பத்தாயிரம் கோடி
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஒரு கெமிக்கலை கண்டு பிடிக்கிறார்கள். அந்த கெமிக்கலை உடலில் பூசிக் கொண்டால் அந்த இடம் கண்களுக்கு புலப்படாமல் போய்விட, அதை வைத்து கல்லூரி மாணவர் கோகுலும், அவரது நண்பர்களும் பத்தாயிரம் கோடி ரூபாயை சுட்டுவிடுகிறார்கள். அதை கண்டு பிடிக்க, தமிழக போலீஸ் துறை சங்கர்லால் எனும் விவேக் அண்ட் டீமை அனுப்புகிறது. பத்தாயிரம் கோடியை ஒரு காரில் வைத்துக் கொண்டு ஊர் ஊராய் மாணவர்கள் சுற்ற, அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் காமெடி, ஜேம்ஸ்பாண்ட் விவேக் வெல்கிறாரா? இல்லையா? என்பதுதான் கதை.
கதையை படித்த மாத்திரத்தில் இது லாஜிக் இல்லாத காமெடி மேஜிக் படம் என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள். ஆரம்பக் காட்சிகளில் கல்லூரி மாணவராய் துருவ் என்கிற வடஇந்திய ஆள் ஒருவர் லிப் சிங்கும், பாடிலேன்குவேஜ் சிங்கும் இல்லாமல் ஒரு பணக்கார பெண்ணை காதலிக்கிறார். பின்பு தான் ஏழை என்று உண்மையைச் சொல்லுகிறார். காதல் பிரிகிறது. பின்பு கூடுகிறார்கள். நண்பர்கள் பாட்டு பாடுகிறார்கள் என அசமந்தமாய் போய்க் கொண்டிருந்த படம், அந்த கெமிக்கல் கையில் பட்டு, கையில்லாமல் கோகுல் மாறியவுடன் அட என்று சுவாரஸ்யமாகிறது. அதன் பிறகு அந்த மாய லிக்வியூட்டை உடலில் ஸ்ப்ரே ப்ண்ணிக்கொண்டு மாயாஜாலமாய் ஊர் ஊராய் அலைய, சுவாரஸ்யம் இன்னும் ஏறுகிறது. சரி ஏதோ செய்யப் போகிறார்கள் என்று நினைத்த போது காமெடி விவேக் டீம் வந்து இவர்களை சேஸ் செய்ய, இன்னொரு பக்கம் ஒரு ரவுடி டீம் இவர்களை சேஸ் செய்ய, என்று பரபர காமெடி சேஸிங்கின் ஓட, படம் சுபமடைகிறது.
விவேக் அண்ட் கோ வந்த பிறகுதான் படமே நிமிர்ந்து உட்காருகிறது. குட்டிக் குட்டியாய் அபவ் ஆவரேஜ் பாக்யராஜ் தன ஐடியாக்களுடன் விவேக் ஒவ்வொரு இடத்திலும் துப்பறிவது சுவாரஸ்யம். பல இடங்களில் படு காமெடியாகவே போகிறது. நடுநடுவே காதல், பாடல் காட்சிகள் வந்து தொல்லை கொடுப்பதை தவிர்த்திருக்கலாம். வண்டி முழுவதும் ஸ்ப்ரேவை அடித்துவிட, கண்ணுக்கு தெரியாத வண்டியை தேட விவேக் அண்ட் கோ எடுக்கும் நடவடிக்கைக்கு யாரும் சிரிக்காமல் இருக்க முடியாது.
ஒளிப்பதிவு சி.ஹெச்.ராஜ்குமார். ஸ்பெஷல் எபக்டுகளில் கொஞ்சம் ஓகே.. மற்றபடி நத்திங் ஸ்பெஷல். பாடல்கள், பின்னணிசை எல்லாம் பற்றி பேசவே தேவையில்லை. டெக்னிக்கலி வெரி புவர் எக்ஸிக்யூஷன்.
எழுதி இயக்கியவர் சீனிவாசன் சுந்தர். ஒட்டாத காதல், அவர்களுக்கான பணத்தேவை, செண்டிமெண்ட் என்று தேவையில்லாத, டெம்ப்ளேட்டான காட்சிகளில் கவனம் செலுத்தியதற்கு, பேண்டஸியான கதைக்களன் கிடைத்திருக்க, அடித்து தூள் கிளப்பியிருக்க வேண்டியதை கவெறும் காமெடி தொகுப்பாய் அமைத்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். நாடகத்தனமான டயலாக்குகள், ஷாட்கள் என்று கொஞ்சம் ஓல்ட் ஸ்கூல் மேக்கிங்காகவே இருக்கிறது. இன்னும் கொஞ்சம் காஸ்டிங், மேக்கிங், ஸ்கிரிப்டில் கவனம் செலுத்தியிருந்தால் நல்ல பேண்டஸி காமெடிப் படமாய் வந்திருக்கும் இந்த பத்தாயிரம் கோடி.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Comments
Laddu thinga aasiya ezuthaliya.
BR
Christo