Posts

Showing posts with the label தேர்தல்

கொத்து பரோட்டா -09/05/16

Image
இசை என்பதற்கான விருது என்பது பாடலுக்கு தனியாக, பின்னணியிசைக்கு தனியாய் கொடுக்கக் கூடாது என்று சொல்லி இளையராஜா தேசிய  விருதை வாங்க மறுத்திருக்கிறார். அதற்காக கங்கைஅமரனின் பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும், என்னை போன்ற இளையராஜா ஃபேன்களுக்கு மகிழ்ச்சியே.. அந்த விருதுக்கான எந்த ஒரு தகுதியும் இல்லாத அப்படத்திற்கு விருதை கொடுப்பதும் அதை வாங்குவதும் மகா கேவலம். எனவே நாக்கு சால சந்தோஷம். @@@@@@@@@@@@@@@@@@@@@

காங்- திமுக கூட்டணி வெற்றி பெற்றது எப்படி.?

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெற்றிருப்பது பல பேருக்கு அதிர்ச்சியையும்,ஆச்சர்யத்தையும் அளித்துள்ளது. முக்கியமாய் திமுக நிச்சயமாய் பத்து சீட்டுகளுக்கு மேல வரவே வராது,  என்ற கிளி ஜோசிய ஹோஷ்யங்கள்  சொன்னவர்களின் வாயை அடைத்துவிட்டது தேர்தல் முடிவுகள். இப்படி மக்கள் முடிவு எடுத்தற்கான காரணங்கள் என்னவாய் இருக்கும்? பொதுவாய் பார்த்தால் கடந்த ஐந்து ஆண்டுகால ஐக்கிய முண்ணனி  ஆட்சியை பற்றி பெரிய குறை சொல்லும் அளவிற்கான குற்றச்சாட்டுகள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் . பெட்ரோல், விலைவாசி, ரிஷச்ன் என்று பல குற்றச்சாட்டுகளை எதிர்கட்சி அரசியல்வாதிகள், சொல்லியிருந்தாலும் மக்களை பொறுத்தவரை பெரிதாய்  அவர்களின் குற்றசாட்டுகள் எடுபடவில்லை என்பதே உண்மை. அது மட்டுமில்லாமல் தற்போதைய ரிசெஷன் நேரத்தில் மீண்டும் ஒரு தொங்கு பாராளுமன்றத்தை கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தை கேள்விக்குறி ஆக்க வேண்டாம் என்கிற மக்களின் எண்ணமும் காரணமாய் இருக்கலாம். இதே நிலைதான் தமிழகத்திலும்.  திமுக ஆட்சியின் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் பெரிய எதிர்ப்பு அலையோ, அல்லது குற்றச்சாட்டோ இல்லை என...