Thottal Thodarum

Dec 31, 2011

மகான் கணக்கு

Mahaan Kanakku 2524
இன்றைய ப்ளாஸ்டிக் உலகில் க்ரெடிட் கார்டு, டெபிட் கார்டு, பர்சனல் லோன் போன்றவைகளிலிருந்து தப்பித்தோ, அல்லது அதில் மூழ்கி போய் எழுந்திருக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டோ இருப்பவர்களை தவிர்க்கவே முடியாது. தானா வர ஸ்ரீதேவிய எவனாவது வேணாம்னு சொல்வானான்னு வாங்கிட்டு பின்னாடி அதுவே மூதேவியாகிப் போன நிஜங்கள் நிறைய. இப்படம் அதைத்தான் சொல்கிறது.

Dec 30, 2011

Don-2

don2
சாதாரணமாகவே இரண்டாவது பாகம் பெரும்பாலும் சொதப்பும். அது ஆங்கில படங்களுக்கு மட்டுமலல், இந்திய சினிமாக்களுக்கும் பொருந்தும் என்பதை இந்தப் படம் நிருபித்திருக்கிறது.  ஷாருக், ப்ரியங்கா சோப்ரா, லாராதத்தா, குனால் கபூர், போமன் இரானி, ஓம்பூரி, பர்ஹான் அக்தர், மற்றும் பல ஸ்லீக் டெக்னீஷியன்கள் லிஸ்ட் ஏற்படுத்திய பரபரப்பு கொஞ்ச நஞ்சமல்ல. அதுவும் ஷாருக்கின் ரா 1 படு தோல்விக்கு பிறகு இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகம்.

Dec 27, 2011

Rajanna

rajanna2நாகார்ஜுனாவின் நடிப்பில், தயாரிப்பில் வெளிவந்திருக்கும் ப்ரீயட் படம்.  வெள்ளையனிடமிருந்து இந்தியா சுதந்திரம் வாங்கி விட்டாலும், நிஜாம் மன்னர்களிடமிருந்தும், ஜமீந்தார்களிடமிருந்து விடுதலை கிடைக்காமல்  போராடிய மக்களின் கதை. அவர்களுக்காக போராடிய ராஜண்ணாவையும், அவரின் மகள் மல்லம்மாவை சுற்றியும் பின்னப்பட்ட கதை.

Dec 25, 2011

கொத்து பரோட்டா –26/12/11


மேலே நீங்கள் காணும் படங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்தது அல்ல. நேற்று மாலை சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோடு சப்வேயில் நடந்த ஒரு விபத்தின் போது எடுத்தபடம். சப்வேயின் மேலேயிருந்து விழுந்து இறந்து போய்விட்டதாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.விபத்து நடந்து கிட்டத்தட்டஅரை மணி நேரத்திற்கு மேல் ஆகியிருக்கும். ஆனால் விசாரணைக்கு ஒரு பெரிய போலீஸ் படையே அங்கே வந்திருந்தும். ஒரு துணியை வைத்து போர்த்தி அந்த உடலை மறைத்திருக்கலாம். ஆனால் அதை செய்யாமல் ரோடெங்கும் வழிந்தோடும் ரத்தத்தைப் பார்த்து குழந்தையுடன் வந்த ஒர் நடுத்தர வயது பெண் அதிர்ந்து போய் கிட்டத்தட்ட மயங்கிப் போகும் நிலைக்கு வந்து குடுகுடுவென ஓடிப் போய் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். போலீஸார் கொஞ்சம் கவனிக்கலாமே..?
#################################

Dec 23, 2011

ஆண்பால் பெண்பால் - தமிழ்மகன்.


வெட்டுப்புலி என்கிற சூப்பர்ஹிட் நாவலை எழுதிய தமிழ்மகனின் புதிய நாவல். வெளியீட்டன்று போக முடியவில்லை. அதனால் அடுத்த நாளே புத்தகத்தை வாங்கி விட்டேன். சென்ற நாவலைப் போன்றே வித்யாசமான நாவல். கதை கருவிலும், சொல்லப்பட்ட விதத்திலும்.பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும், ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சமர்ப்பித்திருக்கிறார் ஆசிரியர் தமிழ்மகன்.

Dec 22, 2011

சாப்பாட்டுக்கடை – சேலம் மங்களம் மிலிட்டரி ஓட்டல்

Photo0413 பெயரைப் பார்த்தாலே எவ்வளவு காலமாய் ஓட்டல் நடத்துகிறவர்கள் என்று தெரிந்துவிடும். ஏனென்றால் இப்போதெல்லாம் மிலிட்டரி ஓட்டல் என்று யாரும் பெயர் வைப்பதேயில்லை. வழக்கொழிந்து போய்விட்டது. அப்படியிருக்க, சேலத்தில் 65 ஆண்டுகளுக்கு மேலாக, சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த ஓட்டல், சென்னையில் காலடி எடுத்து வைத்திருக்கிறது.

Dec 21, 2011

Mission Impossible -4

TomCruiseMissionImpossibleGhostProtocolPT_event_main
மிஷன் இம்பாஸிபிள் முதல் இரண்டு பாகங்களுக்கு நான் அடிமை. மூன்றாவது பாகம் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் பார்க்காமல் இருக்க முடியவில்லை என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். அதற்கேற்றார் போல படத்தின் டிரைலர் வேறு என்னை கவர்ந்திழுக்க இதோ மிஷன் இம்பாசிபிள்.

Dec 20, 2011

நான் – ஷர்மி - வைரம் -12

12 ஷர்மி
என் வாழ்க்கை தலைகீழாய் மாறிப் போனதற்கு ஒரு விதத்தில் ஜெயலலிதாவும் காரணம். அதற்கு முன் அர்ஜுனைப் பற்றி சொல்லியாக வேண்டும்.அர்ஜுனை எவ்வளவுதான் துரத்தி விட்டாலும் எப்படியாவது நானிருக்கும் இடங்களுக்கெல்லாம் வந்து நின்று விடுவான். எப்போதெல்லாம் என் முதுகில் உறுத்துகிறதோ அங்கேயெல்லாம் அர்ஜுன் இருப்பான்.

Dec 19, 2011

கொத்து பரோட்டா –19/12/11


ஆதி+பரிசல்+யுடான்ஸ் பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்கள், இயக்குனர்கள் பத்ரி, நவீன், சிபி ஆகியோர் தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்தார்கள். பத்ரி பதிவர்களிடையே இருக்கும் திறமைகளை கண்டு ரசிப்பதாகவும், அவர்களது திறமைகளுக்கு இன்றைய சினிமா, மற்றும் சீரியல் உலகில் வாய்ப்பிருக்கிறது என்றார். நவீன் தானும் ஒரு எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுவதாகவும், தன்னுடய அடுத்த படத்தில் பதிவுலகில் உள்ள ஆறு கவிஞர்களை பாடலாசிரியராக உயர்த்தப் போவதாய் அறிவித்தார். ரமேஷ்வைத்யா இன்னும் கொஞ்சம் பேச மாட்டாரா என்ற அளவிற்கு சிற்றுரை ஆற்றினார். அண்ணன் சிறுகதைகளைப் பற்றிய விமர்சனஙக்ளை ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாய் நச்சென அளித்தார். நிகழ்ச்சியை தொகுத்தளித்த கார்க்கிக்கு இது முதல் மேடை. அந்தவகையில் சிறப்பாகவே செய்தார். முதல் பரிசு பெற்ற ஆர்.வி.எஸ் தான் மைக் நெளிய பேசியதாய் அவரே தன் பேஸ்புக் பக்கத்தில் சொல்லியிருக்கிறார். நன்றி சொன்ன பரிசல், ஆதி, ஆகியோரும் தங்கள் பங்குக்கு மாற்றி, மாற்றி நன்றி தெரிவித்தார்கள். பரிசல் தன் புத்தகத்தைப் பற்றி பேசிய சில விஷயங்களை திருத்த வந்து பேசினார் கவிஞர், எழுத்தாளர் ராஜ சுந்தர்ராஜன். அவர் பேசியதற்கான மாற்றுக் கருத்தும் ஃபேஸ்புக்கில் ஓடிக் கொண்டிருக்கிறது  இடம் அளித்து, வெற்றியாளர்களுக்கு தன் பங்காய் சிறப்பு பரிசளித்து வாழ்த்திய டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனுக்கும் நன்றி. இதில் வழக்கமாய் நிறைய பேசும் நான் தான் ரெண்டு வரியில் வரவேற்று சொதப்பினேன் என்று நினைக்கிறேன். சிலர் அதை வரவேற்று கை தட்டியதிலிருந்து என் பேச்சிலிருந்து அவர்களுக்கு கிடைத்த சந்தோஷம் தெரிந்தது. மற்றபடி விழா இனிதே நடைபெற்றது. வந்திருந்து நடத்திக் கொடுத்த நண்பர்கள், வெற்றியாளர்கள் அனைவருக்கும் யுடான்ஸின் சார்பாக எங்கள் நன்றிகள்.
##########################

Dec 17, 2011

பதிவர்களே… நண்பர்களே.. வாசகர்களே.. அனைவரும் வருக..

பதிவர்களால் பதிவர்களுக்காக நடத்தப்படும் திரட்டியான “யுடான்ஸ்” நடத்தும் முதல் விழா. ஆதி+பரிசல்+யுடான்ஸ் இணைந்து நடத்தும் விழா. ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லேயே நம்ம திரட்டிக்கு நீங்க கொடுத்த ஆதரவு கொஞ்ச நஞ்சமல்ல. அபாரமான ஆதரவு. மூன்று மாதங்களில் 50 ஆயிரம் அலெக்ஸா ரேங்கிங்கிற்கு வந்துள்ளது எல்லாம் உங்களால் தான். அதே போல சிறுகதைப் போட்டிக்கு நீங்கள் கொடுத்த ஆதரவையும், அங்கீகாரத்தையும் மறக்கவே முடியாது. இவையெல்லாம் வெற்றிகரமாய் நடந்தேறியது உங்களால் தான். அதற்கு யுடான்ஸ் சார்பாக என் நன்றிகள் பல.

Dec 16, 2011

சாப்பாட்டுக்கடை –பாரதி மெஸ்

Photo0420 Photo0416
திருவல்லிக்கேணி என்றதும் அங்கிருக்கும் மேன்ஷன்களும், பெரியதும், சின்னதுமாய் இருக்கும் ஹோட்டல்களையும், மெஸ்களையும் யாரும் மறக்க முடியாது. எந்த ஊரிலிருந்து வந்தாலும் பெரும்பலான இளைஞர்களின் முதல் அடைக்கலம் திருவல்லிக்கேணியாகத்தான் இருக்கும். நண்பர், பத்திரிக்கையாளர் பாலாவை சந்திக்க மதியம் திருவல்லிக்கேணிக்கு போயிருந்தேன். நல்ல பசி, ”தலைவரே நல்ல மெஸ்சா சொல்லுங்க” என்றேன்.

Dec 12, 2011

படித்து கிழித்தவை 2011

சென்ற வருடம் டிசம்பரில் ஆரம்பித்து இந்த டிசம்பர் வரை ஏகப்பட்ட புத்தகங்கள் வாங்கியாகிவிட்டது. அது மட்டுமில்லாமல், புத்தகமெல்லாம் வெளியிட்டிருப்பதால் நம்மையும் லைட்டாக இலக்கியவாதிகள் எல்லாரும் தங்கள் புத்தக வெளியீட்டு விழாவுக்கெல்லாம் அழைப்பதாலும், சில சமயம் நானாகவே ஆஜராகி நானும் ஆட்டத்தில் இருக்கிறேன் என்று நிருபிக்க வேண்டிய கட்டாயத்தால் இம்மாதிரி கூட்டங்களுக்கு போய் வரும் போது வாங்கிய புத்தகங்கள். நம்மை மதித்து படிக்க சொல்லி கொடுத்த புத்தகங்கள், அப்புறம் கிழக்கு வருஷம் பூரா போட்ட கழிவு விலை புத்தகங்கள் என்று ஏகப்பட்டது சேர்ந்துவிட்டது. அவைகளில் எத்தனை புத்தகங்களை படித்திருக்கிறேன் என்று திரும்பிப் பார்க்க ஒரு வாய்ப்பாய் இந்த கட்டுரை அமையும் என்ற எண்ணத்தில்தான் எழுதப்படுகிறதே தவிர என்னை பெரிய படிப்பாளி என்று காட்டிக் கொள்ள விழைய அல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Dec 11, 2011

கொத்து பரோட்டா – 12/12/11

என்னுடய புதிய புத்தகமான “தெர்மக்கோல் தேவதைகள்” வெளியாக இருக்கிறது. இதற்கு முன் வெளியான எனது நான்கு புத்தகங்களுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவை இப்புத்தகத்திற்கு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது. புத்தக வெளியீடு குறித்தான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
###################################

25,000 + சர்வீஸ் டாக்ஸுக்கு விலை போகும் எதிர்கட்சி தலைவர்

நம் எதிர்கட்சி தலைவர் மானஸ்தர். வீரர். சூரர் என்றெல்லாம் எலக்‌ஷனினின் போது பேசினார்கள். அவர் சினிமாவில் மட்டுமே மாத்தி மாத்தி கைநீட்டி அறிக்கை விடத் தெரிந்தவர் என்று மீண்டும் மீண்டும் நிருபித்து வருகிறார். கொஞ்ச நாள் முன்னாடி நடந்த ஒரு சம்பவத்தை பற்றி இங்கே சொல்ல வேண்டும். நித்யானந்தாவின் லீலைகள் பிரபலமான பின் எல்லாம் அடங்கிவிட்டபின் இவர்களின் செய்திகளுக்கு ஏதாவது பரபரப்பூட்ட வேண்டும் என்று அச்சமயத்தில் நடிகை மாளவிகா அவரின் ஆஸரமத்துக்கு போனதை ஸ்ரோலில் போட்டு எட்டு மணி செய்திகளை பாருங்க.. பாருங்க என்று இம்சித்துக் கொண்டிருந்தார்கள். செய்திகளிலும் காட்டினார்கள். இது நடந்தவுடன் நித்யானந்தாவின் சீடர் அவரைப் பற்றி செய்திகளை போடக்கூடாது என்று கோர்ட் ஸ்டே வாங்கி வந்தாக சொல்லி, இனி போடக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். அதையும் மீறி இவர்கள் மறுநாளும் அதையே போட, நித்யானந்தாவின் சீடர்கள் அவரது சேனல் அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அவர்கள் ஆர்பாட்டம் செய்ததையும் இவர்கள் படம் பிடித்து செய்திகளில் போட்டார்கள். போலீஸ் பாதுகாப்பெல்லாம் போட்டு நடந்த விஷயங்கள் இவை.

Dec 10, 2011

Panja

panjaareview1கொம்மரம் புலி அடித்த அடியில் தெலுங்கு படவுலகமே ஆடிப் போயிருந்தாலும், பவர்ஸ்டார் பவன் கல்யாண் படம் என்றால் மீண்டும் ரசிகர்கள் முறுக்கேறி பார்க்க தயாராகிவிடுகிறார்கள் என்பதற்கு தியேட்டரில் இன்று பார்த்த கூட்டமே சாட்சி, சத்யம, கேஸினோ, எஸ்கேப், உட்லான்ஸ், மோடம், ஈகா என்று சுற்றிச் சுற்றி தியேட்டர்கள் இருந்தும் எல்லாமே புல். என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். விஷ்ணுவர்தன், யுவன் ஷங்கர் என்ற கூட்டணி வேறு கேட்கவா வேண்டும். எக்ஸ்பட்டேஷன் சும்மா அதிரிந்தி.

Dec 9, 2011

ஒஸ்தி

osthe-complete-gallery-148 குருவி, தெலுங்கு பங்காரத்துக்கு முன் வரை அடித்து தூள் பரத்திக் கொண்டிருந்த இயக்குனர் தரணி. விண்ணைத்தாண்டி வருவாயாவுக்கு பிறகு இவரை பிடிக்காதவர்களுக்கும் பிடித்துப் போன நடிகரான சிம்பு. ஏற்கனவே இந்தியாவெங்கும் சூப்பர் ஹிட்டான “தபாங்”கின் ரீமேக் என்பது போன்ற விஷயங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்க, படத்தின் டெபிஸிட் காரணமாய் நேற்று காலை வெளியாகாமல் மதியத்திற்கு மேல் ஒரு வழியாய் வெளியாகியது.

Dec 7, 2011

தமிழ் சினிமா ரிப்போர்ட் – நவம்பர் 2011


சென்ற மாதம் தீபாவளிக்கு வெளியான ஏழாம் அறிவு, வேலாயுதம், ரா. ஒன் என்று எல்லா படங்களும் ஆளுக்கு ஆள் சூப்பர் ஹிட என்று பரபரத்துக் கொண்டிருக்க, நிஜத்தில் தமிழ் படங்கள் ரெண்டுமே வெறும் ஹிட் வகையில் மட்டுமே சேரும். ரா.ஒன் நூறு கோடி பேண்ட்வேகனில் ஏறினாலும், தயாரிப்பு செலவை கணக்கில் கொண்டால் ஒரு தோல்விப் படம் என்று தான் சொல்ல வேண்டும்.

Dec 4, 2011

கொத்து பரோட்டா – 05/12/11

compare sri
கடந்த சில வருடங்களாய் எந்த சேனலைத் திறந்தாலும் ஏதாவது ஒரு டேலண்ட் ஹண்ட் நிகழ்ச்சி பெரும்பாலும், பாட்டு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிறது. சூப்பர் சிங்கர், டான்ஸர், போன்ற நிகழ்ச்சிகள் எடுபட்ட அளவிற்கு மற்ற டேலண்ட் ஹண்ட் நிகழ்ச்சிகள் எடுபடவில்லையென்றே சொல்ல வேண்டும். சங்கரா சேனல் ஒரு வித்யாசமான டேலண்ட் ஹண்ட் நிகழ்ச்சியை துவங்கியிருக்கிறது. நிகழ்ச்சி பெரும்பாலும் எல்லோராலும் வரவேற்கப்படும் பாட்டு சம்பந்தப்பட்டதாய் இருந்தாலும் அதில் ஆன்மீக சுவாரஸ்யமாய் பஜன்களை வைத்து நடத்தி வருகிறார்கள். பஜன் சாம்ராட் என்கிற இந்த நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வை பார்த்தேன். நன்றாகவேயிருந்தது.  பஜனை பாடல்கள் என்பது பக்த்தியை வெளிப்படுத்த உதவும் ஆன்மீக வழி. அதிலும் சில பல சூட்சமங்களும்,சுவாரஸ்யங்களும், இசையறிவும், நெளிவு சுளிவுகளும் இருக்கத்தான் செய்கிறது. செளம்யா, குசுமா ஆகியோர் நடுவர்களாய் இருக்க, வெற்றி பெரும் குழுவினருக்கு ”பஜன் சாம்ராட்” பட்டமும், பத்து லட்சம் ரூபாய் பரிசும் அளிக்கிறார். பஜன் பாடல்களுக்காக இவ்வளவு பெரிய கேம்பெயின், கொஞ்சம் ஆச்சர்யமாக இருக்கிறது.

Dec 3, 2011

Bejawada

bezawada_movie_new_stills_pics100 (1)
ராம் கோபால் வர்மா தயாரிப்பு. நாக சைதன்யாவின் ஆக்‌ஷன் அவதாரம். நம்ம அமலா பாலின் தெலுங்கு எண்ட்ரி. என்று பில்டப் ஸ்டாராங்காய் இருக்க, இளம்ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த படம். ஆனால் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

Dec 2, 2011

போராளி

M Sasikumar Photos @ Porali Tamil Movie சமுத்திரகனி, சசிகுமார், சுவாதி, சுந்தர்சி.பாபு, எஸ்.ஆர்.கதிர் என்று ஒரு சக்ஸஸ்புல் டீம். பெயர் வேறு தமிழ் சினிமாவின் தற்போதைய ட்ரெண்ட்படி தமிழுணர்வோடு வைக்கப்பட்டிருப்பதால் நிச்சயம் தமிழர்கள் எல்லோரும் கண்டிப்பாக பார்த்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கும் படம். கனி-சசியின் கூட்டணி நம்மை திருப்திபடுத்தியிருக்கிறதா? என்று பார்ப்போம்

Dec 1, 2011

சிறு முதலீட்டு படங்களுக்கு தியேட்டர் கொடுப்பதில்லையா?


கடந்த ரெண்டு நாட்களாய் இணையத்தில் தியேட்டர் கிடைக்காததால் சிறு படங்களை வெளியிட முடியவில்லை என்றும், சமீபத்தில் வெளியான சிறு முதலீட்டு படம் ஒன்றை, பெரிய விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் திரையிட மறுப்பதாகவும், சிலர் வேண்டுமென்றே தடையேற்படுத்த நினைப்பதாகவும் ஆளாளுக்கு படத்தைப் பற்றியோ, இந்த தொழிலைப் பற்றியோ தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்க, படத்தின் இயக்குனர் குழுவினர், யூடூயூப் விடியோவில் அழுதெல்லாம் படத்திற்கு கும்பல்  சேர்க்க முயற்சித்தார்கள். பட் நோ யூஸ்.