Rajanna

rajanna2நாகார்ஜுனாவின் நடிப்பில், தயாரிப்பில் வெளிவந்திருக்கும் ப்ரீயட் படம்.  வெள்ளையனிடமிருந்து இந்தியா சுதந்திரம் வாங்கி விட்டாலும், நிஜாம் மன்னர்களிடமிருந்தும், ஜமீந்தார்களிடமிருந்து விடுதலை கிடைக்காமல்  போராடிய மக்களின் கதை. அவர்களுக்காக போராடிய ராஜண்ணாவையும், அவரின் மகள் மல்லம்மாவை சுற்றியும் பின்னப்பட்ட கதை.


மல்லம்மா ஒரு அநாதை. ராஜண்ணாவின் மகள். ராஜண்ணா அந்த மண்ணின் சுதந்திரத்துக்காக போராடி உயிரைத் துறந்த மாவீரன். மல்லம்மாவின் அம்மாவை வில்லன்கள் கொன்ற பிறகு அவளை எடுத்து வளர்க்கிறார் ஒரு பெரியவர். இயல்பிலேயே அபாரமான இசை ஞானமுள்ளவளாக வளர்கிறாள். ஆனால் அவள் பாடக்கூடாதென அவ்வூர் துரைசாணியால் தடை போடப் பட்டிருக்க, அதை மீறி அவள் பாடுகிறாள். எனவே மல்லம்மாவை உயிரோடு வீட்டில் வைத்து கொளுத்துகிறாள் துரைசாணி. மல்லம்மாவின் பாட்டு வாத்தியார் அவளை காப்பாற்றுகிறார்.  நிஜாம் மன்னரோ, அல்லது ஜமீந்தார்களோ அவள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்க, ஊர் மக்கள் அவள் மீது நடவடிக்கை எடுக்க, பண்டித ஜவர்ஹர்லால் நேருவினால் மட்டுமே முடியும் என்று சொல்ல, ஊர் மக்கள் தங்களால் இயன்ற பண உதவி செய்ய, அச்சிறுபெண் நடந்தே பல ப்ரச்சனைகளை ஆபத்துகளைத் தாண்டி எப்படி சென்றடைகிறாள். எவ்வாறு நேருவை சந்திக்கிறாள்? அவளின் தந்தையைப் பற்றிய விஷயத்தை எப்படி அறிந்து அவரைப் போலவே தன் மண்ணுக்கு நிஜாம்களிடமிருந்து சுதந்திரம் பெற்று தருகிறாள்? என்பதுதான் கதை.
rajanna800 என்னடா இது படம் ஆரம்பித்து முக்கால் மணி நேரம் ஆகியும் மல்லம்மா மட்டுமே வந்து கொண்டிருக்கிறாளே என்ற யோசனையே வரவில்லை. அப்படியொரு ரிவிட்டிங் பெர்பாமென்ஸ். என்னா நடிப்புடா சாமி.. தன் போல பாட்டுப் பாடிக் கொண்டிருக்கும் போது முகத்தில் தெரியும் இன்னொசென்ஸாகட்டும், தாத்தாவை இழந்து, தன் மண்ணைப் பிரிந்து போகும் போது, ஒரு கைப்பிடி மண்ணை முடிந்து கொண்டு அழுது கொண்டே போகுமிடமாகட்டும், பணத்தை திருடிக் கொண்டு ஓடும் திருடனை பாய்ந்து பிடித்திழுத்து பணத்தை பற்றி கவலைப் படாமல், தன் மண்ணை மட்டுமே எடுத்து அழுமிடமாகட்டும் வாவ்.. கண்களில் நீரை வரவழைத்து விட்டாள் ஆனி.

நாகார்ஜுனா தான் ராஜண்ணா.. இம்மாதிரியான படங்களுக்கு இவரைப் போன்ற பெரிய நடிகர்கள் மக்களை தியேட்டருக்குள் அழைத்து வர மிகப் பெரிய பலம். அதனை உணர்ந்து இந்த கேரக்டரில் நடித்தும், தயாரித்திருக்கும் நாகார்ஜுனாவை பாராட்ட வேண்டும். நடிப்பென்று பார்த்தால் பெரிதாய் ஆஹா ஹோஹோ என்று சொல்ல முடியாவிட்டாலும், இம்ரசிவான நடிப்பு. அதுவும் சண்டைக் காட்சிகளில் நல்ல உழைப்பு தெரிகிறது. அதை விட ராஜண்ணா தன் ஊரை வெகுண்டெழுந்து நிஜாம்களுக்கு எதிராக போராட பாடும் இடம். நிஜமாகவே உணர்ச்சிகரமாய் இருக்கிறது. நான்கைந்து பேர் இருநூறு முன்னூறு பேரை வெட்டிச் சாய்த்து முடிந்த பின் மடியும் இடம் எல்லாம் செம டெம்ப்ளேட். நாகார்ஜுனாவின் மனைவியாக சிநேகா, மிக சின்ன கேமியோ ரோல். அதைத் தவிர சொல்ல வேறேதுமில்லை. நிஜாம் மன்னரின் ஆட்கள், பெண்களின் முலைகளை பிடித்துப் பார்த்து அதன் அழகுக்கு ஏற்ப வரி வசூல் செய்யுமிடம் நிஜமாகவே கொதிப்பை ஏற்படுத்துகிறது. அந்த இடத்தில் ராஜண்ணா வந்து அவனின் கையை வெட்டி எறியும் போது எம்.ஜி.ஆர் சினிமாவாக தெரிந்தாலும் அப்படி யாராவது வரமாட்டார்களா? என்று யோசிக்க வைத்த இடம்.  ஆனால் அதே நேரத்தில் கை துண்டாகி அடுத்த அரை மணி நேரத்தில் தோளில் துண்டைப் போட்டுக் கொண்டு இன்னும் சில வில்லன்களோடு, குதிரையில் வருவதெல்லாம் ப்ரீயட் படமானாலும் தெலுங்கு படங்களில் மட்டுமே சாத்தியம்.
rajannamoviereview ஷியாம் கே.நாயுடுவின் ஒளிப்பதிவு நேர்த்தியாய் இருந்தது. முக்கியமாய் எஸ்.எஸ்.ராஜமெளலி அமைத்துக் கொடுத்த சண்டைக்காட்சிகளில். அத்தனையும் மீண்டும் மகதீராவை பார்த்த இம்பேக்ட். ஆனால் ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் பாராட்டப்பட வேண்டிய இடங்கள் அந்தக் காட்சிகளில் தான். படத்தின் முக்கிய தூண் என்று சொல்லப் போனால் எம்.எம்.கீரவாணியின் இசை என்றே சொல்ல வேண்டும். ராஜண்ணா பாடும் பாடலும், அக்குழந்தை  பாடும் பாடலும் நம்மை உருக்கிவிடுகிறது. பின்னணியிசையிலும் நம்மை கட்டிப் போட்டு விடுகிறார்.

எழுதி இயக்கியவர் விஜயேந்திர பிரசாத். எஸ்.எஸ்.ராஜமெளலியின் பல படங்களுக்கு கதை எழுதியவர்.  அவரது இரண்டாவது படம். என்னைப் போன்ற தெலுங்கானா வரலாறு தெரியாதவனையும் சிறுமி ஆனியின் நடிப்பின் மூலமும், அவளையும், அந்த மண்ணிற்காக அவள் நடந்தே டெல்லி வரை சென்றதையும், விறுவிறுப்பு குறையாமல் கொடுத்தவிதம் நன்று. நடுவே வரும் ராஜண்ணா டீம், அதன் வெள்ளைக்கார போராட்டம், அதன் பிறகு வரும் காதல் எல்லாம் கொஞ்சம் ஓட்டத்தை குறைக்கவே செய்கிறது. க்ளைமாக்ஸ் பாடல் காட்சியை பார்க்கும் போது இன்னும் சங்கராபரணம் க்ளைமாக்ஸை தாண்ட முடியவில்லை என்ற வருத்தம் ஏற்படுவதை தவிர்கக் முடியவில்லை.
Rajanna – இது ஒரு தெலுங்குணர்வு படம்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Comments

அன்பு கேபிளுக்கு,

உங்கள் நான் ஷர்மி வைரம் தொடரில் என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள்... ஆனால், விமர்சனம் போன்ற இடங்களில் முலைகள் போன்ற வார்த்தை பிரயோகத்தைத் தவிர்க்கலாம். மார்பகங்கள் என்று சொல்வது தன்மையாக இருக்கும் என்று எனக்குப் படுகிறது.

காரணம், பெண்களுக்கு இழைக்கப்படும் அவமானம் பற்றிச் சொல்லும்போது அந்த வார்த்தை கொஞ்சம் கடினமாகப் படுகிறது.

நன்றி
Jayaprakash said…
Vimarsanam arumai sir
உங்கள் விமர்சனம் படம் பார்க்கத் தூண்டுகிறது.
idhayampesukiren .blogspot .com
சூப்பர் விமர்சனம் கேபிள் அண்ணே. பகிர்தலுக்கு நன்றி.
Ravi said…
தெலுங்குப் படங்களுக்கு விமர்சனம் தமிழில் தேவையா சார்?

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

Box Office உண்மைகள்

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்