Posts

Showing posts with the label மனுஷ்யபுத்ரன்

கொத்து பரோட்டா – 15/08/11

Image
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். வெட்டுப்புலி நாவல் விருது பெற்றதையொட்டி, மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர் பாரதி மணி, முனைவர் குருநாதன் அவர்களுடன் என்னையும் மேடையேற்றி பேச சொல்லியிருந்தார்கள். நன்றி வேடியப்பன். சென்ற வருடம் வரை  இவர்களை பேசுவதை பார்வையாளர் வரிசையில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தவன். இன்று அவர்களுடன் மேடையில் என்பது உங்களால் தான் வந்தது. என் உயர்வுக்கு துணையாய் உள்ள அத்துனை நல் இதயங்களுக்கும் என் இதய்ம் கனிந்த நன்றிகள். மனுஷ்யபுத்திரனின் பேச்சு மிக சுவாரஸ்யமாய் இருந்தது. முக்கியமாய் பெரிய வெகு ஜன இதழ்களில் எழுதாமல், புத்தகத்தைப் பற்றி எந்தவிதமான விளம்பரமும் இல்லாமல், சுய பப்ளிசிட்டியில்லாமல் ஒரு நாவல் இரண்டாவது பதிப்பு வந்திருப்பது தமிழ்மகனின் எழுத்துக்கு கிடைத்த வெற்றி என்றார்.(உள்குத்து ஏதாவது இருக்குதோ?). நிச்சயமாய் படித்தவர்களுக்கு தெரியும். இம்மாதிரியான நாவல் ஆங்கிலத்தில் வந்திருந்தால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி பெஸ்ட் செல்லர் ஆகியிருக்கும். தமிழ்மகனுக்கும், மனுஷ்யபுத்திரனுக்கும் நல்ல வருமானம் கிடைத்திருக்கும். தமிழில் எழுதியதால் இப்போதுதான்...