Showing posts with the label புத்தக கண்காட்சி

கொத்து பரோட்டா - 20/01/14 -நடு நிசிக் கதைகள், Lucia, Dedh Ishqiya, புத்தக கண்காட்சி.

நடு நிசிக் கதைகள் -5 கட்டங்கடைசியாய் நானும் என் ஹீரோ தமனும் படம் பற்றி பேசிவிட்டு, அவரவர் வீட்டுக்கு கிளம்பினோம். வழக்கம் போல உதயம் தியேட்டர் அருகில் போலீஸ் செக்கிங். இளைஞரான போலீஸ் ஒருவர் அமைதியாய் வண்டியை நிறுத்திவிட்டு வண்டியின் பேப்பர்களையும், லைசென்சையும் கேட்டார். கொடுத்தேன். தண்ணியடித்திருக்கிறோமா இல்லையா? என்பதை கண்டுபிடிக்க மரியாதையாய் குனிந்து பேசுவதைப் போல  வாடை பிடித்தபடி பேசினார். லைசென்சையும் வண்டி ஆர்.சியையும்  விளக்குக்கு அருகில் கொண்டு போய் ஒர் நோட்டு புத்தகத்தில் எழுதிக் கொண்டார். திரும்ப பேப்பரை கொடுக்க வந்த போது “என்ன நோட் பண்றீங்க?” என்று கேட்டேன். உங்க வண்டி நம்பர், அட்ரஸ், எல்லாம் என்றபடி உங்க செல் நம்பர் சொல்லுங்க என்றார். நான் எதுக்கு? என்றேன். :”இல்ல வாங்க சொல்லியிருக்காங்க” “அதாங்க எதுக்கு கொடுக்கணும்?. நீங்க பேப்பர் கேட்டீங்க கொடுத்திட்டேன். அட்ரஸ் நோட் பண்ணிட்டீங்க அது கூட ஓகே..  லைசென்ஸ் ஓகே.. ஆனா போன் நம்பர்ங்கிறது அதுவும் செல் நம்பர்ங்கிறது ப்ரைவசியான ஒரு விஷயம். அதை எப்படி நீங்க எல்லா பேப்பரும் சரியா இருக்கிற ஆளுகிட்ட கேட்பீங்க. நான் என...

புத்தக கண்காட்சி -2

வழக்கமாய் முதல் நாளே ஆஜராகி விடுவேன். தொட்டால் தொடரும் படத்தின் டப்பிங் வேலைகள் காரணமாய் முடியவில்லை. பொங்கல் விடுமுறைக்காக எல்லாம் பேக்கப் செய்யப்பட்டதால் மாலையில் முதல் விஜயம். வழக்கம் போல வாசலிலேயே பார்க்கிங் ஏற்பாடு டூவீலர்களுக்கு. கார்களுக்கு ஊரைச் சுற்றி பின் பக்கம். ஆனால் போன முறை போல உள்ளே போகும் வழிகள் எல்லாம் தெளிவாய் வரவேற்பு வளைவுகள் எல்லாம் வைத்து அசத்தியிருந்தார்கள்.  முன் பக்க விழா மேடை இம்முறை கொஞ்சம் விசாலமாய் இருந்தது.  வழக்கம் போல் வண்டியை பார்க் செய்துவிட்டு திரும்பிய போது எழுத்தாளர் இளங்கோ அவரது மனைவியுடன் எதிர்பட்டார். சிறிது நேரம் பொதுவாய் பேசிவிட்டு கிளம்பும்போது அவரது உங்களது விமர்சனமில்லாமல் மொக்கை படத்துக்கெல்லாம் போய்  மாட்டிக் கொள்கிறோம் என்றார். அவர்கள் சென்ற பிறகு இன்னொரு நண்பர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு உங்களது சாப்பாட்டுக்கடை படித்துவிட்டு எல்லா கடைகளிலும் என் குடும்பத்துடன் சாப்பிடுவேன் என்றார்.  மகிழ்ச்சியாய் இருந்தது.

கொத்து பரோட்டா -21/01/13

Image
ஆயிரம் பஞ்சாயத்துக்களைத் தாண்டி ஒரு வழியாய் விஸ்வரூபம் வெளிவருகிறது. என்னதான் ஒரு மாதிரி கன்வின்ஸ் ஆக்கி டி.டி.எச். ஒளிபரப்பை ஒரு வாரத்திற்கு பிறகு என்று கமலை முடிவு செய்ய வைத்தாலும், ஒரு தயாரிப்பாளராய் தனக்கிருக்கும் வியாபார உரிமையை தடுக்க முடியாது என்ற நிலையை உறுதி செய்ய அவர் காம்படீஷன் கமிஷனில் கொடுத்த புகார் இன்னும் லைவ்வாகத்தான் இருக்கிறது. அந்தப் புகாரை வருகிற வாரம் காம்படீஷன் கமிஷன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்றிருக்கிறது. இதே போல மூன்று மாதங்களுக்கு முன் அஜய் தேவ்கன், யாஷ்ராஜ் கம்பெனியினால் தன் படமான சன் ஆப் சர்தாரை வெளியிட தடை செய்கிறார்கள் என்று புகார் கொடுத்திருந்தார். @@@@@@@@@@@@@@@@@@@@@@@

புத்தக கண்காட்சி நாள்-2

Image
புத்தக கண்காட்சி நாள் -2 வழக்கமாய் முதல் நாளே போய்விடுவேன். இம்முறை ரெண்டாம் நாள் சனிக்கிழமைத்தான் போக முடிந்தது. புதிய இடம். ஆனால் என் வீட்டிற்கு மிக அருகில் என்பதால் சாவகாசமாய் போனேன். மதியமே கே.ஆர்.பி அவரின் நண்பர்களோடு அங்கே போய்விட்டார். நான் ஐந்து மணிக்கு. Y.M.C.A நுழைவாயிலேயே வண்டியை பார்க்கிங் வைத்து விட ஏற்பாடு செய்திருந்தார்கள். வழக்கம் போல பார்க்கிங் கொள்ளை பத்து ரூபாய்.  ஜிம்னாஸ்டிக் செய்து கொண்டிருந்தவர்களை வேடிக்கைப் பார்க்க ஒரு கூட்டம் நின்றிருந்தது. ரெண்டொரு பேர் கை தட்டக்கூட செய்தார்கள். கிட்டத்தட்ட நெடும்தூரம் நடந்து சென்று கண்காட்சி இடத்தை அடைய வேண்டியிருந்தது. வழக்கமாய் கண்காட்சியின் வாசலில் பெரிய அளவில் மைதானம் இருக்கும். ஆனால் இம்முறை திடல் கண்காட்சியின் இடது புறத்தில் இருப்பதால் வாசல் கொஞ்சம் அடைச்சலாகவே இருக்கிறது. மிக அருகில் சாப்பிட வாங்க கேண்டீன் வேறு. ஐந்து ரூபாய் அனுமதி சீட்டு வாங்கிக் கொண்டு  உள் நுழைந்தேன். முதல் நம்பர் கடையிலிருந்து ஆரம்பித்து வேடியப்பனின் 43-44 வரும் போது கே.ஆர்.பியும், சிவக்குமாரும் இருந்தார்கள். கே.ஆர்.பியுடன் ஒ...

புத்தக வெளியீடும்… புத்தக கண்காட்சி முதல் நாளும்..

Image
சென்ற வருடம் போலவே இந்த வருடமும் என்னுடய புதிய புத்தகமான “தெர்மக்கோல் தேவதைகள்”  அதே நாலாம் தேதியன்று, புத்தக கண்காட்சிக்கு முதல் நாள் வெளியாகியது. பெங்களூர்காரர் ஹரி ஊரிலிருந்து மெனக்கெட்டு பத்து பதினைந்து  டீ ஷர்டுகளில் “தெர்மக்கோல் தேவதைகள்’ புத்தக அட்டை டிசைனை ப்ரிண்ட் செய்து எடுத்து வந்திருந்தார். படு சுவாரஸ்மான மனிதர். மூச்சுப் பயிற்சியிலிருந்து, இ- காமர்ஸ் வரைக்கும் பேசினார். என்னுடய தீவிர வாசகர் என்றார். அவர் நடத்தும் simplelife.in என்கிற இணையதளத்தை பற்றி நிறைய பேசினார்.  போகிற் போக்கில் ஒரு குட்டி நாவலுக்கான தீமை சொல்லிவிட்டு போனார். விழாவிற்கு வருவதாய் இருந்த இயக்குனர்கள் “கிருஷ்ணவேணி பஞ்சாலை”  தனபால், “அம்புலி’ இயக்குனர் ஹரீஷ் ஆகியோர் வேலை நிமித்தமாய் வர முடியாமல் போய்விட்டதற்கு வருந்தினார்கள். நிகழ்ச்சி ஆரம்பித்த சில நிமிடங்களில் மின்சாரம் போனது எனக்கு சந்தோஷமாய் இருந்தது. வழக்கமாய் என் விழாவில் இம்மாதிரியான தடங்கல்கள் ஆரம்பிக்கும் போது ஏற்படுவது செண்டிமெண்டாய் நல்ல விஷயம். என்னா ஒரு மூட நம்பிக்கைடா.. சங்கரா.. என்று திட்டுவது கேட்கிறது. பட் இட் ஹாபென...

பு.க-2

இன்றைக்கு பதிவர் நண்பர் நேசமித்ரனின் ”கார்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்” கவிதை தொகுப்பும், நண்பர் எழுத்தாளர், நடிகர், அஜயன் பாலாவின் புத்தகமும், மாலை ஆறு மணிக்கு உயிர்மையிலும், ஆழியிலும் முறையே வெளியானது. சரியாய் ஆறு மணிக்கு போக வேண்டிய நான் ஏழு மணிக்குத்தான் போனேன். அநியாய ட்ராபிக். “ழ”பதிப்பக கே.ஆர்.பி.செந்திலுக்கு போன் செய்தால் பெரும் இலக்கியவாதிகளோடு காண்டீனில் இருப்பதாக சொன்னார். நேற்றிருந்த கூட்டத்தில் கால் பங்குக்கூட இல்லை. காலார நடந்து ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கி புத்தகம் வாங்க சரியான தருணம். காண்டீனுக்கு சென்றால் கே.ஆர்.பி. ஷோபாசக்தி, சாரு, நம் சக இலக்கியவாதி உண்மைத்தமிழன், விந்தைமனிதனுடன் உட்கார்ந்திருந்தார். வழியில் லக்கி, அதிஷா, காமிக்ஸ் உலகம் விஷ்வா ஆகியோர் பணியாரத்துக்காக க்யூவில் நின்றிருக்க, நானும் கூட சேர்ந்து ஆட்டையை போட்டேன்.  ஷோபா சக்தியிடம் உ.த.. என்னைப் பற்றி சொன்னவுடன் கொத்துபரோட்டா எழுதுவாரே அவரா? என்று கேட்டார். எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. இலக்கியவாதிகளுக்கும் பரோட்டா பிடிக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய் விளங்கியது. நன்றி உ.த. பின்பு லக்க...

பதிவர் சந்திப்பு படங்கள்

Image
பதினெட்டே நாட்களில் 50,000 ஹிட்ஸுகளை கொடுத்து ஆறரை லட்சத்துக்கு உயர்த்தி அழகு பார்க்கும் அன்பு பதிவர்களுக்கும், நண்பர்களூக்கும், வாசகர்களுக்கும் நன்றி..நன்றி காவல் கோட்டம் நாவல் பிளக்ஸ் விளம்பரம் புத்தக கண்காட்சியில் ஒரு ஸ்டாலின் வெளிப்புறம் பப்ளிஷர் வாசுதேவன் வெளிநாட்டு அழகிகளுடன் கோவை பதிவர் சர்ப்பூதீன், அவிங்க ராஜா, சங்கர் பதிவர் அ.மு.செய்யதும் நானும் பப்ளிஷர் வாசுதேவனும், பப்ளிஷர் குகனும் ரோமிபாய், பப்ளிஷர் வாசு, காவேரி கணேஷ், பப்ளிஷர் குகன், கார்க்கி காவேரி கணேஷ், பப்ளீஷர் குகன், தண்டோரா Technorati Tags: பதிவர் சந்திப்பு , புத்த்க கண்காட்சி தமிலிஷிலேயும், தமிழ்மணத்துலேயும் குத்துங்க எஜமான்.. குத்துங்க

புத்தக சந்தையும்.. இன்ன பிற கதைகளும்

Image
புத்தக கண்காட்சி சந்தை 30ஆம் தேதி ஆரம்பித்தது. இரண்டு நாட்களாய் போகணும், போகணும் என்று கிளம்பி போக முடியவில்லை. கடைசியாய் மூன்றாம் தேதி பிக்ஸ் செய்து நான், தண்டோரா, அகநாழிகை என மூன்று பேராய் கிளம்பினோம். என் பைக்கை தண்டோராவின் ஆபீஸில் போட்டு விட்டு வாசுவின் காரில் சென்றடைந்தோம். பெரிதாய் கூட்டமில்லை. ஆனால் தண்டோரா நேற்றை விட கூட்டம் என்றார். இருக்கலாம் எனக்கு முன்னால் ரெண்டு நாள் அங்கே போயிருந்தார். உள்ளே சென்று கண்காட்சியை சுற்றி பார்க்கலாம் என்று கிளம்ப எத்தனிக்கையில் வாசு நேராக அவருடைய புத்தகம் விற்கும் கடைக்கு போய் பார்க்கலாம் என்று நேராய் போக போகிற வழியில் கிழக்கை தாண்டிய போது பாராவும், பாலபாரதியும் கிழக்கு பின்னால் உள்ள வழியில் தரையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். வாய்யா உட்காரு.. என்றழைத்த பா.ராவிடம் இதோ ஒரு ரவுண்ட் அடித்து விட்டு வருகிறேன் என்று சொன்னதன் பின்விளைவு பின்னால் தெரிந்தது. அண்ணன் தண்டோராவின் கவிதை ஒன்றை பதிவர் மாதவராஜ் அவரது கவிதை தொகுப்பில் வெளியிட்டிருக்க, அதை தேடி வம்சி பதிப்பகத்துக்கு போய் வாங்கி தன் கவிதை வந்திருக்கிறதா என்று பார்த்துவிட்டு, ...

சாருநிவேதிதா, வில்லு, படிக்காதவன், காதல்னா சும்மா இல்லை.. புத்தக கண்காட்சி..

Image
சென்ற வருட கடைசியிலிருந்து என் உறவினர் ஒருவருக்கு உடல் நிலை பாதிப்பால் ஒரே அலைச்சல்.. அதனால் கொஞ்சம் பிஸி.. மருத்துவமனையில் இருப்பதால் இரண்டு உபயோகம், ஒன்று பேஷண்டுக்கு, இன்னொன்று எனக்கு.. புத்தகம் படிக்க,எழுத நேரம் கிடைக்கிறது.. அதனால் தான் வில்லை இன்னும் பாக்கலை. ஆனா அதுக்குள்ள, பல பேர் பாத்துட்டு, பின்னி எடுத்திட்டிருக்காங்க.. நானும் பாத்துட்டு சொல்றேன். நேத்தைக்கு புத்தக கண்காட்சிக்கு போனேன். அங்கே லக்கி, அதிஷா போன்றவர்களை பார்த்தேன் சேர்ந்து சுற்றினோம். வாங்கிய புத்தகங்கள் ஜீரோ டிகிரி, எக்ஸ்டென்ஷியலும், பேன்சி பனியனும், மதுமிதாவின் பாம்பு கதைகள். இரண்டு முத்து காமிக்ஸ் செழியனின் உலக சினிமா டாக்டர் பிரகாஷின் இரண்டு நூல்கள் chetan baghat's one night @ call centre ஆகியவை.. திரும்பவும் போகனும்.. பாக்கலாம். இந்த வருஷம் கண்காட்சி ரொம்பவே காத்தாடுது.. ஏன்னே தெரியல.. சாருவும் நானும்.. தற்போது படித்து கொண்டிருப்பது- கள்ளி. Blogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும் உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..