Thottal Thodarum

Jan 15, 2013

புத்தக கண்காட்சி நாள்-2

புத்தக கண்காட்சி நாள் -2
வழக்கமாய் முதல் நாளே போய்விடுவேன். இம்முறை ரெண்டாம் நாள் சனிக்கிழமைத்தான் போக முடிந்தது. புதிய இடம். ஆனால் என் வீட்டிற்கு மிக அருகில் என்பதால் சாவகாசமாய் போனேன். மதியமே கே.ஆர்.பி அவரின் நண்பர்களோடு அங்கே போய்விட்டார். நான் ஐந்து மணிக்கு. Y.M.C.A நுழைவாயிலேயே வண்டியை பார்க்கிங் வைத்து விட ஏற்பாடு செய்திருந்தார்கள். வழக்கம் போல பார்க்கிங் கொள்ளை பத்து ரூபாய்.  ஜிம்னாஸ்டிக் செய்து கொண்டிருந்தவர்களை வேடிக்கைப் பார்க்க ஒரு கூட்டம் நின்றிருந்தது. ரெண்டொரு பேர் கை தட்டக்கூட செய்தார்கள். கிட்டத்தட்ட நெடும்தூரம் நடந்து சென்று கண்காட்சி இடத்தை அடைய வேண்டியிருந்தது. வழக்கமாய் கண்காட்சியின் வாசலில் பெரிய அளவில் மைதானம் இருக்கும். ஆனால் இம்முறை திடல் கண்காட்சியின் இடது புறத்தில் இருப்பதால் வாசல் கொஞ்சம் அடைச்சலாகவே இருக்கிறது. மிக அருகில் சாப்பிட வாங்க கேண்டீன் வேறு. ஐந்து ரூபாய் அனுமதி சீட்டு வாங்கிக் கொண்டு  உள் நுழைந்தேன். முதல் நம்பர் கடையிலிருந்து ஆரம்பித்து வேடியப்பனின் 43-44 வரும் போது கே.ஆர்.பியும், சிவக்குமாரும் இருந்தார்கள். கே.ஆர்.பியுடன் ஒரு முழு நடை கண்காட்சி முழுவதும் சுற்றினேன். நிறைய பழைய நண்பர்களை சந்தித்தேன். நர்சிமின் சிறுகதை தொகுப்பும், கவிதை புத்தகமும் பட்டாம்பூச்சி பதிப்பகத்தினர் வெளியிட்டிருந்தார்கள். அட்டை வடிவமைப்பு நன்றாக இருக்கிறது. படிக்க வேண்டும்.  நண்பர் ரோஸ்விக், போஹன், பத்மஜா ஆகியோர் வர, வழக்கம் போல டிஸ்கவரியில் ஜமா களை கட்ட தொடங்கியது. சென்ற முறையை விட இம்முறை என் புத்தகங்கள் டிஸ்கவரியில் மட்டுமில்லாது நிறைய கடைகளில் கிடைக்கிறது.



கேபிளின் கதை புத்தகத்தை பற்றி ஒரு பேச்சு இருப்பதற்கு காரணம் சமீபத்தில் வெளிவந்த குமுதம் விமர்சனம் என்று தெரிகிறது. நன்றி குமுதம். பா.ராவும், குகனும் வர, கூடவே அப்துல்லாவும், நானும் சேர்ந்து கொள்ள குகனின் புதிய புத்தகமான “உலக சினிமா ஒரு பார்வை” புத்தகத்தை அங்கேயே பா.ராவிடம் கொடுத்து இன்ஸ்டண்ட் வெளியீட்டு விழாவாக நடத்தினோம். பா.ராவுடன் போன நேரம் பொன். நிறைய தகவல்களாய் கொடுத்துக் கொண்டேயிருந்தார். ஜெயகாந்தனின் க்ளாஸிக் வரிசைப் பற்றி பேசினார். அதன் பின்னணி சுவாரஸ்யம். நேற்று எழுதிய அலெக்ஸ் பாண்டியன் விமர்சனத்தை, சிலாகித்தார். நன்றி பா.ரா.சார். பட்டர்ப்ளை சூர்யாவும் வந்திருந்தார்.

வழக்கம் போல் மீனாட்சி புத்தக நிலையத்தில் பழைய சுஜாதா புத்தகங்கள் 20க்கும், முப்பதுக்குமாய் சல்லீசாய் இருந்தது.  இந்த வருடமும் புத்தக கண்காட்சியில்  டிக்கெட் கிழித்து அனுப்பும் இடத்தில் இருக்கும் சபாரி ஆட்கள் திரைப்படத் துறையில் வேலை பார்க்கும் ஜூனியர் ஆர்டிஸ்ட்களாகவே இருந்தார்கள்.  எழுநூறு ரூபாய் சம்பளம், ப்ளஸ் சாப்பாட்டோடு எனும் போது சினிமா வாய்ப்பை விட நல்ல வருமானம் என்பதால் வருவதாய் சொன்னார்கள்.  கண்காட்சி முடியும் வரை இருந்து விட்டு கிளம்பினோம். முதல் நாள் என்பதால் கால்கள் வலித்தது.  பழகிரும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேபிள் சங்கர்
சமர்

Post a Comment

1 comment:

குரங்குபெடல் said...

கிளம்பிட்டாங்க அய்யா . . .


கிளம்பிட்டாங்க