இந்திரவிழா – திரைவிமர்ச்னம்
கமல், ரஜினி, அஜித், விஜய் ஆகியோரை நம்பி படமெடுக்கலாம் ஒப்பனிங் நிச்சயம் அதே போல ஒரு ஹீரோயினையும் நம்பி படமெடுக்க முடியுமா என்று கேட்டால் அதுக்கு பதில் நமிதா என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் கமலா தியேட்டரில் இருந்த 300 பேர் நமிதா ஒருவருக்காகத்தான் வந்திருந்தார்கள். ஒரே விசில் தான். டெமிமூர், மைக்கேல் டக்ளஸ் நடித்து மிகப்பெரிய ஹிட்டான “Disclosure” என்கிற படத்தை ஹிந்தியில் 2004ல் “Aitraaz” என்று எடுத்தார்கள். அதைதான் இப்போது தமிழ் படுத்தியிருக்கிறார்கள். படத்தின் முக்கிய மான லைனே.. ஒரு பெண், தன்னை கற்பழிக்க முயன்றதாக வழக்கு தொடரும் ஹீரோ. என்பதுதான். டெமிமூருக்கு ஈக்குவலாய் நமிதாவை தவிர வேறு யாரையும் நினைக்கு வ்ரமாட்டேன் என்கிறது. சரியான செலக்ஷன். படம் முழுக்க நினைந்தபடியே வந்து நம்மை சூடாக்குகிறார். படத்தில் அவரது ஒவ்வொரு பாகமும் நடித்து கொட்டுகிறது. ம்ஹும்… இவரை தவிர இன்னொரு சரியான செலக்ஷன் ஸ்ரீகாந்த. . அவர் என்ன செய்வார் அவருக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். நாசர் கோடீஸ்வர நமிதா புருஷனாய் வருகிறார். சில இடங்களில் ஓவராய் இருந்தால...