புத்தகம்
திரைத்துறையில் பி.வாசுவின் படம் மூலமாய் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்பு தொலைக்காட்சி சீரியல்களில் புகழ் பெற்ற கதாநாயகனாகவும், சிறந்த் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வந்த விஜய்ஆதிராஜ் இயக்குனராய் அவதாரம் எடுத்திருக்கும் படம் புத்தகம்.
ஹீரோ தன் இரு நண்பர்களுடன் மேன்ஷனில் தங்கியிருப்பவன். அவனுக்கு ஒர் காதலி அவள் தந்தி டிவி ரிப்போர்ட்டர். ஹீரோ பாசக்காரன், நண்பேண்டா என்று உருகுகிறவன். நண்பர்களின் குடும்பத்திற்காக எதையும் செய்ய தயங்காதவன். நல்லவன். எதிர்கட்சி தலைவர் இமையவன் தன் மீது ஆளும் கட்சி கைது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு தான் அரசை ஏமாற்றி சேர்த்த பணத்தை, நெருங்கிய நண்பர் விஜய் மூலமாய் ஃபண்ட் ட்ரான்ஸ்பர் செய்யச் சொல்ல, அப்பணம் குறிப்பிட்ட நபருக்கு போகாமல் போய்விடுகிறது. விஜய் அப்பணத்தை ஆட்டையைப் போட்டு மறைத்து வைத்துவிட்டு, அது பற்றிய குறிப்பை ஒரு பொது லைப்ரரியில் உள்ள சத்திய சோதனை புத்தகத்தில் வைத்துவிட்டு தப்பித்து ஓடும் போது ஆக்சிடெண்டில் மாட்டி இறக்கிறார். ஏழு வருடங்களுக்கு பிறகு அந்த குறிப்பு ஹீரோவின் கையில் கிடைக்கிறது. ஒரு பக்கம் ஒண்ணுமில்லாதவர்களுக்கு கிடைத்த 5000 கோடி பணம். இன்னொரு பக்கம் ஜெயிலிருந்து விடுதலையான எதிர்கட்சி தலைவர் அப்பணத்தை தேடி கண்டுபிடிக்கும் பொறுப்பை ப்ரைவேட் டிடெக்டிவ் கம் கிட்டத்தட்ட ஜேம்ஸ்பாண்ட்டான ஜகபதி பாபுவிடம் ஒப்படைக்கிறார். அவர் ஒரு புறம் பணத்தை தேட, இன்னொரு புறம் பணம் போக வேண்டிய பெங்களூர்காரர் ஆட்களும் பணத்தையும், அதை வைத்திருக்கும் ஹீரொவையும் தேட, பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை.
கதையாக படித்தால் ட்விஸ்டுக்கு மேல் ட்விஸ்டாய் இருப்பது போலத்தான் இருக்கும். ஆனால் படமாய் பார்க்கும் போது ஆரம்பித்த பத்தாவது நிமிஷத்திலிருந்து வரும் கொட்டாவியை கண்ட்ரோல் செய்யவே முடியவில்லை. காஸ்டிங்கில் ஆரம்பித்து, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று எல்லா டிப்பார்ட்மெண்டிலும் குழப்பியடித்திருக்கிறார்கள். கேரக்டர்களின் மூலமாய் கதை சொல்லாமல் அவர்களை அறிமுகப்படுத்திவிட்டு அவர்களுக்குள்ளான கதையை வாய்ஸ் ஓவரிலேயே நிறைய இடங்களில் சொல்லி பயணிக்கிறார்கள். டிடெக்டிவாக வரும் ஜகபதி பாபு ஏதோ பழைய கால ஜேம்ஸ்பாண்ட் போல, ஒரு கவர்ச்சியான பெண் உதவியாளரோடு, சண்டையிடுகிறார். அடுத்தடுத்த காட்சிகளில் மிகச் சுலபமாய் எல்லா க்ளூக்களையும் கண்டு பிடிக்கிறார். உடன் வரும் பெண் ஹி..ஹி.. நன்றாக இருக்கிறார். அவ்வப்போது நரேன் வைஜெய்ந்தி போல கடித்துக் கொள்கிறார்கள். “I Hate Violence" என்று பஞ்ச் டயலாக் பேசிக் கொண்டு, துப்பாக்கியால் சுடுகிறார், ஓங்கி நடு மூக்கில் குத்துகிறார். நகைச்சுவை என்கிற பெயரில் ஆங்காங்கே மனோபாலா கடிக்கிறார்.
ஆர்யாவின் தம்பி ஆர்யா போலவே இருக்க முயற்சித்திருக்கிறார். உடன் வரும் சந்தான பாரதியின் மகன் ஓகே.. மற்றொரு நண்பர் அரை குறை இங்கிலீஷில் பேசுவது ஆங்காங்கே சுவாரஸ்யம். கதாநாயகி பார்க்க ரம்யமாய் இருக்கிறார். நாலு சீனுக்கு ஒரு முறை ஹீரொவிடம் கோபித்துக் கொண்டு போகிறார்.
ஜேம்ஸ் வசந்தனின் இசையில் ஒரே ஒரு பாடல் மட்டும் ஓகே. அதுவும் அதே கண்கள் இரண்டால் சாயல் கொண்ட வெஸ்டர்னில். பின்னணியிசை என்பதைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். காட்சிக்கு ஏற்றபடி இசையைமைப்பதுதான் என்று இது வரை நினைத்திருந்தேன். ஆனால் தனியாய் ஸோலோவாக ஃபீல் செய்து இசையமைக்கலாம் என்பதை இப்படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன். ஒளிப்பதிவு லஷ்மண்.
ஹீரோயினின் அப்பா தூக்குப் போட்டுக் கொண்டதற்கு காரணம் அவருடய மாமா என்பதும், மாமா ஏன் அப்படி செய்தார் என்பதற்கு காரணம். மாமாவே ஹீரோயினுக்கு பையன் பார்ப்பது போன்ற கிளைக் கதைகள் வசனங்களாலேயே சொல்லப்படுவது எதற்காக? இந்த செய்திகளினால் கதைக்கு என்ன பயன்?. ஹீரோ நல்லவன் ஓகே. அதற்காக செண்டிமெண்டின் உச்சத்திற்கு கொண்டு போய், சந்தானபாரதியின் தாய்க்கு உடல் நிலை சரியில்லை, ஆப்பரேஷன், அங்கே போனால் இன்னொரு நண்பனின் அக்கா வாழாவெட்டியாய் இருப்பது. அவர்களின் வாழ்க்கைக்கு உதவுவது. மூன்று நண்பர்களும் கட்டிப்பிடித்து ஓவென அழுது நெஞ்சை நக்குவது போன்ற காட்சிகள் இம்மாதிரியான கான் ஃபிலிமுக்கு சற்றும் பொருந்தாத திரைக்கதை.
அதே போல வசனங்கள். தேவையில்லாத இடத்தில் எல்லாம் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். வில்லனினிடம் மாட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கும் நண்பர்களை காப்பாற்ற வரும் ஹீரோவை பார்த்ததும் “தோ.. அவனே வந்துட்டாண்டா.” என்பதும், டிவி சேனல் ஓனர் “தேசப்பற்றைப் பற்றியும், நாடு வன்முறைக்கு போய்க் கொண்டிருப்பதை மீண்டும், மீண்டும் பேசியே மாய்வதும், சின்னச் சின்ன வசனங்களில், ரியாக்ஷனில் சொல்ல வேண்டியதை மாய்ந்து மாய்ந்து பேசுவது முடியலை. 5000 கோடி பணம் சாதாரண இளைஞர்கள் கையில் சிக்குகிறது. ஒரு பக்கம் பணத்துக்கு சொந்தக்காரன், ஆள் வைத்து கண்டுபிடிக்க தேட, இன்னொரு பக்கம் இன்னொரு கும்பல், இதன் நடுவில் இளைஞர்கள் எவ்வளவு சுவாரஸ்யமாய் திரைக்கதை அமைத்திருக்க முடியும். நாடக பாணி வசனங்கள், காட்சிகள், அவ்வப்போது இடையூறும் பாடல்கள் என்று எல்லாமே மைனஸாகப் போய்விட்டது வருத்தமே. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் விஜய் ஆதிராஜ்
கேபிள் சங்கர்
Comments
கலகலப்பு சென்ற ஆண்டின் வெற்றிப்படங்களில் ஒன்று என்று நீங்கள் சொல்லிய போது உங்களை கேலி செய்தவர்கள் பலர்.
இன்று ரெடிஃப் வெளியிட்டுள்ள சென்ற ஆண்டின் வெற்றிப் படங்கள் வரிசையில் முதல் ஐந்தில் கலகலப்பு படமும் ஒன்று.
மற்ற படங்கள் துப்பாக்கி, ஒரு கல் ஒரு கண்ணாடி, நான் ஈ மற்றும் சுந்தர பாண்டியன்.
வாழ்த்துகள்.
To watch tamil movies online www.funtamilvideos.com